கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய ஹேக்கத்தான் 'd3code'-யின் இரண்டாவது நிகழ்ச்சியை UST தொடங்கியிருக்கிறது
~ போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 5 அணிகளின் ஒவ்வொரு உறுப்பினரும் UST-ல் சேருவதற்கான வேலை வாய்ப்பைப் பெறுவார்கள் ~
~முதல் பரிசை வெல்லும் அணிக்கு இந்திய ரூ. 7 லட்சமும், இரண்டாவது பரிசாக 5 லட்சமும், 3-வது பரிசாக 3 லட்சமும் வழங்கப்படும்~
திருவனந்தபுரம், இந்தியா, Nov. 4, 2022 /PRNewswire/ -- கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூடி தங்களுடைய திறமையை மேம்படுத்திக்கொள்ளவும் வெளிக்காட்டவும் இந்தியாவின் மிகப்பெரிய ஹேக்கத்தான் 'd3code'-யின் இரண்டாவது நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக ஒரு முன்னணி டிஜிட்டல் டிரான்ஸ்ஃபார்மேஷன் தீர்வு நிறுவனமான UST அறிவித்துள்ளது. UST-யின் வருடாந்திர தொழில்நுட்ப மாநாடு D3-க்கு முன்னதாக, இளங்கலை அல்லது முதுகலைப் பட்டப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்காக இந்த ஹேக்கத்தான் நடத்தப்படும். கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கும் UST-ன் அதிநவீன தொழில்நுட்ப வளாகத்தில் அமைந்துள்ள D3 (டிரீம், டெவெலப் மற்றும் டிஸ்ரப்ட்) சமீபத்திய வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி UST-ன் இளம் அறிவுநுட்பம் கொண்டவர்கள் கற்கவும், போட்டியிடவும், ஒத்துழைக்கவும் மற்றும் மேம்படுத்தவும் வாய்ப்பளிக்கிறது.
2019-ல் தொடங்கப்பட்ட d3code (டிகோடு என உச்சரிக்கப்படுகிறது) என்பது உலகின் உண்மையான பிரச்சனைகளில் சிலவற்றுக்கு மாணவர்கள் தீர்வுகாண்பதற்கும், புத்தாக்கம், சிக்கல்களைத் தீர்த்தல், மற்றும் புரோகிராமிங் திறன்களுக்கான தங்களுடைய நாட்டங்களைப் பரிசோதிப்பதற்கும் ஒரு தளத்தை வழங்குவதற்கான UST-ன் முன்முயற்சியாகும். பங்கேற்பாளர்கள் D3 இணையதளத்தில் நவம்பர் 4-10, 2022-க்குள் ஹேக்கத்தானுக்குப் பதிவுசெய்யலாம்.
UST-யின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியான மனு கோபிநாத் இந்த நிகழ்வைப் பற்றிப் பேசுகையில், "சவாலான சிக்கல்களைத் தீர்க்க தொழில்நுட்பம் எவ்வாறு உதவும் என்பதை நிரூபிக்க வளரும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் புதுமையான சிந்தனையாளர்களுக்கு D3code ஒரு வாய்ப்பாகும். கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் இந்த ஆண்டு D3code 2022-ஐ மீண்டும் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் புதுமை மற்றும் தொழில்நுட்பத்துடன் நிஜ-உலக சவால்களைத் தீர்க்க இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பயிலும் அறிவுநுட்பம்கொண்ட மாணவர்களை எங்கள் அழகான தொழில்நுட்ப வளாகத்திற்கு வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.
ஹேக்கத்தான் சுற்றுகளும் நாட்களும்:
குழுத் தலைவர் உட்பட 2-4 உறுப்பினர்கள் ஒவ்வொரு அணியிலும் இருப்பார்கள். நிகழ்வில் மூன்று சுற்றுகள் இருக்கும். முதல் இரண்டு சுற்றுகள் ஆன்லைன் சுற்றுகளாக இருக்கும், ஒவ்வொரு சுற்றிலும் தேர்வு செய்யப்பட்ட அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
பதிவு மற்றும் யோசனை சமர்ப்பிப்பு - நவ. 4 - நவ. 10, 2022
சுற்று 1 - புரோகிராமிங் சவால் - நவ. 11 - நவ. 13, 2022
சுற்று 2 – முதல் 10 அணிகளுக்கான வீடியோ நேர்காணல் - நவ. 18 - டிச. 2, 2022
சுற்று 3 – முதல் 5 அணிகளுக்கான 24 மணி நேர ஹேக்கத்தான் - டிச. 11 - டிச. 12, 2022
முதல் 5 அணிகளுக்கு விருதுகள் - டிச. 15, 2022
இறுதியில் நேரடியாக நடைபெறும் ஹேக்கத்தான், UST திருவனந்தபுரம் வளாகத்தில், 24 மணி நேரப் போட்டியாக இருக்கும், இதில் தகுதிபெறும் அணிகள் தங்கள் யோசனைகளின் முன்மாதிரிகளை உருவாக்கி நடுவர் குழுவிடம் வழங்குவார்கள். நடுவர்களின் வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இறுதி நேரடி ஹேக்கத்தானில் கலந்துகொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 5 அணிகள், இந்தியாவின் கேரளாவில் உள்ள தமாராவின் O-ல் டிசம்பர் 15, 2022 அன்று நடைபெறும் D3 மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
பங்கேற்பாளர்கள் மிகச்சிறந்த பரிசுளை வெல்லுவதற்கு D3code 2022 ஒரு மிக அருமையான வாய்ப்பாக இருக்கும். முதல் பரிசு பெறும் அணிக்கு ஏழு லட்சம் இந்திய ரூபாயும், இரண்டாம் பரிசு பெறும் அணிக்கு ஐந்து லட்சம் ரூபாயும், மற்றும் மூன்றாம் பரிசு பெறும் அணிக்கு மூன்று லட்சம் ரூபாயும், மற்ற இரண்டு அணிகளுக்கும் ஆறுதல் பரிசாக தலா இரண்டு லட்சம் வழங்கப்படும். மேலும், போட்டியில் முதல் 5 இடங்களைப் பெறும் அணிகளின் ஒவ்வொரு உறுப்பினரும் UST இந்தியாவில் சேருவதற்கான வேலை வாய்ப்பைப் பெறுவார்கள்.
UST பற்றி:
22 ஆண்டுகளுக்கும் மேலாக, புரட்சிகரமாற்றத்தின் மூலம் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த உலகின் சிறந்த நிறுவனங்களுடன் UST இணைந்து பணியாற்றியுள்ளது. தொழில்நுட்பத்தால் உந்தப்பட்டு, மக்களால் உணர்வூக்கம் பெற்று, எம்முடைய நோக்கத்தால் வழிநடத்தப்பட்டு, வடிவமைப்பு முதல் செயல்படுத்துவதுவரை எங்களுடைய வாடிக்கையாளர்களுடன் நாங்கள் இணைந்து வேலை செய்கிறோம். எங்களுடைய அதிவேக அணுகுமுறையின் மூலம், அவர்களுடைய முக்கிய சவால்களை அடையாளம் கண்டு, அவர்களுடைய தொலைநோக்கிற்கு உயிரோட்டம் அளிக்கும் வகையில் மிகச்சிறந்த தீர்வுகளை உருவாக்குகிறோம். ஆழமான துறைசார் நிபுணத்துவம் மற்றும் எதிர்காலத்தைக் கடந்த தத்துவத்துடனும், நாங்கள் எங்களுடைய வாடிக்கையாளர்களின் நிறுவனங்களில் புதுமை மற்றும் சுறுசுறுப்பை உட்பொதிக்கிறோம் — அளவிடக்கூடிய மதிப்பையும், நீடித்த மாற்றத்தையும் தொழில்துறைகள் முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் வழங்குகிறோம். 30+ நாடுகளில் 30,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் சேர்ந்து, வரையற்ற தாக்கத்தை உருவாக்குகிறோம் — செயல்பாட்டில் பில்லியன் கணக்கான உயிர்களைத் தொடுகிறோம். எமது வலைதள முகவரி: http://www.ust.com/
ஊடகத் தொடர்புகள், UST:
டினு செரியன் அபிரஹாம்
+1 - (949) 415-9857
+91-7899045194
நேகா மிஸ்ரி
+91-9284726602
மெரிக் லாராவியா
+1 (949) 416-6212
[email protected]
ஊடகத் தொடர்புகள், U.S.:
S&C PR
+1-646.941.9139
[email protected]
மேகோவ்ஸ்கி
[email protected]
ஊடகத் தொடர்புகள், ஆஸ்திரேலியா:
டீம் லிவிஸ்
[email protected]
ஊடகத் தொடர்புகள், யு.கே.:
FTI கன்சல்டிங்
[email protected]
Share this article