கோவிட் (COVID) நோய்த் தொற்று அதிகரித்துவரும் இந்த நேரத்தில், Integra Software Services ரூ. 30.00 லட்சம் (சுமார் 40,000.00 USD) மதிப்பில், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 161 ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகளை நிறுவியுள்ளார்கள்.
மேலும், தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறைவுக்கு தீர்வு காணும் வகையில் சென்னையை சேர்ந்த ஒன்பது தொழிலதிபர்களுடன் இணைந்து 1000 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்தனர்
புதுச்சேரி, இந்தியா, June 17, 2021 /PRNewswire/ -- சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட நிறுவனமான Integra Software Services, சமுதாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பெருந்தொற்றை நிர்வகிக்க தேவையான சேவைகளை வழங்கி உதவுகிறார்கள்.
புதுச்சேரியில் இயங்கும் Integra Software Services, நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இந்த பெருந்தொற்று சூழ்நிலையை சமாளிக்க முனைப்பாக உதவுகிறது மற்றும் COVID நோய்த் தொற்றை எதிர்த்து போராட மாநில அரசுக்கு உதவுவதன் மூலம் சமுதாயத்திற்கு நிறுவனம் அதன் பங்கை அளிக்கிறது.
ஊழியர்கள் நல்வாழ்வு திட்டங்களின் ஒரு பகுதியாக அவர்களுக்கு ஒருங்கிணைந்த COVID நிவாரணங்களை வழங்கும் அதே நேரத்தில், இந்த நிறுவனம் பொது சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, புதுச்சேரி அரசை தொடர்பு கொண்டார்கள். புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (IGMCRI) ஆக்ஸிஜன் படுக்கைகள் தேவை என்ற தகவல் கிடைத்த பின்னர், Integra நிறுவனம், ரூ. 30.00 லட்சம் (சுமார் 40,000.00 USD) மதிப்பில் மருத்துவமனையில் இருக்கும் 161 படுக்கைகளை, ஒருங்கிணைந்த ஆக்ஸிஜன் பைப்லைன், புளோ மீட்டர் மற்றும் ஆக்ஸிஜன் ரெகுலேட்டர்கள் பொருத்தி 161 ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகளை நிறுவியுள்ளார்கள்.
மேலும் தமிழ் நாட்டில் COVID-19 நோய்த் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அரசு அனுமதித்த மருத்துவமனைகளுக்கு உதவுவதற்காக CII (Confederation of Indian Industries) மூலம் இந்த நிறுவனம் தமிழக அரசை தொடர்பு கொண்டது. Integra Software Services நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீராம் சுப்பிரமண்யா, உதவ முன்வந்த மற்ற 9 நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து சிங்கப்பூரிலிருந்து 1000 புதிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்தார். தருவிக்கப்பட்ட அனைத்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு. க. ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
Integra Software Services நிறுவனத்தைப் பற்றி
1994 ஆம் ஆண்டில் ஒரு கூட்டு அமைப்பாக நிறுவப்பட்டு மற்றும் 2000 ஆம் ஆண்டில் ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக இணைக்கப்பட்ட Integra Software Services நிறுவனம், உள்ளடக்க சேவைகள் மற்றும் டிஜிட்டல் தீர்வுகள் சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும், இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் மேலும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் இவர்களுக்கு அலுவலகங்கள் உள்ளன.
தொடர்பு
Prakash Nagarajan
DGM Marketing
+91-9566444960
[email protected]
Logo: https://mma.prnewswire.com/media/1532264/Integra_Logo.jpg
Share this article