STL காக்கிநாடாவை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுகிறது
விரிவுபடுத்தப்பட்ட பாதுகாப்பு, ஸ்மார்ட்டரான போக்குவரத்து கட்டுப்பாடு, நிலையான சுற்றுப்புறம், சுகாதாரம் மற்றும் பலவற்றுக்காக, மேம்பட்ட தொழில்நுட்பத்தின் வாயிலாக 3.25 இலட்சம் குடிமக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது
பூனா, இந்தியா, Sept. 2, 2019 /PRNewswire/ -- உலகளாவிய டேட்டா நெட்வொர்க் தீர்வுகள் நிறுவனமான Sterlite Technologies Ltd (STL) (BSE: 532374) (NSE: STRTECH), இந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள காக்கிநாடாவில் அதன் ஸ்மார்ட் சிட்டி புராஜெக்ட்டின் வெற்றிகரமான நிறைவு செய்தலை அறிவிக்கிறது.
காக்கிநாடா நகரம், ஒரு மூலோபாய துறைமுகமாக இருந்து, பல்வேறு வர்த்தகத்திற்கான மையமாக செயல்பட்டு வருகிறது. ஒரு ஸ்மார்ட் சிட்டியாக, அது இன்னும் கவர்ச்சிகரமானதாக மாறிவிட்டது. 'காக்கிநாடாவிற்கு மிகச்சிறந்த வாழ்க்கைத் தரத்தை அளிப்பதே எங்களது நோக்கமாக இருந்தது' , இவ்வாறு K. Ramesh, MD & CEO, Kakinada Smart City Corporation and Commissioner (Kakinada Municipal Corporation) கூறினார். ' காக்கிநாடாவை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கும் எங்களது மாற்றமானது அதனை குடிமக்களுக்கு மிகவும் நட்பான இடமாக மாற்றிவிட்டது. செயல்திறன்மிக்க நிகழ்-நேர நிர்வாகம் மற்றும் குடிமக்கள் சேவைகள் போன்றவை நிலையான சுற்றுப்புறம், விரிவுபடுத்தப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நல்ல போக்குவரத்து கட்டுப்பாடு ஆகியவற்றை அனுமதிக்கிறது' என்றும் அவர் தெரிவித்தார்.
இடம்பெயர்வு, சூழ்நிலை பற்றிய விழிப்புணர்வு, போக்குவரத்து கட்டுப்பாடு, ஸ்மார்ட் ஒளியூட்டல், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் செக்யூரிட்டி ஆகியவற்றுக்கான STL-ன் ஸ்மார்ட் சிட்டி தொழில்நுட்பங்கள், உள்ளூர் நிர்வாகத்திற்காக தரவினால் இயக்கப்படும் முடிவு எடுத்தலை இன்று செயலாக்கிவிட்டன. இது காக்கிநாடாவின் 3.25 இலட்சத்திற்கும் அதிகமான குடிமக்களின் தினசரி வாழ்வியல் அனுபவத்தை மேம்படுத்துகிறது. தினமும் நகரத்தின் ஒய்-ஃபை இணைப்பை 13,000க்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்துகிறார்கள், STL -ஆல் செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கண்காணிப்பு, 50%க்கும் அதிகமாக காவல்துறை புகார்கள் குறைவதற்கு உதவுகிறது.
STLன் Command and Communication Centre (CCC)-ஆல் நகரத்திற்கு ஆற்றல் அளிக்கப்படுகிறது. அதனுள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள 1,600 க்கும் அதிகமான ஸ்மார்ட் சிட்டி தொழில்நுட்பங்கள் உடன், இது இந்தியாவின் மிகவும் மேம்பட்ட CCCsகளில் ஒன்றாக திகழ்கிறது மற்றும் நகர அளவிலான வயர்லெஸ் சென்சார் நெட்வொர்க் மற்றும் பேரழிவு மேலாண்மை அடிப்படையிலான Long Range (LoRa), horizontal Internet of Things (IoT) platform போன்ற பல முதன்மை தொழில்நுட்பங்கள் மற்றும் அம்சங்களையும் கொண்டுள்ளது.
go-live சான்றிதழைப் பெறுகையில், KS Rao, CEO of Network Services Business at STL, பின்வருமாறு தெரிவித்தார், 'காக்கிநாடாவிற்கு எங்களது எதிர்கால – பாதுகாப்பு ஸ்மார்ட் சிட்டி தளத்தை வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். நகர அதிகாரிகள் மற்றும் காக்கிநாடாவின் குடிமக்களுக்கிடையே வலுவான தகவல்தொடர்பிற்காக, எங்களது ஸ்மார்ட்டர் நெட்வொர்க் தொழில்நுட்பங்கள் தூண்களாக திகழ்கின்றன.' மற்றும் திட்டத்தின் பலன்களைப் பற்றி கூறுகையில், ' ஃபானி மற்றும் பேத்தை புயல்களின்போது, தடையற்ற தகவல்தொடர்பு, நிகழ்நேர புதுப்பித்தல்கள் மற்றும் நல்ல ஆட்சிமுறையை உறுதிப்படுத்துவதில் எங்களது ஸ்மார்ட் சூழலியல் அமைப்பு கருவியாக அமைந்தது. தவறான பார்க்கிங், நெருக்கடி மற்றும் கவனிப்பாரற்ற பொருள் கண்டுபிடிப்பு ஆகியவற்றின் மீது வீடியோ கண்காணிப்பு மற்றும் ஆட்டோமேடிக் எச்சரிக்கைகளுடன் நாங்கள் காக்கிநாடாவை கூடுதல் அறிவுத்திறன் கொண்டதாக உருவாக்கியுள்ளோம்.' என்று தெரிவித்தார்.
சிசிடிவி கண்காணிப்பு, ஒய்-ஃபை , ஆட்டோமேடிக் நம்பர்-பிளேட் அங்கீகரிப்பு மற்றும் முகம் கண்டறிதல் ஆகிய அனைத்தையும் ஒற்றை திரையில் காட்டும் ஸ்மார்ட் சிட்டி அப்ளிகேசன்களை STL'ன் CCC கொண்டு வந்துள்ளது. இது நல்ல ஆட்சிமுறை, விரைவான குற்றம் கண்டுபிடிப்பு மற்றும் தீர்வு விகிதங்களை செயலாக்குகிறது.
காக்கிநாடா ஸ்மார்ட் சிட்டி நிறைவுடன் இப்போது STL மூன்று ஸ்மார்ட் சிட்டிகளை வழங்கியுள்ளது - காந்திநகர், ஜெய்ப்பூர் மற்றும் காக்கிநாடா. ஸ்மார்ட் சிட்டீஸ் போன்ற குடிமக்கள் நெட்வொர்க்குகளுக்காக மூல கண்டுபிடிப்புகள் மூலமாக தரவு நெட்வொர்க்குகளை STL பரிமாற்றம் செய்துள்ளது மற்றும் பாதுகாப்புத்துறை போன்ற பெரிய நிறுவனங்களுக்காக இறுதி வடிவமைப்பு மற்றும் நெட்வொர்க்குகள் வரிசைப்படுத்தலையும் STL ஒருங்கிணைக்கிறது. 100 நாடுகளுக்கிடையே இன்டர்நெட் அடிப்படையிலான அப்ளிகேஷன்களின் அணுகலை இயங்கச்செய்ய Telcos மற்றும் Cloud Companies-க்கான ஹைபர்-ஸ்கேல் தீர்வுகளை அது கண்டுபிடித்துள்ளது.
STL - Sterlite Technologies Ltd பற்றி
இறுதி தரவு நெட்வொர்க் தீர்வுகளில் உலக தலைமையாக STL திகழ்கிறது.
அதிக திறன் கொண்ட ஃபைபர் மற்றும் வயர்லெஸ் நெட்வொர்க்குகளை நாங்கள் வடிவமைத்து வரிசைப்படுத்துகிறோம். ஆப்டிக்கல் ஃபைபர் மற்றும் கேபிள்கள், ஹைபர்-ஸ்கேல் நெட்வொர்க் வடிவமைப்பு, மற்றும் வரிசைப்படுத்தல் மற்றும் நெட்வொர்க் மென்பொருள் ஆகிய அனைத்திலும் நிபுணத்துவத்துடன், உலக தரவு நெட்வொர்க்குகளுக்கான ஒருங்கிணைந்த தீர்வுகள் வழங்குவதில் தொழில்துறையிலேயே நாங்கள்தான் முன்னணியில் இருக்கிறோம். நாங்கள் global telecom companies, cloud companies, citizen networks மற்றும் பெரிய நிறுவனங்களுடன் கூட்டிணைந்து cloud-native மென்பொருளால் இயக்கப்படும் நெட்வொர்க்குகள் போன்றவற்றை வடிவமைத்து, கட்டமைத்து மேலாண்மை செய்கிறோம்.
STL அதன் மையமாக புதுமையான கண்டுபிடிப்புகளையே கொண்டுள்ளது. இறுதி நெட்வொர்க் தீர்வுகள் வரிசைப்படுத்தல் மீதான ஆழ்ந்த கவனத்துடன், நாங்கள் எங்களது வல்லுநர் மையங்களில் அடுத்த-தலைமுறை அப்ளிகேஷன்களில் அடிப்படை ஆராய்ச்சியை நடத்துகிறோம். next-gen optical perform, இந்தியா, இத்தாலி , சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் ஃபைபர் மற்றும் கேபிள் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் இரு மென்பொருள் – மேம்பாட்டு மையங்கள் ஆகியவற்றுடன் உலகளவில் STL வலுவான இருப்பை கொண்டுள்ளது.
SterliteTech.com
Twitter
LinkedIn
YouTube
முதலீட்டாளர் தொடர்பு (Investor Relations)
Vishal Aggarwal
Phone: +91-20-30514000
Email: [email protected]
ஊடக தொடர்பு (Media Contact):
Juhi Hajela
[email protected]
+91-9810514280
Head – Corporate Communications
Sterlite Technologies Limited
Logo - https://mma.prnewswire.com/media/876464/Sterlite_Technologies_STL_New_Logo.jpg
Photo - https://mma.prnewswire.com/media/967410/STL_Innovation_Infographic.jpg
Share this article