ஹைதராபாத், இந்தியா, June 8, 2015 /PRNewswire/ --
- தெலிங்கானா மாநிலத்தின் மாண்புமிகு நிதியமைச்சரான திரு. எட்டாலா ராஜேந்தர், UBM இந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ், ஹைதராபாத் ஜுவல்லர்ஸ் மேனுஃபாக்சரர்ஸ் அசோசியேஷனின் துணைத் தலைவர் திரு. சஞ்சய் குலாபானி, மற்றும் ஹைடெக் சிட்டி ஜுவல்லர்ஸ் மேனுஃபாக்சரர்ஸ் அசோசியேஷனின் தலைவர்
திரு. மஹேந்திர தயாள் ஆகியோர் ஹைதராபாத் ஜுவல்லரி, பேர்ல் மற்றும் ஜெம் கண்காட்சியின் 8வது பதிப்பைத்தொடங்கி வைத்தனர்.
- 150-க்கும் அதிகமான காட்சியாளர்கள் தனித்துவமான வைரம் மற்றும் தங்க நகைகளை HJF 2015-ல் காட்சிப்படுத்தினர்
UBM பிஎல்சி ஓர் அங்கமும், முன்னணி உலகளாவிய ஊடகத் தொழில் நிறுவனமுமான UBM இந்தியா நடத்தும் ஹைதராபாத் ஜுவல்லரி, பேர்ல் மற்றும் ஜெம் கண்காட்சி (HJF), ஹைடெக்ஸ் எக்ஸிபிஷன் சென்டரின் ஹால் எண் 1 மற்றும் 3-ல் இன்று தொடங்கியது. தெலிங்கானா மாநிலத்தின் மாண்புமிகு நிதியமைச்சரான திரு. எட்டாலா ராஜேந்தர், UBM இந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ் ஆகியோர், ஹைதராபாத் ஜுவல்லர்ஸ் மேனுஃபாக்சரர்ஸ் அசோசியேஷனின் துணைத் தலைவர் திரு. சஞ்சய் குலாபானி, மற்றும் ஹைடெக் சிட்டி ஜுவல்லர்ஸ் மேனுஃபாக்சரர்ஸ் அசோசியேஷனின் தலைவர்
திரு. மஹேந்திர தயாள் ஆகியோர் மற்றும் நகை வர்த்தகத் தொழில்துறையைச் சேர்ந்த பல பிரமுகர்களின் முன்னிலையில், ஹைதராபாத் ஜுவல்லரி, பேர்ல் மற்றும் ஜெம் கண்காட்சியின் 8வது பதிப்பைத் தொடங்கி வைத்தனர்.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150605/10124371-a )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150605/10124371-b )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150605/10124371-c )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
UBM இந்தியாவின் மூன்று நாள் HJF கண்காட்சியானது (ஜூன் 5 முதல்7 வரை), 150-க்கும் அதிகமான நகை உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வைரம் மற்றும் ஜெம்ஸ்டோன் விநியோகிப்பாளர்கள் மற்றும் வர்த்தகத்துறை மற்றும் அரசு அமைப்புகளிலிருந்து பிரதிநிதிகள் ஆகியோரின் பங்கேற்புடன், மிகப் பிரமாண்டமான ஜெம்ஸ் மற்றும் ஜுவல்லரி B2B கண்காட்சியாக அமைந்தது.
HJF 2015 இந்திய நகை உற்பத்தி சந்தையின் ஒரு நுழைவாயிலாகும், மற்றும் இது வாங்குவோருக்கும், விற்போருக்கும், தங்களை இணைத்துக் கொள்வதற்கு, வலையமைப்பை உருவாக்குவதற்கு, கருத்துக்களை பரிமாறுவதற்கு, வரவிருக்கும் போக்குகளைக் கண்டறிவதற்கு மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கான ஓர் இணையற்ற தளத்தை வழங்குகிறது. கண்காட்சியில், காட்சியாளர்கள் வைரங்கள், முத்துக்கள், ஜெம்ஸ்டோன்கள், கல்பதித்த நகைகள், குந்தன் மற்றும் நாகாஷ் நகைகளின் பாரம்பரியமான மற்றும் புராதன வகைகள் உள்ளிட்ட இணையற்ற தென்னிந்திய தங்க நகைகள் அடங்கிய ஏராளமான வகைகளில் பொருட்களைக் காட்சிப்படுத்துவார்கள். உற்பத்திச் செயல்முறையில் பயன்படுத்தப்படும் சமீபத்திய இயந்திங்கள் மற்றும் சாதனங்களுடன், இதர சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளும்கூட காட்சியில் இருந்தன.
HJF-ன் தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய, UBMஇந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது "இந்தியாவில் உள்ள மிகப் பெரிய தொழில் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நகை வர்த்தகர்களை இணைத்து, தொழில் உருவாக்கத்திற்கு உதவும் தளம் ஒன்றை வழங்குவது UBM இந்தியாவின் ஒரு தொடர் முயற்சியாக இருந்து வந்துள்ளது. பல் ஆண்டுகளாக இந்த ஹைதராபாத் ஜுவல்லரி, பேர்ல் மற்றும் ஜெம் கண்காட்சியானது, இம்மண்டலத்தில் தொழில்துறையில் வர்த்தகத்திற்கான ஒரு சீரிய முயற்சியாக ஆகியுள்ளது மற்றும் இப்பதிப்பு, நாடெங்கிலும் உள்ள சந்தைகளுக்கான தென்னிந்திய நுழைவாயிலாகவும் அமையும்."
இவ்வாண்டின் கண்காட்சியில் பங்கேற்கும் சில குறிப்பிடத்தக்க காட்சியாளர்கள் வருமாறு: ஜெய் குலாப் ஜுவல்லர்ஸ், க்ரிஸ், பிண்டி ஜுவல்லர்ஸ், சிந்தாமணி கோல்டு, ND டயமண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், தெர்மோ ஃபிஷர் சயன்டிஃபிக் இன்டியா பிரைவேட் லிமிடெட், லக்ஷ்மி டயமண்ட்ஸ், எமரால்ட் ஜுவல்லரி இன்டஸ்டரி இன்டியா லிமிடெட், ஃபிஷர் மெஷர்மென்ட் டெக்னாலஜீஸ், மீனாக்ஷி ஜுவல்லர்ஸ், ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் இத்தொழில்துறையின் பல புகழ் பெற்ற நிறுவனங்களும் இதில் அடங்கும்.
ஹைதராபாத் ஜுவல்லரி, பேர்ல் மற்றும் ஜெம் கண்காட்சி 2015-க்கு தொன்னிந்தியா முழுவதிலுமிருந்து பின்வருபவை உள்ளிட்ட முக்கிய நகைக் கூட்டமைப்புகள் ஆதரவளித்துள்ளன: AP கோல்டு, சில்வர் & டயமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேஷன், செகந்திராபாத் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன், நரசராவ்பெட் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன், ஈஸ்ட் கோதாவரி ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் & வெஸ்ட் கோதாவரி ஜுவல்லர்ஸ் அசோசியேஷன், குண்டூர் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன். இக்கண்காட்சியில், வாரங்கல், விஜயவாடா, விசாகப்பட்டினம், நெல்லூர், நிஜாமாபாத் மற்றும் தென்னிந்தியாவின் இதர பகுதிகளிலிருந்தும் பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.
உலகம் முழுவதும் இத்தகைய புகழ்பெற்ற நகைக் கண்காட்சிகளை நடத்துவதன் மூலம், இதுவரை, ஏறத்தாழ முப்பது ஆண்டு காலமாக, நகைத் தொழில்துறையுடன் UBM ஓர் ஒருங்கிணைத்த பகுதியாக இருந்து வந்துள்ளது. HJF, UBM இந்தியாவால் ஆண்டு முழுவதும் நடத்தப்படுகின்ற ஐந்து நகர (கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், டெல்லி மற்றும் குஜராத்) நகைக் கண்காட்சிகளில் ஒன்றாகும். மேலும் தகவல்களுக்கும், பதிவு செய்வதற்கும், தயவுசெய்து அணுகவும் http://www.jewelleryfair.in.
UBM இந்தியாபற்றி
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் http://www.ubmindia.in.
மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்துதொடர்பு கொள்ளுங்கள்:
MSLகுரூப்
ஹரி பிரசாத்
[email protected]
+91-9618883774
ஊடகத் தொடர்பு:
ப்ரியா பாட்ஷா,
[email protected],
+91-22 6172 7353,
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article