இந்தியாவின் தலைசிறந்த தொழிற்பயிற்சி மையங்களில் ஒன்றான NETTUR TECHNICAL TRAINING FOUNDATION NTTF தொழிற்பயிற்சி மையம் தனது புதிய தொழிற்பயிற்சி மையத்தை விரைவில் திருச்சியில் தொடங்குகிறது.
பெங்களூர், May 29,2021 /PRNewswire/ -- இந்தியாவின் தலைசிறந்த தொழிற்பயிற்சி மையங்களில் ஒன்றான NETTUR TECHNICAL TRAINING FOUNDATION NTTF தொழிற்பயிற்சி மையம் தனது புதிய தொழிற்பயிற்சி மையத்தை விரைவில் திருச்சியில் தொடங்குகிறது.
ஆம்! NTTF தொழிற்பயிற்சியில் கடந்த 61 ஆண்டுகளாக சமூகத்திற்கு சேவை செய்து சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது என்பது அறிந்ததே!! தற்போது NTTF தங்களது புதிய தொழிற்பயிற்சி மையத்தை அலந்தூரில் J R பாலிடெக்னிக் வளாகம், திருச்சியில் தொடங்க உள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மிகவும் சிறந்த மற்றும் பெருமைமிக்க பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள் கொண்டுள்ள மாவட்டம் என்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்து வேலைவாய்ப்பிற்கு ஆயத்த படுத்துவதற்காக இங்கு தொடங்கப்பட இருக்கிறது.
NTTF 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் பயனடையும் வகையில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற 3 ஆண்டு டிப்ளமோ Mechatronics Engineering and Smart Factory என்ற படிப்பை திருச்சியில் தொடங்க இருக்கிறது. இப்படிப்பினை பயில அனைத்து அதிநவீன பயிற்சி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் NSQF - (தேசிய திறன்கள் மற்றும் தகுதிகள் வரைவு) தரத்தின் அடிப்படையில் NSDC (தேசிய திறன் மேம்பாட்டு கழகம்) மற்றும் SSC (திறன் துறை கழகம்) ஆகிய துறைகளால் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் மூன்று வருட டிப்ளமோ சான்றிதழுடன் இச்சான்றிதழையும் பெறுவார்கள்.
NTTF டிப்ளமோ உடன் சர்வதேச டிப்ளமோவையும் ஒரே சமயத்தில் மாணவர்கள் படிக்க இயலும்.
மூன்று ஆண்டுகள் முடிவில் சர்வதேச டிப்ளமோவில் தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு
இங்கிலாந்து நாட்டின் NOCN சர்வதேச சான்றிதழ் அளிக்கப்படும். இச்சான்றிதழைக் கொண்டு மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பினை பெற இயலும்.
ஐடிஐ ( ITI )முடித்த மாணவர்கள் இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை (LATERAL ENTRY) மூலம் தங்களது டிப்ளமோவை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்ய முடியும்.
தற்கால இளைஞர்களின் கனவுகளை நினைவாக்க "அவர்களின் எதிர்காலம் அவர்கள் கையில்" என்பதற்கேற்ப நிறுவனமானது தங்களது தொடர் முயற்சி மற்றும் பங்களிப்பு மூலமாக இந்த சமுதாயத்திற்கு தொழில் சார்ந்த பயிற்சிகளை வழங்கி வருகிறது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு ITI முடித்த மாணவர்கள் www.nttftrg.com எனும் வலைத்தளத்தில் Mechatronics Engineering and Smart Factory என்ற படிப்பிற்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். Toll free 1800 103 6883 | 6366824368 Maduri| 6366824366 Lebanon | 6366824367 Bhvani| Thiru9844836640
NTTF தொழிற்பயிற்சி மையம் 1959ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஸ்விட்சர்லாந்து நாட்டின் கூட்டு முயற்சியால் நிறுவப்பட்ட தொழில் பயிற்சி மையம் ஆகும். இம்மையம் இந்திய இளைஞர்களின் தொழிற்பயிற்சி திறனை மேம்படுத்துவதற்காக இந்தியாவில் தொடங்கப்பட்டது.
தொழிற்சாலை நிறுவனங்களுடன் சேர்ந்து பயிற்சி மையங்களை நிறுவுவதன் மூலம் மாணவர்களுக்கு தரமான திறமையான பயிற்சியை NTTF அளிக்கிறது. NTTF IMS ("ISO 9001, ISO 14001 & BS OHSAS 18001")சான்றளிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமாகும். அது மட்டுமல்லாமல் இந்தியாவில் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் 800க்கும் மேற்பட்ட பயிற்றுனர்களை கொண்டு இயங்கி இதுவரை 55 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. NTTF பாடத்திட்டங்கள் தற்போதைய தொழில் துறைக்கு ஏற்றவாறு பல கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை சார்ந்தவர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட்டு வருகிறது .
NTTF தனது பயிற்சிக்காக அதிநவீன உட்கட்டமைப்பை கொண்டுள்ள மையமாக உள்ளது. மேலும் நவீன CNC எந்திரங்கள், "Centre of Excellence in Automation" and "Centre of Excellence in Additive Manufacturing/ 3D Printing". துறைகளை கட்டமைப்பதில் NTTF திறமை மிக்கது.
இந்நிறுவனத்தில் பயிற்சிபெற்ற மாணவர்களை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நல்ல ஊதியத்திற்கு பணியமர்த்தி வியக்கதக்க சாதனை புரிந்துள்ளது.
NTTF நிறுவனமானது தங்களின் முழுமையான பயிற்சி முறைகள் மூலமாக இறுதி ஆண்டு மாணவர்களை நேர்காணலுக்கு தயார்படுத்துதல், தொழில்துறை விதிமுறைகளை கற்பித்தல், தன்னம்பிக்கை அளித்தல், மூலமாக அவர்களை நல்லதொரு இந்திய குடிமகனாக மாற்றுகிறது.
NTTF கடந்த 61 ஆண்டுக்கும் மேலாக இளைஞர்களின் வாழ்க்கையை தொழில்துறையில் மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களை தொழில்முனைவோர்களாகவும் மாற்றியுள்ளது . NTTF மாணவர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் நிலையை அறிவு சார்ந்த, சமூகம் சார்ந்த, மற்றும் தன்னிலை சார்ந்த ஆழ்ந்த மாற்றத்தை உணர்ந்து சிறந்ததொரு தலைமைத்துவம் வாய்ந்த குடிமகனாகவும் மாற்றுகிறது. NTTF பயிற்சியானது மாணவர்களின் எதிர்கால தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. NTTF பயிற்சியினால் கிடைக்கப்பெறும் பயன்கள் - பணி ஆயத்தப்படுத்துதல், தொழில் முன்னேற்றம் , தொழில்நுட்ப அறிவு, தொழில்திறன், வடிவமைப்பு திறன் , தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன் , செய்முறை பயிற்சி மற்றும் மாணவர்களின் அனைத்துவித ஆளுமை குணங்களையும் மேம்படுத்த உதவுதல்.
NTTF வழங்கும் அனைத்து பயிற்சியும் பணி சார்ந்த பயிற்சி, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் NTTF மூலம் நடத்தப்படும் வளாக நேர்காணல் மூலம் சிறந்த மற்றும் சர்வதேச நிறுவனங்களில் நல்லதொரு ஊதியத்துடன் பணியமர்த்த படுகிறார்கள். NTTF பயிற்சி 65 சதவிகிதம் செய்முறை பயிற்சியையும் 35% கருத்தியல் பயிற்சியையும் உள்ளடக்கியது.
இனிவரும் காலங்களில் தொழிற்சாலைகளில் அதிநவீன அறிவுசார்ந்த, செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் பயன்பாட்டில் அதிகமாக இருப்பதால் மெக்கட்ரானிக்ஸ் துறைக்கான தேவைகள் நீடிக்கும். மெக்கட்ரானிக்ஸ் ஆனது மெக்கானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்துள்ளது . இதன்மூலம் மெக்கட்ரானிக்ஸ் வல்லுநர்கள் இயல்பான அறிவுசார்ந்த கருவிகளை உருவாக்குகின்றனர். மெக்கட்ரானிக்ஸ் துறையின் மூலம் பெற்ற பல்துறை திறன் மற்றும் அறிவு மூலம் உறுதியான மற்றும் பொறியியல் சார்ந்த, குறிப்பாக தானியங்கு தொழில் துறையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு துல்லியமாக தீர்வு காண்கிறார்கள்.
NTTF எனும் பெயரானது குறிப்பாக தொழிற்சாலைகளிலும் , தானியங்கு தொழில் சார்ந்த துறைகளிலும், உற்பத்தி துறைகளிலும், எலக்ட்ரானிக்ஸ், மெக்கட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளிலும் கணினிப் பொறியியல் துறைகளிலும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
மாணவர்கள் பயிற்சியின்போது M/s BOSCH, CISCO, Intel, SIEMENS, FANUC, AWS Educate, UiPath, etc. போன்ற நிறுவனங்களுடன் இணைந்து தற்போதைய மற்றும் எதிர்கால தொழிற்துறைக்கு ஏற்றவாறு Industry 4.0, courses, #RPA, iOT, ML, AI போன்ற பயிற்சிகளையும் பெறுகிறார்கள்.
சுருக்கமாக சொல்லப்போனால் NTTF நிறுவனமானது பல்வேறு தொழிற்சாலையின் தேவைக்கேற்றவாறு திறன் சார்ந்த தனித்துவ பயிற்சிகளை வடிவமைத்து சிறப்பான முறையில் வழங்குவதற்கு தயாராக உள்ளது. தேசிய மற்றும் உலகளாவிய திறன் போட்டிகளில் NTTF மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார்கள் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறார்கள்.
தற்கால இளைஞர்களின் கனவுகளை நினைவாக்க "அவர்களின் எதிர்காலம் அவர்கள் கையில்" என்பதற்கேற்ப நிறுவனமானது தங்களது தொடர் முயற்சி மற்றும் பங்களிப்பு மூலமாக இந்த சமுதாயத்திற்கு தொழில் சார்ந்த பயிற்சிகளை வழங்கி வருகிறது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு ITI முடித்த மாணவர்கள் www.nttftrg.com எனும் வலைத்தளத்தில் Mechatronics Engineering and Smart Factory என்ற படிப்பிற்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். Toll free 1800 103 6883 | 6366824368 Maduri| 6366824366 Lebanon | 6366824367 Bhvani| Thiru9844836640
Photo - https://mma.prnewswire.com/media/1521493/NTTF_KTC_Robo.jpg
Share this article