பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கின்ற சாஹோ திரைப்படத்துடன் ஆஸ்ட்ரால் பைப்ஸ் கைகோர்த்துள்ளது
அகமதாபாத், இந்தியா, Aug. 22, 2019 /PRNewswire/ -- அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய ஆக்ஷன் திரில்லர் சூப்பர்ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தாகபூர் நடிக்கும் பிளாக்பஸ்டர் திரைப்படம் சாஹோ உடன் ஆஸ்ட்ரால் பைப்ஸ் திரைப்படங்களில் கோ-புரோமோசனுக்கு மற்றுமொரு புதிய டிரென்ட்செட்டிங்கை (போக்கை) கொண்டு வருகிறது. இந்த மெகா பட்ஜெட் திரைப்படம் ஒரே நேரத்தில் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் எடுக்கப்படுகிறது- ஹிந்தியில் இது பிரபாஸுக்கு அறிமுகப் படமாக இருக்கும் மற்றும் ஷ்ரத்தா கபூருக்கு இது முதல் தென்னிந்தியத் திரைப்படமாக இருக்கும்.
இந்தியா மற்றும் வெளிநாட்டில் பல இடங்களில் இந்தத் திரைப்படம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. முன்னணிக் கதாப்பாத்திரமாக போலீஸ் வேடத்தில் பிரபாஸ் நடிக்கின்ற இந்தப் படத்தின் முடிவு வரை பார்வையாளர்களுக்கு சஸ்பென்ஸ் இருந்து கொண்டே இருக்கும். இதில் வருகின்ற பல்வேறு ஆக்ஷன் காட்சிகளுக்காக பிரபாஸ் கடுமையான பயிற்சியை மேற்கொண்டுள்ளார். சாஹோவின் முடிவு ஆக்ஷன் ததும்பியதாக இருக்கும். நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப், சங்கி பாண்டே, மகேஷ் மஞ்சுரேக்கர், மந்திரா பேடி போன்ற பல பாலிவுட் நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர், இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 30 அன்று தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவரவிருக்கிறது.
ஆஸ்ட்ரால் பைப்ஸின் துணைத்தலைவர் மற்றும் வர்த்தக மேம்பாட்டு மேலாளராக உள்ள கைரவ் எஞ்சினியர் கூறும்போது, "வாடிக்கையாளர்களின் மனதில் அளப்பரிய இடத்தைப் பிடிப்பதும், உறுதியளிக்கப்பட்ட மதிப்பீடுகளைத் தொடர்ந்து வழங்குவதுமே அஸ்ட்ரலின் பிராண்ட் நோக்கமாக உள்ளது. தென்னிந்தியச் சந்தையை ஆஸ்ட்ரால் முக்கியமான ஒன்றாகக் கருதுவதால், தென்னிந்திய ஊடகங்களில் விளம்பரங்களைச் செய்வது நமது பிராண்டின் இருப்பை அங்கு தக்க வைக்க உதவிடும்" என்றார். சாஹோவுடன் இணைந்து திரைப்பட விளம்பரத்தைச் செய்யும் போது, திரைப்படத்தின் மூலம் பிராண்டிற்கான பரிச்சயம் ஏற்படுவது மற்றும் ஒரு மைல்கல்லாக இருக்கும். மேலும் வணிகர்களும் பிளம்பர் சமூகத்தினரும் இதன் ரிலீஸ் குறித்து ஆர்வமுடன் உள்ளனர்.
புதியநுட்பத்தையும், பைப்பிங் தொழிற்துறையில் புதிய டிரெண்டுகளை அமைப்பதையும் ஆஸ்ட்ரால் பிராண்டு குறிக்கிறது. புதிய பைப்பிங் தொழில்நுட்பத்தைப் புகுத்துதல் மற்றும் தயாரிப்புகளில் தொடர்ந்து புதியநுட்பத்தைச் செய்தல் மற்றும் பிராண்டு தகவல் தொடர்புகள் ஆகியவையே கவனப்புள்ளிகளாக உள்ளன. ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தியத் திரைப்படத் துறையில் சாஹோ ஒரு புதிய மைல்கல்லை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Astral Poly Technik Limited பற்றி
உலகளவில் மிகச்சிறந்த தரம் வாய்ந்த பிளாஸ்டிக் பைப்பிங் அமைப்புகளை தயாரிக்கும் நோக்கத்துடன் 1996ல் உருவாக்கப்பட்ட, ஆஸ்ட்ரால் பைப்ஸ் பல மில்லியன் கணக்கான வீடுகளின் அதிகரித்துவரும் பைப்பிங் தேவைகளை பூர்த்தி செய்துள்ளது மற்றும் தோற்கடிக்க இயலாத தரம் மற்றும் புதுமையான பைப்பிங் தீர்வுகள் ஆகிய தனிச்சிறப்புகளுடன் இந்தியாவின் வளர்ந்துவரும் ரியல் எஸ்டேட் துறைக்கு கூடுதல் மைலேஜை அளிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் தன்னை தொடர்ந்து முன்னேற்றிக்கொண்டே இருக்கும் ஆஸ்ட்ரால் பழைய, சம்பிரதாயமான மற்றும் செயல்திறன் அற்ற பிளம்பிங் முறைகளை தவிர்த்து புதுமையை கொண்டு வருவதன் மூலம் பைப்பிங் துறையில் எப்போதும் முன்னோடியாக விளங்குகிறது. இந்தியாவில் சிபிவிசியை கொண்டு வந்து இந்த தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் ஆஸ்ட்ரால், அதன் சிபிவிசி பைப்புகள் மற்றும் பொருத்துதல்களுக்கு என்எஸ்எஃப் ஒப்புதலையும் பெற்றுத்தந்துள்ளது. இந்தியாவின் முதல் ஈயம்-அல்லாத யுபிவிசி குழாய்களை பிளம்பிற்காகவும் நீரோட்டத்திற்காகவும் அறிமுகப்படுத்தியது போன்ற பல அறிமுகங்களை தொழில்துறைகளில் அளிப்பதன் மூலம் ஆஸ்ட்ரால் துறை குறியீடுகளை கடந்து செயல்படுகிறது. ஆஸ்ட்ரால் பைப்ஸ், தயாரிப்பின் பயன்பாடுகள் என்று வருகையில் இந்த துறையைத் தவிர்த்து பரந்த அளவிலான தயாரிப்பு வரம்புகளை வழங்குகிறது. ஆஸ்ட்ரால் பைப்ஸ்-ன் உற்பத்தி நிறுவனங்கள் குஜராத்தில் சன்டேஜ் மற்றும் தோல்கா, தமிழ்நாட்டில் ஓசூர், ராஜஸ்தானில் கிலோத், மஹாராஷ்டிராவில் சங்லி மற்றும் உத்தரகாண்டில் சிதார்கஞ்ச் ஆகிய இடங்களில் உள்ளன, அவை பிளம்பிங் அமைப்புகள், டிரெய்னேஜ் அமைப்புகள் மற்றும் ஃபயர் ஸ்பிரிங்க்ளர் அமைப்புகள், தொழில்சார் பைப்புகள் மற்றும் எலக்ட்ரிக்கல் கன்ட்யூட் பைப்புகள் ஆகியவற்றுடன் தேவையான அனைத்து வகையான பொருத்துதல்களையும் உற்பத்தி செய்கிறது.
Media Contact:
Kairav Engineer
j[email protected]
+91-79-66212000
VP Business Development
Astral Poly Technik Limited
Logo- http://mma.prnewswire.com/media/514011/Astral_Pipes_Logo.jpg
Share this article