PharmaLytica விர்ச்சுவல் எக்ஸ்போ கணெக்ட்: API-கள், பார்மா பேக்கேஜிங், மெஷினரி, ஆய்வகம் & பகுப்பாய்வு சேவகைளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய பார்மசூட்டிக்கல் விர்ச்சுவல் மார்க்கெட்பிளேய்ஸ்
- Informa Markets in India-வின் 'சூப்பர் செப்டம்பர் - விர்ச்சுவல் B2B கொண்டாட்டம்' -ன்கீழ் மருந்துசார் சமூகத்தின் உலகளாவிய மரியாதைக்குரிய தொழில்துறை நிபுணர்கள் சங்கமிக்கும் இடம்.
மும்பை, இந்தியா, Sept. 29, 2020 /PRNewswire/ -- இந்தியாவின் முன்னணி B2B கண்காட்சி ஏற்பாட்டளரும், CPhI / P-MEC India மற்றும் PharmaLytica ஆகிய முன்னணி உலகளாவிய மருந்து வர்த்தகக் கண்காட்சி மற்றும் மாநாடுகளின் ஏற்பாட்டாளருமான Informa Markets in India (முன்னர் UBM India), 30 செப்டம்பர் முதல் 1 அக்டோபர் 2020-வரை தனது முதலாவது PharmaLytica விர்ச்சுவல் எக்ஸ்போ கணெக்ட்-ஐ நடத்துவதில் பெருமிதம் கொள்கிறது. இந்த இரண்டு நாள் விர்ச்சுவல் எக்ஸ்போ மிக மேம்பட்ட டிஜிட்டல் எக்கோசிஸ்டத்தின்கீழ், உலகின் முன்னணி மருந்து நிறுவனங்கள், மிகச்சிறந்த பேச்சாளர்கள், அறிவுசார் மன்றம் மற்றும் இணையற்ற நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை ஒருங்கிணைக்கும். மருந்து உட்பொருட்கள், மருந்துசார் எந்திரங்கள் மற்றும் பேக்கேஜிங், ஆய்வுக்கூடப் பணிகள் மற்றும் பகுப்பாய்வு சேவைகள் போன்ற சந்தைகளுக்கு சேவையளிக்கும் 3000-க்கும் மேற்பட்ட முன்னணி மருந்து நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கவுள்ளன.
6 முக்கிய துறைகளுக்கான 6 டிஜிட்டல் கண்காட்சிகளை செப்டம்பர் 2020-ல் ஏற்பாடு செய்யும் Informa Markets in India-ன் சூப்பர் செப்டம்பர் - விர்ச்சுவல் B2B கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக இந்த டிஜிட்டல் நிகழ்வு இருக்கும். உரிய சமூகங்களும் தொழில்களும் பொதுமுடக்கத்தின் கட்டுப்பாடுகளை வெற்றிகொள்ளவும், தொழில் இலக்குகளை எட்டவும் பொருளாதாரம் தன்னுடைய பாதையில் திரும்பி வரத் தயாராகும் வேளையில் ஒரு உந்துதலைத் தரவும் இந்த விர்ச்சுவல் B2B கொண்டாட்ட முயற்சி உதவும்.
COVID-19 தொற்றினால் உலகமே பீதியடைந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து எடுக்கப்படும் பயணக் கட்டுப்பாடுகள் உட்பட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாகவும் கண்காட்சித் துறை மிகப் பெரிய பாதிப்பை அடைந்திருக்கிறது. PharmaLytica மெய்நிகர் கண்காட்சி மருந்துத் துறையின் தேவைகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நேரடிப் பரிவர்த்தனைகளை நடத்த இயலாத சமயத்தில் நிபுணர்கள் தங்களுடைய முக்கிய வர்த்தக உரையாடல்களை நடத்த உதவுவதோடு சாத்தியமான தீர்வுகளை வழங்கவும் உதவுகிறது.
Pharmexcil (Pharmaceuticals Export Promotion Council of India )-ன் ஆதரவைப் பெற்றிருக்கும் PharmaLytica விர்ச்சுவல் எக்ஸ்போ கணெக்ட் கீழ்க்காணும் நிறுவனங்களையும் உள்ளடக்கும் -MPA Technical Devices, Thermo Fisher Scientific, Agilent Technologies India Pvt. Ltd., Shimadzu Analytical (India) Pvt. Ltd, Pactech Machinery LLP, Adelbert Vegyszerek, Nicomac CleanRooms Far East LLP, Sun Teknovation Pvt. Ltd. மற்றும் பல.
இந்த இ-நிகழ்வில் 51 நாடுகளைச் சேர்ந்த பெருமளவிலான நிபுணர்கள் முன்பதிவு செய்து தங்களுடைய ஆர்வத்தைக் காட்டியிருக்கின்றனர். சிந்தனைத் தலைவர்களுக்கான மன்றத்தின் இ-மாநாடு போன்ற ஈடுபாடுள்ள அம்சங்கள் இந்த நிகழ்வில் இடம்பெறும்.
Covid-19 சூழல் பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு பெருந்தடைகளை உருவாக்கும் சூழலில், ஆக்டிவ் பார்மசூட்டிக்கல் இன்கிரேடியன்ட்ஸ் (API) மற்றும் கீ ஸ்டார்ட்டிங் மெட்டீரியல்களின் (KSM) விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இந்திய மருந்துத் துறை குறுகிய காலத்திற்கு தன்னுடைய லாப விகிதத்தைக் குறைத்துக்கொள்ளத் தயாராகி வருகிறது. ஆக்டிவ் பார்மசூட்டிக்கல் இன்கிரேடியன்ட்ஸை (API) உள்நாட்டிலேயே தயாரிப்பதை ஊக்குவிப்பதற்காக US$ 1.3பில்லியன் சுகாதாரப் பராமரிப்பு பேக்கேஜிற்கு இந்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்திருப்பது இறக்குமதியைச் சார்ந்திருப்பதை குறைப்பதற்கும், தற்சார்பினை அடையவும், மருந்துப் பாதுகாப்பை அடையவும் உதவும். துறைக்கு இது ஒரு சிறந்த யுத்தியாக அமையும்.
PharmaLytica விர்ச்சுவல் எக்ஸ்போ கணெக்ட் பற்றி அறிவித்துப் பேசிய Informa Markets in India-வின் மேனேஜிங் டிரெக்டரான Mr. Yogesh Mudras பேசும்போது, "PharmaLytica தன்னுடைய புதிய டிஜிட்டல் அவதாரத்தில் மருந்துத் துறைக்குள் உள்ள வளப்பாங்குப் பிரிவுகளில் - அது ஆய்வக மற்றும் பகுப்பாய்வு சாதனங்களாக இருக்கட்டும் அல்லது பார்மா பேக்கேஜிங் தீர்வுகளாக இருக்கட்டும் அல்லது பார்மா எந்திரமாக இருக்கட்டும் - ஒட்டுமொத்த வேல்யூ செயின் முழுவதும் தயாரிப்புகளுக்கும் சேவைகளுக்கும் உரிய முன்னணி சந்தையிடம் என்ற பாரம்பரியத்தைத் தொடர்ந்து தக்கவைத்திருக்கும். இந்த சவாலான நேரத்தில், உலகம் முழுவதும் உள்ள மருந்து நிறுவனங்கள் புதிய மருந்துகளைக் கண்டு பிடிப்பதிலும், R&D செலவுகளை அதிகரிப்பதிலும், தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதிலும், தயாரிப்புத் தரத்தை அதிகரிக்கும் புதிய முறைகளை அறிமுகம் செய்வதிலும் மிக அதிகமான முயற்சியை எடுத்து வருகின்றன. இந்திய மருந்துத் துறையில் வளர்ந்து வரும் தொழிலில் உள்ள புதிய கண்டுபிடிப்புகள் பற்றி அறிந்து கொள்ளுவதே PharmaLytica-வில் எம்முடைய கவனமாக இருக்கும். 2 நாட்கள் நடைபெறும் இந்த மெய்நிகர் கண்காட்சி ஒரு பொருத்தமான நேரத்தில் நடைபெறுகிறது. COVID 19 பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் காரணமாக பேக்கேஜிங் தயாரிப்பாளர்கள் சப்ளை செயின் முறிந்திருப்பதை அனுபவிக்கிறார்கள். மற்றொரு பக்கம் API-கள், KSM-கள் மற்றும் இடைநிலையாளர்கள் போன்ற யுத்திசார் துறைகளில் தற்சார்படைவதன் மூலம் ஆத்ம நிர்பார்த்தாவிற்கான இந்தியாவின் அழைப்பு என்பது காலத்தின் தேவையாக உள்ளது. மற்றொரு பக்கம், இந்த வைரஸ் உருவாக்கியுள்ள வாய்ப்புகளையும் உரையாடல்களையும் பார்மா துறை பயன்படுத்திக்கொள்ளுவதும் ஒரு முக்கியமான விஷயமாகும்" என்றார்.
"Informa Markets in India-வின் சூப்பர் செப்டம்பர் - விர்ச்சுவல் B2B கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக மிக அதிகமாகப் பேசப்படும் துறைக்கான PharmaLytica விர்ச்சுவல் எக்ஸ்போ கணெக்ட்-ஐ அளிப்பதல் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். Covid-19 சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள இடைவெளியைப் போக்கும் விதத்தில், Informa Markets in India, தன்னுடைய தொலைநோக்குப் பார்வையோடு, சமூகத்திற்குச் சேவையாற்றுவதற்காக தன்னுடைய டிஜிட்டல் தளத்தைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்ய உதவுகிறது," என்று மேலும் தெரிவித்தார்.
மருந்து மற்றும் அதைச் சார்ந்த துறைகள் தொடர்ந்து மையப்பட்டு வரும் சூழலில், நடப்பு பெருந்தொற்றுச் சூழலில் அதன் கட்டமைப்பு ஒரு சவாலாகவும் ஒரு வாய்ப்பாகவும் உள்ளது. உலகளாவிய மருந்துத் துறையில் பெற்ற சந்தை நுண்ணறிவைப் பகிர்ந்து கொள்ளுவதற்காக இந்த மெய்நிகர் கண்காட்சியின்போது 2 நாள் அறிவுசார் மாநாடும் நடத்தப்படும். அதில் 'இன்டியா ஃபியூச்சர் பவர் ஹார்ஸ் ஆஃப் KSMs அன்டு API-ஸ் அஸ் எ பேக்வர்டு இன்டகிரேஷன் ஃபார் ஃபார்முலேஷன்ஸ் டு புரொப்பெல் எக்ஸ்போர்ட்ஸ் டு யுஎஸ் 50 பில்லியன் டாலர் பை 2030 - ரோல் ஆஃப் R&D, கெமிஸ்ட்ரி & பயாலஜி'; 'சேஞ்சிங் டிமேண்டு பேட்டர்ன்ஸ் இன் பேக்கேஜிங் செக்மெண்ட்'; 'பேண்டமிக் ரிலேட்டட் கிளினிக்கல் ரிசர்ச் - கேன் இட் ரிவைவ் ஃபார்ச்சூன்ஸ் ஆஃப் CRO-ஸ் etc. இன் இந்தியா'; 'டிஸ்ரப்டிவ் டெக்னாலஜீஸ் ரிவலூஷனைசிங் பார்மா டிரக் டிவெலப்மெண்ட்'; 'பிரிபேர்டுனஸ் டு கம்பாட் குளோபல் பேண்டமிக் போன்ற தலைப்புகளில் உரையாடல்கள் நடைபெறும்.
இந்த மாநாட்டின் வெபினாரில் பேசவிருக்கும் சுவாரசியமான பேச்சாளர்களில் Pharmexcil-ன் தலைவரும் Nectar Life Sciences-ன் செயல் இயக்குநருமான Dr. Dinesh Dua; Hetero Drugs-ன் மூத்த துணைத் தலைவரும் மருத்துவ இயக்குநருமான Dr. Subhadeep Sinha; SymphonyTech Biologics-ன் சக நிறுவனரும் சி.இ.ஓ-வுமான Dr. Narendra Chirmule; Cipla-வின் பிரசிடென்ட்-குளோபல் குவாலிட்டி, மெடிக்கல் அஃபையர்ஸ் & பார்மகோவிஜிலன்ஸ்-ஆன Dr. Ranjana B. Pathak; Serum Institute of India Pvt. Ltd-ன் ஹியூமன் வேக்சீன் டெவலப்மெண்ட்-ஆன Dr. Swapan K. Jana மற்றும் Biological E. Ltd-ன் முத்த துணைத் தலைவரும் R&D தலைவருமான Dr. Ramesh Matur ஆகியோர் அடங்குவர்.
பதிவு செய்வதற்கு, தயவுசெய்து கீழ்க்காணும் இணைப்பில் கிளிக் செய்யவும்: https://bit.ly/3061bnB
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா (Informa Markets in India) பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets in India உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets in India என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் Mumbai, New Delhi, Bangalore மற்றும் Chennai-யில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து https://www.informamarkets.com/en/regions/asia/India.html என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
Roshni Mitra - [email protected]
Mili Lalwani - [email protected]
லோகோ: https://mma.prnewswire.com/media/1281483/Pharmalytica.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg லோகோ: https://mma.prnewswire.com/media/1245301/Super_September.jpg
Share this article