ஹைதராபாத், இந்தியா, May 29, 2015 /PRNewswire/ --
முத்துக்களின் நகரத்தைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி நகை உற்பத்தியாளர்கள் வழங்கும் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி
UBM இந்தியா, மூன்று - நாள் ஹைதராபாத் ஜுவல்லரி, பேர்ல் மற்றும் ஜெம் கண்காட்சியின் (HJGF 2015) 8வது பதிப்பை இன்று அறிவித்தது. இந்த மெகா B2B ஜெம் மற்றும் ஜுவல்லரி கோலாகலம், ஜூன் 5 முதல் ஜூன் 7, 2015 வரை, ஹைடெக்ஸ் எக்ஸிபிஷன் சென்டரில் நடைபெறும்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இவ்வாண்டு, நகை பிராண்டுகள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வைரம் மற்றும் ஜெம்ஸ்டோன் விநியோகிப்பாளர்கள் மற்றும் வர்த்தக மற்றும் அரசு அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய 150-க்கும் அதிகமான காட்சியாளர்கள் பங்கேற்க உள்ளனர். இக்கண்காட்சியில், ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த தலைசிறந்த உற்பத்தியாளர்கள், தங்களுடைய புகழ்பெற்ற நிஜாம் மற்றும் ஹைதராபாத் பாணி நகைகளைக் காட்சிப்படுத்துவார்கள்.
வாங்குவோருக்கு மற்றும் விநியோகிப்போருக்கு தங்களை இணைத்துக் கொள்ளவும், வலையைமைப்பை உருவாக்கிக் கொள்ளவும், கருத்துக்களைப் பரிமாறவும், எதிர்காலப் போக்குகளைக் கண்டறியவும், மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும், ஒரு பிரமாதமான தளத்தை வழங்குவதன் மூலம், இந்திய நகைச் சந்தைக்கு ஒரு சிறப்பான நுழைவாயிலை HJGF 2015 உறுதி செய்கிறது. இந்த மூன்று - நாள் கண்காட்சியில், காட்சியாளர்கள், வைரங்கள், முத்துக்கள், ஜெம்ஸ்டோன்கள், தன்னிகரற்ற தங்க நகைகள், உற்பத்திச் செயல்முறையில் பயன்படுத்தப்படுகின்ற சமீபத்திய இயந்திரங்கள் மற்றும் சாதனங்கள், இவற்றுடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளிட்ட ஏராளமான வர்த்தகப் பொருட்களை காட்சிப்படுத்துவார்கள்.
மேலும், இத்துறையின் வளர்ச்சி மற்றும் மதிப்புக் கூட்டின் அடிப்படையில், ஏற்றுமதி மேம்பாட்டிற்காக கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கியத் துறையாக இந்திய அரசு இதனை அறிவித்துள்ளது. முதலீடுகளை அதிகரிப்பதற்காகவும், சர்வதேச சந்தையில், பிராண்ட் இந்தியாவின் புகழைப் பரப்பும் பொருட்டு, தொழில்நுட்பம் மற்றும் திறன்களை மேம்படுத்தவும், அரசு சமீபத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஓர் ஆராய்ச்சி மற்றும் சந்தை அறிக்கையின்படி, ஜெம்கள் மற்றும் நகைகளுக்கான இந்தியச் சந்தை 2012-2016 ஆகிய ஆண்டுகளுக்கிடையில் 14.93 சதவீத ஒட்டுமொத்த வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசும்போது, UBM இந்தியாவின் பொறுப்பிலுள்ள நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது,"UBM இந்தியாவின் D&B உடனான சமீபத்திய ஆய்வின்படி, 2014-ல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6-7% பங்களிப்பை ஜெம்ஸ் மற்றும் ஜுவல்லரி துறை வழங்கியுள்ளது. உலகின் அதிவேக வளர்ச்சி கண்டுவரும் ஜெம் மற்றும் ஜுவல்லரிசந்தைகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதுடன், தென்னிந்தியா மிகப்பெரிய சந்தையாகவும் உள்ளது. நம்முடைய ஒழுங்கமைந்த நகை சில்லறை விற்பனை இன்னும் ஆரம்பநிலையிலேயே இருப்பதால், வளர்ச்சிக்கான வாய்ப்பு அபரிமிதமாக உள்ளது. இத்துறை, வாடிக்கையாளர் ரசனையில் மாற்றங்களையும், நகைகளில் புதுமையான வடிவங்கள் மற்றும் விதங்களின் அதிகரிப்பையும் கண்டு வருகிறது. பங்கேற்கின்ற தனது காட்சியாளர்கள் மற்றும் வருகையாளர்களுக்கான இத்தொழில்துறை தேவைகள் மற்றும் விநியோகத்திற்கு இடையிலான இடைவெளியை நிரப்புவதில் HJGF முக்கிய பங்காற்றுவதுடன், கண்காட்சியின் இப்பதிப்பானது இத்தொழில்துறையின் தேவைகளை மேலும் தொடர்ந்து பூர்த்தி செய்யும் தனது நோக்கத்தையும் விடாமல் நிறைவேற்றும். "
இவ்வாண்டின் கண்காட்சியில் பங்கேற்கும் குறிப்பிடத்தக்க காட்சியாளர்களில், ஜெய் குலாப் ஜுவல்லர்ஸ், கிரிஸ், பிண்டி ஜுவல்லர்ஸ், சிந்தாமணி கோல்டு, N D டயமண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், தெர்மோ ஃபிஷர் சயன்டிஃபிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், லக்ஷ்மி டயமண்ட்ஸ், எமரால்டு ஜுவல்லரி இன்டஸ்டிரி இந்தியா லிமிடெட், ஃபிஷர் மெஷர்மென்ட் டெக்னாலஜீஸ், மீனாக்ஷி ஜுவல்லர்ஸ், ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் இத்தொழில்துறையின் இதர பிரபல நிறுவனங்களும் அடங்கும். ஹைதராபாத் ஜுவல்லரி, பேர்ல் மற்றும் ஜெம் கண்காட்சிக்கு (HJGF 2015) ஹைதராபாத் ஜுவல்லர்ஸ் மேனுஃபாக்சரர்ஸ் அசோசியேஷன் (HJMA), AP கோல்டு, சில்வர் & டயமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேஷன், நரசராவ்பெட் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் ஆகியவை உட்பட, தென்னிந்தியா முழுவதிலிருந்தும் முக்கிய ஜுவல்லரி கூட்டமைப்புகள் ஆதரவளித்துள்ளன.
நரசராவ்பெட்மாவட்டத்தின் தலைவர் திரு.விஜயகுமார் கூறியதாவது, "ஒவ்வொரு ஆண்டும் HJGF நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கின்ற UBM இந்தியாவின் முயற்சிகளை நாங்கள் வெகுவாகப் பாராட்டுகிறோம். ஏற்பாட்டுக் குழுவானது, இறக்கமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், விநியோகிப்பாளர்கள் மற்றும் இதர மதிப்புச் சங்கிலி நிறுவனங்கள் அனைத்தின் தேவைகளையும் புரிந்து கொண்டிருப்பதுடன், இந்நிகழ்ச்சியின் மூலம், சில்லறை விற்பனையாளர்களுக்கு எங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தவும் உதவுகிறது."
HJMA-வின் தலைவரான திரு.மஹேந்திர தயாள் கூறியதாவது, "UBM இந்தியாவின் HJGF,இத்தொழில்துறை நிறுவனங்களுக்கு தங்களுடைய சமீபத்திய தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்குக் காட்சிப்படுத்த உதவும் மிகச்சரியான தளமாகும். இது, இம்மண்டலத்தில், பெரிய அளவில் வர்த்தகர்கள் மற்றும்சில்லறை விற்பனையாளர்களை இணைக்கின்ற, ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்யப்படுகின்ற மிகவும் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகவும் அமைகிறது. வருகையாளர்களிடமிருந்து நாங்கள் ஊக்கமளிக்கின்ற வரவேற்பைப் பெற்றிருக்கிறோம், மேலும் இதன் முந்தைய பதிப்புகளைப் போலவே இந்த 8வது பதிப்பும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறோம்."
உலகம் முழுவதும் இத்தகைய புகழ்பெற்ற நகைக் கண்காட்சிகளை நடத்துவதன் மூலம், கடந்த முப்பது ஆண்டுகளாக நகை தொழில்துறையின் ஓர் ஒருங்கிணைந்த அங்கமாக UBM இருந்து வருகிறது. GJIIE சென்னை, ஆண்டு முழுவதும் UBM இந்தியா நடத்திய ஐந்து - நகர (கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், டெல்லி மற்றும் குஜராத்) நகைக் கண்காட்சிகளில் ஒன்றாகும். 2008-ம் ஆண்டில் இதன் அறிமுகத்தைத் தொடர்ந்து, 2014-ல், HJF-ன் 7வது பதிப்பு, இத்தொழில்துறைக்கான சரியான தொழில் வாய்ப்புகளை உருவாக்கியது மற்றும் இக்கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகள் பங்கேற்று, இணையற்ற விளைவை ஏற்படுத்தின. இம்மூன்று நாள் கண்காட்சி, ஏராளமான வாங்குவோரையும், விற்போரையும் கவர்ந்திழுத்தது மற்றும் இந்நிகழ்ச்சியின் புகழைக் கருத்தில் கொள்ளும்போது, இவ்வாண்டின் வருகையாளர்கள் 5000 என்ற வருகையாளர் எண்ணிக்கையையும் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
UBM இந்தியாபற்றி
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும்.
மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் http://www.ubmindia.in.
ஊடகத் தொடர்பு:
ப்ரியா பாட்ஷா,
[email protected]
+91-22-6172 7353,
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article