மும்பை, May 27, 2015 /PRNewswire/ --
இந்தியாவில் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கான தனது விரிவான ஆதரவை நீட்டிய ஜின்டால் குழுமத்தின் சிஎஸ்ஆர் பிரிவான ஜெஎஸ்டபிள்யூ, மும்பையில் உள்ள பிஎம்சி பள்ளிகளின் 25 சிறு அறிவியல் மையங்களுக்கான நிதியுதவி செய்யும் பொறுப்பை எடுத்துள்ளது. ஒரு சிறு அறிவியல் மையத்தில் 60 ஊடாடல் அறிவியல் & கணித செயல்படும் மாதிரிகள் இருக்கும் அவை உரைநடை புத்தகத்தில் உள்ள நியூட்டனின் வட்டு, பெரிஸ்கோப்புகள், ஆர்கிமெடிஸ் திருகாணி, முடிவிலி சுரங்கம், பித்தாகோரஸ் தேற்றம் உள்ளிட்டவற்றை விவரிக்கும். இந்தியாவில் சிறு அறிவியல் மையங்களை நிறுவுவதில் முன்னோடியான ஸ்டெம் லெர்னிங் பிரைவேட் லிமிடட் உடன் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20150527/10123663-a )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150527/10123663-b )
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஒரு முக்கிய சிறு அறிவியல் மையம் நிறுவலானது கொலாபா நகராட்சி இரண்டாம்நிலை பள்ளி, மும்பையில் நிறுவப்பட்டது. தொடக்க விழாவின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர்கள் மும்பை மேயர் ஸ்நேஹல் அம்பேகார் மற்றும் பிஎம்சி கல்வி செயற்குழுவின் தலைவர், வினோத் ஷேலார். ஜெஎஸ்டபிள்யூ ஃபவுன்டேஷனின் தலைவர், திருமதி.சங்கீதா ஜின்டால் அவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றார். மேயர் ஸ்நேஹல் அம்பேகார் சிறு அறிவியல் மையத்தில் கணிதம் & அறிவியல் செயல்படும் மாதிரிகளை புரிந்துகொள்வதில் அதிக ஆர்வம் செலுத்தினார். "இந்த செயல்படும் மாதிரிகள் மாணவர்கள் அறிவியலையும் கணிதத்தையும் சிறப்பாக புரிந்துகொள்ள உதவும். இவை உண்மையாகவே நுண்ணறிவு புகட்டுகின்றன மற்றும் மாணவர்கள் இவற்றோடு படிப்பதில் உற்சாகம் அடைவார்கள். ஜெஎஸ்டபிள்யூவின் மகத்தான முயற்சி இது!" என்று அவர் கூறினார்.
ஒரு தொண்டு நிறுவனம் வெளியிட்ட ஒரு சமீபத்திய வெள்ளை பத்திரிக்கையின்படி, பிஎம்சி பள்ளிகளில் இருந்து படிப்பைவிட்டு சென்றவர்களின் எண்ணிக்கை 2009-10 ஆண்டில் ஆறு (100 மாணவர்களுக்கு) என்றிருந்த இலக்கம் 2013-14 ஆண்டில் 12ஆக உயர்ந்துள்ளது. மோசமான கல்வி தரம், ஆசிரியர்கள் மற்றும் கட்டமைப்பு ஆகியவை முக்கிய காரணங்களாக மேற்கோள் காட்டப்படுகின்றன. பிஎம்சி-இன் அதிகாரபூர்வமான வலைதளமே ஆசிரியர் பயிற்சி & அதிக கொள்ளளவுள்ள கட்டிடம் ஆகியவற்றின் மூலம் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்னும் ஒரு திட்டத்தை வைத்திருப்பதாக குறிப்பிடுகின்றது. இதன் பின்னணியில், சிறு அறிவியல் மையத்தின் மூலமாக நவீன கற்பித்தலுக்கு உதவும் கருவிகளை வழங்கும் ஜெஎஸ்டபிள்யூ வழங்குதல் பொருத்தமானது. இது பிஎம்சி பள்ளிகளின் கல்வி தரத்தை அதிகரிக்கவும் படிப்பைவிட்டு செல்வோரின் விகிதத்தை குறைக்கவும் உதவும்.
வகுப்பறை பயிற்சிகளுக்காக சிறு அறிவியல் மையத்தின் செயல்படும் மாதிரிகளை பயன்படுத்த ஆசிரியர்களுக்கும் ஸ்டெம் லெர்னிங் பயிற்றுவிக்கிறது. இந்த சிறு அறிவியல் மைய நிறுவல் ஒருமுறை நிகழ்வதாக இல்லாமல் அறிவியல் கற்றலில் இதன் தாக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதை ஜெஎஸ்டபிள்யூ உறுதிசெய்துள்ளது. இதற்காகவே ஸ்டெம் லெர்னிங் ஒரு காலவரைக்குட்பட்ட மதிபீட்டு பரிசோதனையை உருவாக்கி உள்ளது. ஒரு மூத்த ஜெஎஸ்டபிள்யூ ஃபவுன்டேஷன் அதிகாரி இவ்வாறு கூறினார், "ஜெஎஸ்டபிள்யூ ஃபவுன்டேஷன், ஸ்டெம் மற்றும் பிஎம்சி நிர்வாகத்தின் கூட்டணியே, பிஎம்சி பள்ளிகளிலுள்ள பல திறமையான குழந்தைகளை சந்திப்பதற்கான உறுதியை பெற்றிருக்கிறது"
ஜெஎஸ்டபிள்யூ ஃபவுன்டேஷன் குறித்து
ஜெஎஸ்டபிள்யூ ஃபவுன்டேஷன் என்பது ஜெஎஸ்டபிள்யூ குழுமத்தின் சமூக வளர்ச்சி முயற்சிகளை நிர்வகிக்கின்ற தனித்துவமான தொண்டு நிறுவனம் ஆகும். திருமதி.சங்கீதா ஜின்டால் தலைமையில் செயல்படும் இந்த ஃபவுன்டேஷன் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், வாழ்வாதாரம், விளையாட்டு, கலை, கலாச்சாரம் & பாரம்பரியம் ஆகிய துறைகளில் பணியாற்றுகிறது. இந்தியா முழுவதிலும் உள்ள சமூகங்களின் மேம்பாட்டிற்காக ஜெஎஸ்டபிள்யூ ஃபவுண்டேஷன் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றது.
ஸ்டெம் லெர்னிங் பிரைவேட் லிமிடட் குறித்து
ஸ்டெம் லெர்னிங் பிரைவேட் லிமிடட் இந்தியாவில் சிறு அறிவியல் மையங்களை நிறுவுவதில் முன்னோடி. எஸ்எஸ்சி, சிபிஎஸ்சி & ஐசிஈஎஸ் மன்றங்களில் 5ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்களின் உதவியுடன் சிறு அறிவியல் மையத்தை உருவாக்கியுள்ளது. சிறு அறிவியல் மையம் எம்எஸ்சிஇஆர்டி (மகாராஸ்டிரா கல்வி மன்றம்) அங்கீகாரம் பெற்றது. ஸ்டெம் லெர்னிங் இந்தியா முழுவதிலும் 250க்கும் மேற்பட்ட சிறு அறிவியல் மையங்களை கிராமப்புறங்களிலும் நகர்புறங்களிலும், தனியார் பள்ளிகளிலும் மற்றும் அரசாங்க பள்ளிகளிலும் நிறுவி உள்ளது.
ஸ்டெம் லெர்னிங் பிரைவேட் லிமிடட் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மகாராஸ்டிராவில் பல்வேறு மாவட்டங்களில் 40 பெரிய அறிவியல் மையங்களை வெற்றிகரமாக அமைத்த பிறகு, ஸ்டெம் லெர்னிங் பள்ளிகளில் செயல்பாடு சார்ந்த கற்றலை ஊக்கப்படுத்த மேசையின் மேல் வைக்கக்கூடிய அறிவியல் மற்றும் கணிதம் செயல்படும் மாதிரிகள் உள்ளடங்கிய சிறு அறிவியல் மையங்களை வெளியிட தீர்மானித்தது. இந்தி, ஆங்கில மற்றும் வட்டார மொழிகளில் பயிற்சி தொகுதிகள் கிடைக்கப்பெறுகின்றன.
மீடியா தொடர்பு:
சுஷாந்த் காய்க்வாட்,
[email protected],
+91- 9820066022,
Marketing Head,
ஸ்டெம் லெர்னிங் பிரைவேட் லிமிடட்
Share this article