Panchshil Foundation பூனாவில் உள்ள முன்னணி தொண்டு நிறுவனங்களுக்கு அவசரகால ஊர்திகளை வழங்கியது
பூனா, இந்தியா, Oct. 27, 2020 /PRNewswire/ -- பூனாவில் அமைந்துள்ள Panchshil Realty-யின் CSR அமைப்பான Panchshil Foundation பூனாவில் உள்ள ஆறு முன்னணி தொண்டு நிறுவனங்களுக்கு அவசரகால ஊர்திகளை தசரா அன்று வழங்கியது.
இந்த அவசரகால ஊர்திகளை Nationalist Congress Party-யின் தலைவரும் ராஜ்ய சபாவின் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. Sharad Pawar அவர்களும் Panchshil Realty-யின் தலைவரான திரு. Atul Chordia அவர்களும் இணைந்து அந்தத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கினார்கள்.
இந்த நவீன, இட வசதிமிக்க, வகை-C அவசர ஊர்திகளைப் பெற்ற தொண்டு நிறுவனங்களாவன:
- Sou. Sheela Raj Salve Memorial Trust
- Vijay Mangal Pratishthan
- Muktai Granthalaya
- Acharya Anand Rushiji Blood Bank
- Shree Gurudatta Tarun Mandal
- Vitthal Tupe Vidya Pratishthan
"COVID-19 பெருந்தொற்று நம்முடைய சுகாதாரத்துறையின் உட்கட்டமைப்பை அதன் வரம்புக்கு விரிவாக்கிவிட்டது. பொறுப்பான கார்ப்பரேட் குடிமக்கள் என்ற முறையில், பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு உறுதுணையாக எம்மால் முடிந்தவற்றை நாங்கள் செய்து வருகிறோம். இந்தப் பெருந்தொற்றின் தாக்கத்தைக் குறைக்க நாங்கள் பன்முக அணுகுமுறையைக் கையாளுகிறோம். நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்ய இந்த அவசரகால ஊர்திகள் உதவும் என நம்புகிறோம்," என்றார் Panchshil Realty-யின் தலைவரான Atul Chordia.
பெருந்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து, Panchshil Foundation பல கள அளவிலான முன்முயற்சிகளை எடுத்திருக்கிறது. Foundation செய்திருக்கும் பணிகளில் குறிப்பிடத்தக்க சில பணிகள்:
- COVID-19 காரணமாக ஏற்பட்ட திடீர் வருவாய் இழப்பைச் சமாளிக்க தினக்கூலித் தொழிலாளர்களுக்கு 35,000-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
- Elite National Disaster Relief Force-உடன் இணைந்து சமூக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பொதுமக்கள் எடுக்க வேண்டிய அடிப்படையான சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை அளிப்பதற்கான சமூகக் கல்வி முன்முயற்சிகளை எடுத்தது. தினக்கூலித் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் இடங்களில் பல முகாம்கள் நடத்தப்பட்டன.
- Force Motors-உடன் இணைந்து, பூனாவில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு Foundation 15,000-க்கும் மேற்பட்ட தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை (PPE Kits) வழங்கியது. Pune Police மற்றும் Pune Municipal Corporation-க்கும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை (PPE Kits) வழங்கப்பட்டன
- Dr. Cyrus Poonawalla-வுடன் கைகோர்த்து COVID-19 நோயாளிகளுக்கு Pune-யில் உள்ள Sassoon Hospital மற்றும் Naidu Hospital-ல் COVID-19 நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் Foundation விடுதி இடவசதியை வழங்கியது. இந்த மருத்துவர்களும் செவிலியர்களும் Pune-யில் Hotel Lemon Tree Premier-ல் தங்க வைக்கப்பட்டனர்.
- Pune Municipal Corporation-உடன் இணைந்து, பூனேயில் உள்ள பானெர்-ல் 270 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் 44 வென்டிலேட்டர்கள் / ICU படுக்கைகள் கொண்ட ஒரு தனியான COVID Care Centre-ஐ Foundation அமைத்தது.
- 48,000 சதுரடி பரப்பளவில் 6 தளங்களைக்கொண்ட தயார்நிலையில் இருந்த சிறந்த மேற்கட்டுமானமானது முழுமையாக Panchshil Realty-யினால் அதன் C2 Reservation Development-ன் ஒரு அங்கமாகக் கட்டப்பட்டு & Pune Municipal Corporation-டம் ஒப்படைக்கப்பட்டது.
- ஒட்டுமொத்த கட்டடத்தின் உட்புறத்தை Panchshil Foundation சிகிச்சையளிப்பதற்கேற்ப மாற்றி கீழ்க்காணும் வசதிகள் உட்பட ஒட்டுமொத்த மருத்துவ உட்கட்டமைப்பையும் அவசியமான சாதனங்களையும் வழங்கியது:
- ஒட்டுமொத்த கட்டடத்திற்கு சுமார் 2 கிலோமீட்டர் நீள ஆக்சிஜன் பைப்பிங் வசதி
- 270 ஆக்சிஜன் படுக்கைகள், மற்றும் பிரிபகுதிகள் மற்றும் செவிலியர் பகுதிகள் போன்ற அவசியமான சாதனங்கள்.
- 44 ICU படுக்கைகள் - ஒட்டுமொத்த ICU பிரிவுக்குத் தேவையான ஏர் கண்டிஷனிங் உட்பட அவசியமான மருத்துவ சாதனங்களுடன்
- அரசு வழிகாட்டுதல்களின்படி பிற உட்புற வேலைகள்.
- COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் வகையில் பூனாவின் Hadapsar-ல் உள்ள Noble Hospital-க்கு இரண்டு High Flow Nasal Cannula Machines-ஐ Foundation வழங்கியது.
ஒரு சக்திவாய்ந்த சமூக, பரஸ்பர சொந்தம் மற்றும் உரிமைத்துவ உணர்வை Panchshil Foundation வளர்க்கிறது. மக்கள் சிறந்த வாழ்க்கையை வாழும்போது சிறந்த சமூகங்கள் உருவாகின்றன, சிறந்த வாழ்க்கை என்பது அடிப்படைத் தேவைகள் மற்றும் அவசியங்களினால்தான் கிடைக்கிறது. கல்வி, சுகாதாரம், விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை சிறந்த வாழ்க்கையைக் கட்டமைப்பதற்கும் வாழ்வதற்கும் அவசியமானவை.
Panchshil-ன் தொழில்கள் - முக்கியமான விஷயங்கள்
- Panchshil Realty-யின் ரியல் எஸ்டேட் 23 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமாக உள்ளது. இன்னும் 20 மில்லியன் சதுர அடிப் பரப்பு கட்டுமானத்தில் உள்ளது.
- Panchshil-ன் பிரதான தொழிலாக வர்த்தக அலுவலக கட்டடங்கள், விருந்தோம்பல் மற்றும் இருப்பிட ரியல் எஸ்டேட் தொழில் உள்ளன.
- Panchshil Realty-யின் குறிப்பிடத்தக்க ஆஃபீஸ் போர்ட்ஃபோலியோவில் Blackstone Group LP-யினால் நிர்வகிக்கப்படும் Blackstone Real Estate Private Equity Fund அடங்கும்.
Panchshil Realty பற்றி
திட்டமிடப்பட்ட வளர்ச்சி, மதிப்புமிக்க சொத்துக்களை உருவாக்குதல், மற்றும் வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை வழியாக வாழ்க்கைப்பாணி அனுபவங்களை ஏற்படுத்துவதில் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் தன்னுடைய முன்னிலைக்கும் செயல்திறனுக்கும் புகழ்பெற்றதாக 2002-ல் நிறுவப்பட்ட Panchshil Realty உள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.panchshil.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1319929/Panchshil_Foundation_Donates_Ambulances.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1169295/Panchshil_Foundation_Logo.jpg
Share this article