Panchshil Office Parks-க்கு 3 பாதுகாப்பு 'ஆஸ்கார்' விருதுகள் கிடைத்துள்ளன
- Eon Free Zone-1, Business Bay & Tech Park One வளாகங்களுக்கு British Safety Council மிக உயர்ந்த சுகாதாரம் & பாதுகாப்புக்கான பட்டங்களை வழங்கியிருக்கிறது
பூனே, இந்தியா, Jan. 25, 2021 /PRNewswire/ -- பூனேயில் உள்ள தனது 3 மிகச்சிறந்த அலுவலக வளாகங்களுக்கு British Safety Council-யிடமிருந்து 3 பெருமைமிக்க Swords of Honour விருது கிடைத்திருப்பதாக பூனேயில் அமைந்துள்ள Panchshil Realty-யின் ஒரு அலகான Panchshil Office Parks இன்று அறிவித்திருக்கிறது.
உலகளாவிய அளவில் உள்ள 66 தளங்களில் Panchshil-னுடைய Eon Free Zone-1, Business Bay மற்றும்
ஆகியவற்றுக்கு Sword of Honour 2020 விருது கிடைத்திருக்கிறது, வேலை செய்யும் இடங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அபாயங்களை திறம்பட மேம்பாடு செய்யும் நிறுவனங்களுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.
Eon Free Zone-1-ஐ பொருத்ததவரை Sword of Honour விருது கிடைப்பது இது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டு.
Sword of Honour விருதினைப் பெறுவதற்கு, ஒரு நிறுவனம் முதலில் British Safety Council-ன் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மைத் தணிக்கையில் அதிகபட்சமான ஐந்து நட்சத்திரங்களைப் பெற்றிருக்க வேண்டும். தன்னுடைய தொழில் முழுவதுமே அதாவது ஷாப் ஃபுளோரிலிருந்து போர்டுரூம்வரை அனைத்திலும் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதை ஒரு தனி நிபுணர் குழுவிற்கு நிரூபித்திருக்க வேண்டும்.
Panchshil Realty-யின் ஃபெசிலிட்டி மேனேஜ்மெண்டின் துணைத் தலைவரான Vijitsingh Thopte பேசும்போது, "கடந்த பல ஆண்டுகளாக எம்முடைய வளாகங்களில் அலுவலகங்களை அமைத்திருக்கும் நிறுவனங்கள், அசோசியேட்கள் மற்றும் குழு உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் நலனின்மீது தொடர்ந்து நாங்கள் காட்டிய அக்கறையை நடுநிலையாக சீராய்வு செய்து சீர்தூக்கிப்பார்த்து 3 பெருமைமிக்க Swords of Honour விருதுகள் மூலம் அங்கீகரித்திருப்பது எங்களுக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. British Safety Council-ன் பாதுகாப்புக்கான 'ஆஸ்கார்கள்' என நீண்ட காலமாகக் கருதப்படும் இந்த 3 விருதுகளும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அபாயங்களை நிர்வகிப்பதில் எம்முடைய முன்மாதிரியான தரத்திற்கான அங்கீகாரமாகவே நாங்கள் கருதுகிறோம்" என்றார்.
British Safety Council-ன் தலைவரான Lawrence Waterman பேசும்போது: "British Safety Council-ன் பணியாளர்கள் மற்றும் போர்டு ஆஃப் டிரஸ்டீஸின் சார்பாக, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மையின் மிக உயர்வான தரத்தினை அடைந்ததற்காக Panchshil-னை பாராட்டுகிறோம். இத்தகைய மேன்மையை அடைவதற்கு உண்மையான ஈடுபாடும், தொழில்முறைமேலாண்மையும் தேவை. COVID பெருந்தொற்று பரவியிருந்த இந்து முன்னிகழ்வற்ற ஆண்டிலும் உங்களுடைய சாதனைகளில் உங்களுக்கு உறுதுணையாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.
British Safety Council-ன் தலைமை நிர்வாகியான Mike Robinson அவர்கள் பேசும்போது: "தங்களுடைய நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளில் தங்களுடைய பணியிடத்தை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் மற்றும் / அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சீர்கேட்டை குறைப்பதில் காட்டியிருக்கும் தளர்வில்லாத ஈடுபாட்டுக்காக Panchshil-ஐ நான் பாராட்டுகிறேன். COVID-19 வடிவில் இந்த ஆண்டு ஒரு கூடுதலான குறிப்பிடத்தக்க சவாலை நாம் சந்தித்தோம், இந்தச் சவாலான சூழலிலும் Panchshil காட்டிய அதன் கடின உழைப்புக்கும் ஈடுபாட்டுக்கும் நான் தலைவணங்குகிறேன்" என்றார்.
"Sword மற்றும் Globe வெல்லும் எல்லா நிறுவனங்களுமே சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கான உண்ணதமான தரத்தினை அடைய ஆழ்ந்த ஈடுபாட்டையும் உறுதிப்பாட்டையும் காட்டுகின்றன. தங்களுடைய வேலை வழியாக யாரும் காயப்படவோ அல்லது சுகமில்லாமலோ ஆகக்கூடாது என்ற எம்முடைய குறிக்கோளை எட்ட உதவுவதில் அவர்கள் எங்களுடைய கூட்டாளிகளாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எமது பயணம்
ஒவ்வொரு வளாகத்திலும் உள் பங்குரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு எந்த ஒரு தொழில்சார் இன்னல்களை இல்லாமல் செய்யவும் மற்றும் அபாயங்களைக் குறைப்பதற்கும் தொழில் நலம், பாதுகாப்பு, ஆரோக்கியம் சார்ந்த கொள்கைகள், செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் சார்ந்த அறுபதுக்கும் மேற்பட்ட விஷயங்களில் ஒரு விரிவான மற்றும் வீரியமான மதிப்பீடு எல்லாத் தளங்களிலும் செய்யப்பட்டன. தொடர்ச்சியான உள் தணிக்கை, பாதுகாப்பு சார்ந்த குழு விவாதங்கள், சிறப்புப் பயிற்சிகள் மற்றும் வளாகத்தை இயக்குவதிலும், பராமரிப்பதிலும் ஈடுபட்டுள்ள பல்வேறு குழுக்களுக்கான பாதுகாப்பு சோதனைகள் போன்றவை எடுக்கப்பட்ட பிற நடவடிக்கைகளில் அடங்கும்.
திறம்பட்ட கட்டுப்பாட்டு நுட்பங்கள் மற்றும் மேல்நிலைத்தொட்டிகள் மற்றும் நிலத்தடி நீர் தொட்டிகளைக் கண்காணிக்க தானியங்கி சென்சார்கள், ஏர் கண்டிஷனிங் யூனிட்டுகளின் வெப்பநிலைய மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தும் நுட்பங்கள், இன்ஃபிராரெட் கேமராக்களைப் பயன்படுத்தி மின் பேனல்களின் வெப்பநிலை கண்காணிப்பு, பொருத்தமான சாதனங்களுக்கு அதிர்வு மற்றும் இரைச்சல் கட்டுப்பாடுகள், CCTV மற்றும் அதுபோன்ற கருவிகளைப் பயன்படுத்தி முக்கிய செயல்பாடுகளைக் கண்காணித்தல் போன்ற தொழில்நுட்பப் பயன்பாடுகளைக்கொண்டு பீரியாடிக் பிரிவெண்டிவ் மெய்ண்டனன்ஸ் செயல்முறைகள் மேம்படுத்தப்பட்டன.
பொது இடங்களிலும் பார்க்கிங் பகுதிகளிலும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை, பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் நல்வாழ்வு படங்கள் ஆகியவற்றைப் பொருத்தியதும் கூடுதல் சிறப்பு நடவடிக்கைகளில் அடங்கும், விழிப்புணர்வை அதிகரிக்கவும், பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்தவும் இவை உதவின.
British Safety Council
2020 விருதுகள் என்பது British Safety Council-ன் 41-வது தொடர்ச்சியான விருது வழங்கும் நிகழ்ச்சியாகும், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மையில் தலைசிறந்து விளங்கியதற்காக Sword of Honour
விருதை வழங்கி வருகிறது.
British Safety Council 1957-ல் தொடங்கப்பட்டது முதல், விபத்துகள், இடர்கள் மற்றும் பாதுகாப்பற்ற நிலைகளிலிருந்து பணியாளர்களைப் பாதுகாப்பதற்கு ஓய்வின்றிப் பணியாற்றி வருகிறது, குறிப்பிடத்தக்க சுகாதார மற்றும் பாதுகாப்புச் சட்டங்களை ஏற்படுத்தச் செய்த செயல்முறைகளில் ஒரு முக்கியமான பணிகளை ஆற்றியிருக்கிறது. 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அதன் உறுப்பினர்கள் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், அவர்களுடைய நலனை மேம்படுத்தவும் உறுதி பூண்டுள்ளனர். ஒரு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான வேலைச் சூழல் தொழில்களுக்கும் நல்லது என்று நம்புகின்றனர்.
Panchshil-ன் Sword of Honour விருதுபெற்ற வளாகங்கள்
பூனேயின் கிழக்கு மண்டலமான காரடி-யில் 4.5 மில்லியன் சதுர அடியில் EON Free Zone-1
கட்டப்பட்டிருக்கிறது, மிக வேகமாக வளர்ந்து வரும் IT மாவட்டமாக இது உள்ளது, IT மற்றும் ITeS துறையில் முன்னணியில் உள்ள பல உலகளாவிய மற்றும் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் மையமாக உள்ளது.
ஏர்ப்போர்ட் சாலையில் உள்ள Poona Golf Course அருகில் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் Business Bay 1.8 மில்லியன் சதுர அடி கொண்ட நவீன வளாகமாகும், முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், மற்றும் IT எனேபில்டு சர்வீஸ் நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்ட வளாகமாக உள்ளது.
ஏர்வாடா-வில் அமைந்துள்ள Tech Park One என்பது ஒரு தனித்துவமான IT பூங்காவாகும், இதில் உயர் தொழில்நுட்ப உதவும் சேவைகளும், தனித்துவமான வசதிகளும் உள்ளன. 1 மில்லியன் சதுர அடியில் அமைந்துள்ள Tech Park One பன்னாட்டு மற்றும் Fortune 500 நிறுவனங்கள் விரும்பும் இடமாக உள்ளது.
பூனேயில் Panchshil Realty-யின் அலுவலகப் போர்ட்ஃபோலியோவில் 17.5 மில்லியன் சதுர அடிக்கும் மேற்பட்ட பரப்புள்ள EON Free Zone, World Trade Centre, Business Bay மற்றும் International Convention Centre ஆகியவை அடங்கும். இதன் வளாகங்களில் உலகப் பெரிய கார்ப்பரேஷன் நிறுவனங்களான Allianz, Citibank, Cognizant, Concentrix, Credit Suisse, Deutsche Bank, HSBC, MasterCard, Michelin, UBS மற்றும் Vodafone போன்ற பல நிறுவனங்கள் அமைந்துள்ளன.
Panchshil-ன் தொழில்கள் - முக்கியமான விஷயங்கள்
- Panchshil Realty-யின் ரியல் எஸ்டேட் சுமார் 23 மில்லியன் சதுர அடி அளவுக்கு உள்ளது, இன்னும் 20 மில்லியன் சதுர அடிப் பரப்பு கட்டுமானத்தில் உள்ளது.
- Panchshil-ன் மூன்று பிரதான தொழிலாக வர்த்தக அலுவலக கட்டடங்கள், விருந்தோம்பல் மற்றும் இருப்பிட ரியல் எஸ்டேட் தொழில் உள்ளன.
- Panchshil Realty-யின் குறிப்பிடத்தக்க ஆஃபீஸ் போர்ட்ஃபோலியோவில் Blackstone Group LP-யினால் நிர்வகிக்கப்படும் Blackstone Real Estate Private Equity Fund அடங்கும்.
Panchshil Realtyபற்றி
2002-ல் நிறுவப்பட்ட Panchshil Realty என்பது இந்தியாவின் மிகச்சிறந்த சொகுசு ரியல் எஸ்டேட் பிராண்டுகளில் ஒன்றாகும். திட்டமிடப்பட்ட வளர்ச்சி, மதிப்புமிக்க சொத்துக்களை உருவாக்குதல், மற்றும் வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை வழியாக வாழ்க்கைப்பாணி அனுபவங்களை ஏற்படுத்துவதில் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் தன்னுடைய முன்னிலைக்கும் செயல்திறனுக்கும் புகழ்பெற்ற இக்குழுவின் அணுகுமுறையாக உள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.panchshil.com
என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1424256/Panchshil_Office_Parks.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1419775/Panchshil_Office_Parks_Logo.jpg
Share this article