மும்பை, May 21, 2015 /PRNewswire/ --
UBM இந்தியா, கடந்த பதிப்பைவிட 28%-க்கும் மேலாக அதிகரித்திருந்த வருகையாளர்களுடன், கண்காட்சியை நிறைவு செய்கிறது.
UBM இந்தியா, மும்பையிலுள்ள பாம்பே கன்வென்ஷன் அன்ட் எக்ஸிபிஷன் சென்டரில் நடைபெற்ற வர்த்தகக் கண்காட்சியான, கான்கிரீட் ஷோ இந்தியா 2015-ஐ (7 முதல் 9 மே 2015 வரை) 10 நாடுகளைச் சேர்ந்து 150-க்கும் அதிகமான காட்சியாளர்கள் மற்றும் 5,000 வர்த்தக வருகையாளர்களுடனும், தொழில்துறை காட்சிப்படுத்தியிருந்த ஏராளமான பொருட்கள், தீர்வுகள் மற்றும் சேவைகளுடனும், வெற்றிகரமாக நிறைவு செய்தது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150520/10123292-a )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150520/10123292-b )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20150313/10118322 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இந்நிகழ்ச்சி, திரு. S.M. ராம்சந்தானி, இணை நிர்வாக இயக்குனர், மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டு கழகம். (MSRDC) வழங்கிய சிறப்புஉரையுடனும், அரசு அதிகாரிகள், முன்னணி கூட்டமைப்புகள், தொழில்துறை வல்லுனர்கள் மற்றும் கள நிபுணர்களின் பங்கேற்புடனும் மிகப் பிரமாதமாகத் திறந்து வைக்கப்பட்டது. கூட்டத்தில் உரையாற்றிய முக்கிய தொழில்துறை பேச்சாளர்களில் சிலரில், திரு.சூர்ய பிரகாஷ், தலைவர், அசோசியேஷன் ஆஃப் கன்சல்டிங் சிவில் எஞ்சினியர்ஸ் (இந்தியா), திரு.வினய் குப்தா, முக்கிய செயலதிகாரி -M/s டான்டன் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட்லிமிடெட்., டாக்டர்ஹிமான்ஷு ராஜே, இயக்குனர், ராஜே ஸ்டிரக்சுரல் கன்சல்டன்ட்ஸ்பிரைவேட்லிமிடெட், திரு. J P ராவ், இயக்குனர், தொழில்சார் சந்தைப்படுத்தும் யுக்தி, ஷப்பூர்ஜி பலோன்ஜி & Co லிமிடெட், டாக்டர்மைக்கேல் தோலன், நிர்வாகஇயக்குனர், அமெரிக்கன் கான்கிரீட்இன்ஸ்டிட்யூட்ஆஃப் ப்ரொஃபஷனல் டெவலப்மென்ட், ACI யூனிவர்சிட்டி, திரு.சைரஸ் டோர்டி, ஆலோசனையாளர், அம்புஜா சிமெண்ட் லிமிடெட்., டாக்டர்கோபால் ராய், இணைச் செயலர், இன்ஸ்டிட்யூட்ஆஃப் பிரிட்ஜ் எஞ்சினியர்ஸ் (IIBE), CEO-திரேன்திரா குரூப் ஆஃப் கம்பெனீஸ், திரு. பிரணவ் தேசாய், தலைவர்,பொருள் மேம்பாடு மற்றும் மேலாண்மை, லாஃபார்கேஇந்தியாபிரைவேட்லிமிடெட் ஆகியோர் அடங்குவர். இம்மாநாட்டில், ACC, பாரத் ஹோஸியரி, BSBK பிரைவேட் லிமிடெட், ஹெஸ், இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட், JSW சிமெண்ட், லீலா டாட்டா ரியல்டி, லூயி பெர்கர், மாஜிக்ரீட் ப்ரீகாஸ்ட், பாலிகான் கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரஹேஜா எஞ்சினியரிங், ரெல்கான் இன்ஃப்ராபுராஜெக்ட்ஸ் லிமிடெட், ரூப் டெல்சோனிக் அல்ட்ராசோனிக்ஸ் லிமிடெட், ஸ்பான்கிரீட், டாட்டா ஸ்டீல், டெக்லா இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் பல புகழ்பெற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
8 மே அன்று பிரிட்ஜஸ் இந்தியாவில் உரை நிகழ்த்திய முக்கிய பேச்சாளர்களில், திரு.சுபாஷ் ஜோக்லேகர், துணைத் தலைவர், ஸ்டுப் கன்சல்டன்ட்ஸ்லிமிடெட், V N ஹெக்கடே, மூத்த துணைத் தலைவர் (திட்டங்கள்) மற்றும் உறுப்பினர், நிர்வாகக் குழு, கேமன்இந்தியாலிமிடெட், D A பிடே, துணைத் தலைவர்(வடிவமைப்பு), IRB இன்ஃப்ராஸ்ட்ரக்சர்லிமிடெட், P நிரஞ்சனா, தலைவர், நியூக்ளியர் அன்ட் ஸ்பெஷல் பிரிட்ஜஸ், L & T லிமிடெட் ஆகியோர் அடங்குவர்.
தொழில்நுட்பப் போக்குகள் மற்றும் சந்தையின் இயக்கங்கள் குறித்த அறிவாற்றலைப் பெறுவதற்காக, சீனா, ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, ஜப்பான், மலேசியா, தென் கொரியா, தைவான், நெதர்லாந்து, யூஎஸ்ஏ மற்றும் மதிப்புச் சங்கிலி முழுவதிலுமிருந்து உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான தொழில்துறை பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தனர். தொழில்நுட்பக் காட்சிப்படுத்துதல், டொயோட்டா ஃபார்ம்ஸ்இந்தியாபிரைவேட்லிமிடெட், ஆஷ்டெக், ஹெஸ்கான்கிரீட்மெஷினரிஇந்தியாபிரைவேட். லிமிடெட், JSW சிமெண்ட் லிமிடெட், RMC ரெடிமிக்ஸ் (இந்தியா), கோத்ரெஜ், அப்போலோ இன்ஃப்ராடெக்பிரைவேட் லிமிடெட், ஹூண்டாய் அலுமினியம் கம்பெனிலிமிடெட், டாட்டா,ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ்லிமிடெட் போன்ற நிறுவனங்களின் புதுமைத் தயாரிப்புகளுடன் தலைசிறந்து விளங்கியது. இந்நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருந்தவற்றில் சில, இன்னொவேஷன் கார்னர், இன்டராக்டிவ் ஸோன் மற்றும் கான்கிரீட் மேன் ஆகியவையாகும். புதுமைத் தயாரிப்பில், பார்வையாளரின் தேர்வில் ஆஷ்டெக் வெற்றி பெற்றது.
திரு.சூர்ய பிரகாஷ், தலைவர், அசோசியேஷன் ஆஃப் கன்சல்டிங் சிவில் எஞ்சினியர்ஸ் (இந்தியா), கூறியதாவது," இந்தியாவில் சிமெண்ட் மற்றும் கான்கிரீட் தொழில்துறை, நிச்சயமான வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. எந்தவொரு துறையின் மேம்பாட்டிற்கும் உள்கட்டமைப்பு அடிப்படைத் தேவையாக உள்ளதால், சமீபத்திய ஐந்தாண்டுத் திட்டம், அதற்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளது. 280 மில்லியன் டன் அமோக உற்பத்தியுடன், உலகின் மூன்றாவது மிகப் பெரிய நாடாக இந்தியா உள்ளது, மேலும் இது அடுத்த சில ஆண்டுகளில் 800 மில்லியன் டன்னாக அதிகரிக்கும். சுய ஹீலிங் மற்றும் பென்டிங் கான்கிரீட் ஆகியவற்றில் புதிய முறைகள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகின்றன மற்றும் இவை விரைவிலேயே நடைமுறைக்கு வந்துவிடும். கான்கிரீட்டிற்கு உள்ள அதிகரித்த தேவை காரணமாக, மூலப்பொருட்களும் அதிகமாகத் தேவைப்படுகின்றன, அது ஆற்று மணலாகும், இது இன்றைய விலைப் போரினால் மிகவும் விலையுயர்ந்துவிட்டது. தேவை மற்றும் விநியோகத்திற்கு இடையிலுள்ள இடைவெளியை சமாளிப்பதற்கு, செராமிக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல், கல் துகள், தேங்காய் ஓடு, நெல் உமி போன்ற புதிய உற்பத்தி முறைகளை உற்பத்தியாளர்கள் பயன்படுத்த வேண்டும். இத்தகைய புதுமைகளை நாம் தொழில்துறைக்குக் கொண்டு வந்தோமானால், உள்கட்டமைப்புத் துறைக்கு நிச்சயமாக ஒரு பிரமாதமான எதிர்காலம் இருக்கும். முழுமையான கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு சூழியலும் அணுகத்தக்க வகையில் இருப்பதால், கான்கிரீட் ஷோ இந்தியா 2015, வருகையாளர்களுக்கு ஒரு மனம் கவர் தளமாகவும், காட்சியாளர்களுக்கு நன்மை தருவதாகவும் அமைந்துள்ளது."
தொழில்துறையின் வரவேற்பு:
திரு.மனோஜ் குமார், நிர்வாகஇயக்குனர், ஹெஸ் குருப், கூறியதாவது, "கான்கிரீட் ஷோ இந்தியாவுடன் எங்களுக்கு 3 ஆண்டு காலமாகத் தொடர்புள்ளது மற்றும் நாங்கள் பெற்றுள்ள வரவேற்பு நேர்மறையானது. புதிய கொள்கைகள், எங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கு எங்களுக்கு உதவியுள்ளதுடன், எங்கள் தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்துவதற்கும் கான்கிரீட் ஷோ இந்தியா 2015 ஒரு கச்சிதமான தளமாக அமைந்துள்ளது. மின் நிலையத்தை உருவாக்குவதற்குத் தேவைப்படும் 100% தீர்வுகளை நாங்கள் வழங்குகிறோம் மற்றும் இவ்வாண்டு, ஈர கான்கிரீட் மற்றும் குறைவான எடை கொண்ட கான்கிரீட் ஆகியவற்றை நாங்கள் காட்சிப்படுத்துகிறோம். கிடைத்திருக்கும் வரவேற்பு எங்களுக்கு ஓரளவு திருப்தியைத் தந்திருப்பதால், அடுத்த ஆண்டின் பதிப்பில் பங்கேற்பதற்கும் மிகவும் ஆவலாக உள்ளோம். "
திரு.நிதந்த் ஷா, பொது மேலாளர்- வாடிக்கையாளர் தொழில்நுட்ப சேவைகள், JK சிமெண்ட்ஸ், கூறினார், "அரசு அறிமுகப்படுத்திய புதிய கொள்கை முயற்சிகளுக்குப்பின், உள்கட்டமைப்பு தொழிலுக்கு அதிகபட்ச முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொழில்துறையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. எங்களுடைய தயாரிப்புத் திறன் மற்றும் மேம்பாடுகளைக் காட்சிப்படுத்துவதற்காக, எங்களுடைய பெரும்பாலான தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களைச் சென்றடைவதற்கு இக்கண்காட்சி ஒரு சிறந்த தளமாக அமைந்துள்ளது. எங்களைப் பொறுத்தவரை, கான்கிரீட் ஷோ இந்தியா 2015-ல் பங்கேற்பதும், சிமெண்ட் தொழில்துறையின் புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்துவதற்கு இத்தளத்தைப் பயன்படுத்திக்கொள்வதும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். நாங்கள் கிரே சிமென்ட், வால் பட்டி, ஒயிட் சிமெண்ட் மற்றும் அதன் பல்வேறு பயன்பாடுகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த சிமெண்ட் தயாரிப்புகளை நாங்கள் காட்சிப்படுத்துகிறோம்."
திரு.பிரவீண் லால் திர்வானி, முதன்மை மேலாளர், கன்ஸ்ட்ரக்ஷன் மெட்டீரியல்ஸ், மும்பை. கோத்ரெஜ் & பாய்ஸ் மேனுஃபாக்சரிங் கம்பெனிலிமிடெட், கூறுகிறார், "கடந்த 2 ஆண்டுகளாக, நாங்கள் மகிழ்ச்சியுடன் கூட்டு சேர்ந்துள்ளோம் மற்றும் வாடிக்கையாளர் வழங்கும் பின்கருத்தின் அடிப்படையில், பிராண்டின் விசிபிலிட்டி வளர்ந்துள்ளதை நாங்கள் தொடர்ந்து புரிந்து கொள்கிறோம். இவ்வாண்டு, தற்போதுள்ள செங்கற்களைவிட உயர்ந்த புதிய தொழில்நுட்பமான AAC எடைகுறைவான கற்கள் மற்றும் TUFF கான்கிரீட் தயாரிப்புகளை (RMC தயாரிப்பு) நாங்கள் காட்சிப்படுத்துகிறோம். இவை போன்ற நிகழ்ச்சிகள் எங்களுக்கு ஒரு களத்தை வழங்குவதுடன், இங்கு நாங்கள் எவ்வகையான தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை வழங்குகிறோம் என்பதையும், குறிப்பாக AAC எடைகுறைவான கற்களைப் பற்றி மக்கள் அறிந்து கொள்கின்றனர்."
UBM இந்தியாபற்றி
UBM இந்தியா, ஏராளமான கண்காட்சிகள், உள்ளடக்கம் சார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றாக இணைக்கும் தளங்களை தொழில்துறைக்கு வழங்கும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும். UBM இந்தியா, ஒவ்வொரு ஆண்டும், நாடெங்கிலும் 25 மிகப்பெரிய கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை நடத்துகிறது; இதன் மூலம் பலவகை தொழில்களிலும் வர்த்தகத்திற்கு உதவுகிறது. UBM ஏஷியாவின் ஒரு நிறுவனமான UBM இந்தியா, மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM பிஎல்சி-க்கு சொந்தமான UBM ஏஷியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM ஏஷியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரும், சீன பிரதான பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து அணுகவும் http://www.ubmindia.in.
ஊடகத் தொடர்புகள்:
ப்ரியா பாட்ஷா
[email protected]
+91-22-61727353
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
அஞ்சலினா பிரதான்
[email protected]
+91-11-66517646
UBM இந்தியா பிரைவேட் லிமிடெட்
Share this article