Q1 FY23-ல் GTPL Hathway தொடர்ச்சியாக சிறப்பாகச் செயல்பட்டுள்ளது, ₹ 6,454 மில்லியன் வருவாய் கிடைத்திருப்பதாக அறிவித்துள்ளது
- மொத்தம் ₹ 6,454 மில்லியன் வருவாய் - ஆண்டுக்கு ஆண்டு 10% வளர்ச்சி
- ₹ 2,72 மில்லியன் சந்தா வருவாய் - ஆண்டுக்கு ஆண்டு 3% வளர்ச்சி
- ₹ 1,139 மில்லியன் பிராட்பேண்ட் வருவாய், ஆண்டுக்கு ஆண்டு 24% வளர்ச்சி
- PAT ₹ 433 மில்லியனாக உள்ளது
- ஆண்டுக்கு ஆண்டு பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் 1,55,000 என்ற அளவிலும் ஒவ்வொரு காலாண்டிலும் 29,000 அளவுக்கும் அதிகரித்திருக்கிறார்கள்
- ஆக்டிவாக உள்ள மொத்த பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 8,45,000 ஆகவும் ஹோம்பாஸ்களின் எண்ணிக்கை 4.85 மில்லியனாகவும் உள்ளது.
அகமதாபாத், இந்தியா, ஜூலை 18, 2022 /PRNewswire/ -- இந்தியாவின் மிகப்பெரிய MSO-வும் முன்னணி பிராட்பேண்ட் சேவையாளருமான GTPL Hathway Limited 10 ஜூன் 2022 அன்று முடிந்த காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகறை அறிவித்துள்ளது.
விவரங்கள் ( ₹ மில்லியன்.) |
Q1 FY23 |
Q1 FY22 |
Y-o-Y |
FY22 |
CATV வருவாய் |
2,727 |
2,641 |
3 % |
10,753 |
பிராட்பேண்ட் வருவாய் |
1,139 |
918 |
24 % |
4,075 |
மொத்த வருவாய் |
6,454 |
5,843 |
10 % |
24,154 |
EBITDA |
1,354 |
1,362 |
5,677 |
|
EBITDA லாபம் (%) |
21.0 % |
23.3 % |
23.5 % |
|
வரி போக லாபம் |
433 |
475 |
2,006 |
தொழில் செயல்திறனின் சிறப்பம்சங்கள்
CATV
- GTPL தன்னுடைய தற்போதைய சந்தைகளில் தன்னுடைய தடத்தை விரிவாக்கி வருவதோடு, ஆர்கானிக் மற்றும் இன்ஆர்கானிக் வழிகளில் புதிய சந்தைகளில் நுழைந்தும் வருகிறது
- மொத்த சந்தா வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 3% அதிகரித்திருக்கிறது
- ஸ்டான்ட்அலோன் சந்தா வருவாய் ₹ 1,903 மில்லியனாக உள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு 4% வளர்ச்சியாகும்
- சந்தா செலுத்தும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 7.80 மில்லியனாக உள்ளது; ஆண்டுக்கு ஆண்டு 500k அளவு வளர்ச்சியடைந்திருக்கிறது
பிராட்பேண்ட்
- ஆக்டிவாக உள்ள மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 845k ஆகும்; இது, ஆண்டுக்கு ஆண்டு 155k வளர்ச்சியாகும்
- ஹோம்பாஸ்களின் எண்ணிக்கை 4.85 மில்லியனாக உள்ளது; இது, ஆண்டுக்கு ஆண்டு 750k வளர்ச்சியாகும்
- Q1 FY23-கான ஒவ்வொரு பயனருக்குமான சராசரி வருவாய் (ARPU) ₹ 450 ஆக உள்ளது
- ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பயனரும் நுகரும் சராசரி தரவு அளவு ஆண்டுக்கு ஆண்டு 17% வளர்ச்சி கண்டு 260 GB ஆக உள்ளது
இந்த முடிவுகள் பற்றி GTPL Hathway Limited-ன் மேலாண்மை இயக்குநரான திரு. அனிரூத்சிங் ஜடேஜா பேசும்போது, "அனைத்து தொழில் பிரிவுகளிலும் எங்களுடைய இலக்குகளை தொடர்ந்து எட்டி வருகிறோம். இந்தியாவில் நாங்கள்தான் மிகப்பெரிய MSO-வாக இருக்கிறோம். புதிய பகுதிகளில் தொடர்ந்து விரிவாக்கம் செய்யவும், ஏற்கனவே உள்ள எங்களுடைய சந்தையில் இன்னும் ஆழமாக ஊடுருவவும் தொடர்ந்து முயன்று வருகிறோம். Q1 FY23-யின் முக்கிய சிறப்பம்சங்களாக நிலையான டிஜிட்டல் கேபிள் டிவி சந்தா வருவாயும், பிராட்பேண்ட் தொழிலில் சந்தாதாரர்களின் வளர்ச்சியும் வருவாயும் உள்ளன. Dun & Bradstreet வெளியிட்டுள்ளபடி "தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 2022-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் தலைசிறந்த 500 நிறுவனங்களில் ஒன்றாக GTPL மீண்டும் பட்டியலிடப்பட்டுள்ளது'. எங்களுடைய தொழிலில் FY23-க்குள் மிகச் சிறப்பான துவக்கத்தைக் கண்டுள்ளோம். எங்களுடைய வெற்றிகரமான பரிணாம வளர்ச்சியைத் தொடர்ந்து அடைவோம் என்ற நம்பிக்கையும் எங்களிடம் உள்ளது" என்றார்.
GTPL Hathway Ltd பற்றி:
GTPL Hathway Limited டிஜிட்டல் கேபிள் டிவி சேவைகளை வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய MSO-வாக உள்ளது. இந்தியாவில் 6-வது மிகப்பெரிய தனியார் வயர்லைன் பிராட்பேண்ட் சேவையாளராகவும் உள்ளது. குஜராத்தில் மிகப்பெரிய டிஜிட்டல் கேபிள் டிவி மற்றும் வயர்லைன் பிராட்பேண்ட் சேவையாளராகவும் உள்ளது & மேற்கு வங்கத்தில் முன்னணி டிஜிட்டல் கேபிள் டிவி சேவையாளராக உள்ளது. குஜராத், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, கோவா, பீஹார், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்டு, ராஜஸ்தான், ஒடிசா, அசாம், திரிபுரா, மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உட்பட்ட இந்தியாவில் உள்ள 19 மாநிலங்களில் உள்ள 1,200-க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்நிறுவனம் டிஜிட்டல் கேபிள் சேவைகளை அளித்து வருகிறது. ஜூன் 30, 2022 அன்றைய நிலவரப்படி, நிறுவனத்திடம் 8.40 மில்லியன் டிஜிட்டல் கேபிள் டிவி சந்தாதாரர்களும், 8,45,000 பிராட்பேண்ட் சந்தாதாரர்களும், 4.85 மில்லியன் பிராட்பேண்ட் ஹோம்பாஸ்களும் உள்ளனர்.
முன்னோக்கு அறிக்கை
எதிர்பார்க்கப்படும் எதிர்கால நிகழ்வுகள், நிறுவனத்தின் நிதி மற்றும் செயல்பாட்டு முடிவுகள் பற்றிய முன்னோக்கு அறிக்கைகள் சில அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை, அவை நிறைவேற்றப்படுவதற்கு நிறுவனம் உத்தரவாதம் அளிக்கவில்லை. இந்த அறிக்கைகள் அபாயங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளை உள்ளடக்கியவை. வெளிப்படுத்தப்பட்ட அல்லது உட்கிடக்கையானவற்றிலிருந்து உண்மையான முடிவுகள் கணிசமான அளவு அல்லது யதார்த்த ரீதியாக வேறுபடலாம். நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதிக்கக்கூடிய முக்கிய விஷயங்களில் உலகளாவிய அல்லது உள்நாட்டில் அல்லது இரண்டிலும் தொழில்துறையில் சரிவு, இந்தியாவில் அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அல்லது வெளிநாடுகளில் உள்ள முக்கிய சந்தைகள், வரிச் சட்டங்கள், வழக்குகள், தொழிலாளர் உறவுகள், மாற்று விகித ஏற்ற இறக்கங்கள், தொழில்நுட்ப மாற்றங்கள், முதலீடு மற்றும் வணிக வருமானம், பண வரவு கணிப்புகள், வட்டி மற்றும் பிற செலவுகள் போன்றவை அடங்கும். இத் தேதிக்குப் பிறகு நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கும் வகையில், முன்னோக்கு அறிக்கைகளைப் புதுப்பிக்க நிறுவனம் எந்தக் கடமையையும் ஏற்காது.
லோகோ: https://mma.prnewswire.com/media/1793950/GTPL_Logo.jpg
Share this article