இந்தியாவின் மிகப்பெரிய திறமை தேடல் உதவித்தொகை தேர்வுகளில் ஒன்றான TALLENTEX 2023 இன் தொடக்கத்தை Allen Career Institute அறிவித்துள்ளது
5 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 250 கோடி ரூபாய் மதிப்பிலான உதவித்தொகை மற்றும் 1.25 கோடி ரூபாய் வரை ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பு உள்ளது.
கோட்டா, இந்தியா, ஆகஸ்ட். 17, 2022 /PRNewswire/ -- இந்திய மாணவர்களுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட பயிற்சியின் முன்னோடியான Allen Career Institute (ACI), 5,6,7,8,9 & 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய திறமை தேடல் உதவித்தொகைத் தேர்வான 'TALLENTEX 2023' ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. கோட்டாவில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் ஆலன் கேரியர் இன்ஸ்டிடியூட் இயக்குநர்கள் டாக்டர் கோவிந்த் மகேஸ்வரி, திரு ராஜேஷ் மகேஸ்வரி, திரு நவீன் மகேஸ்வரி மற்றும் டாக்டர் பிரஜேஷ் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் TALLENTEX 2023 இன் போஸ்டரை வெளியிட்டனர், அதைத் தொடர்ந்து இணையதளம் மற்றும் சிற்றேடு வெளியிடப்பட்டது.
இந்த உதவித்தொகை குறித்து கருத்து தெரிவித்த ACI இன் இணை நிறுவனரும் இயக்குநருமான டாக்டர் பிரஜேஷ் மகேஸ்வரி, "TALLENTEX 2023 இந்தியா முழுவதும் உள்ள திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் மிகப்பெரிய தளங்களில் ஒன்றாகும். இந்த ஆண்டு ஒரே கட்டமாக ஆஃப்லைனில் வரும் 2022, அக்டோபர் 9ம் தேதி மற்றும் 16ம் தேதி மண்டல வாரியாக நடத்தப்படும். www.tallentex.com தளத்தில் மாணவர்கள் தங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ALLEN மையங்கள் அல்லது அவர்களின் பள்ளிகளில் கிடைக்கும் ஆஃப்லைன் படிவத்தை நிரப்பலாம். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் நவம்பர் 22-ம் தேதி நடைபெறும் சக்சஸ் பவர் அமர்வின் போது பாராட்டப்படுவார்கள்.
TALLENTEX 2023 இல் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் அந்தந்த வகுப்புகளில் தேசிய தரவரிசையைப் பெறுவார்கள், அதன் அடிப்படையில் அவர்களுக்கு 250 கோடி ரூபாய் மதிப்பிலான உதவித்தொகை மற்றும் INR 1.25 கோடி வரை ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். அந்தந்த வகுப்பிற்கான வரவிருக்கும் உயர்நிலைப் போட்டித் தேர்வுகளில் வெற்றிக்கான அவர்களின் திறனை மதிப்பிடுவதற்கு அவர்களுக்கு ஒரு போட்டி வெற்றிக் குறியீடு (CSI) வழங்கப்படும். CSI என்பது மாணவர்களின் செயல்திறனைக் காட்டும் ஒரு முழுமையான அறிக்கை மற்றும் தேசிய அளவிலான போட்டியில் அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிய உதவுகிறது. CSI அடிப்படையில், IIT-JEE, NEET (UG), சர்வதேச ஒலிம்பியாட் தேர்வுகள், KVPY, NTSE, CA, மற்றும் CS உட்பட, வரவிருக்கும் உயர்நிலைப் போட்டித் தேர்வுகளில் ஒரு மாணவர் தனது வெற்றிக்கான திறனை மதிப்பீடு செய்யலாம்.
2022 வரை சுமார் 10 லட்சம் மாணவர்கள் TALLENTEX தேர்வை எழுதியுள்ளனர்..
"போட்டித் தேர்வுகளில் ஆர்வமுள்ள மாணவர்கள் தேசிய அளவில் தங்கள் செயல்திறனை அளவிடுவதற்கு TALLENTEX உதவுகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, TALLENTEX போன்ற திட்டங்கள் மாணவர்கள் உயர்ந்த இலக்குகளை அடைய தங்கள் மனதிற்கு ஊக்கமளித்துக்கொள்ள உதவுகின்றன, மேலும் சேர்க்கைக்கான அதிகமான உதவித்தொகைகளைப் பெறுவதன் மூலம் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு ALLEN இல் மாணவராக இணைவதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர்," என்று ACI இயக்குனரான டாக்டர் கோவிந்த் மகேஸ்வரி மேலும் கூறினார்.
தேர்வின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள, www.tallentex.com இணையதளத்தில் கிடைக்கும் இலவச பயிற்சித் தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்கலாம். தேர்வு NCERT பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கும். தேர்வு பாடத்திட்டம் குறித்த விரிவான தகவல்கள் இணையதளத்தில் உள்ளன. பல தேர்வு வினாக்கள் மற்றும் முழு எண் வகை வினாக்களைக் கொண்ட தேர்வு இரண்டு மணி நேரம் நடைபெறும். மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் மற்றும் மன திறன் ஆகியவற்றிலிருந்து கேள்விகளை எதிர்பார்க்கலாம்.
Allen Career Institute
கோட்டாவில் 1988 இல் நிறுவப்பட்ட முதல் தொழில்முறைப் பயிற்சி நிறுவனமாகிய தி ALLEN Career Institute ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பயிற்சி அமைப்பிற்கு அடித்தளம் அமைத்து, அதை தொழில்துறையில் சமமான நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இன்று, கோட்டா "இந்தியாவின் கல்வித் தலைநகரம் (சிக்ஷா கி காசி) என்று அழைக்கப்படுகிறது. 'தரமான கல்வி' என்பதுடன் 'மதிப்புகள், ஒழுக்கம் & நெறிமுறைகள்' ஆஞவற்றையும் இணைத்து ALLEN பயிற்சி வழங்குகிறது. ALLEN இன் ஒப்பிடமுடியாத கற்பித்தல் மற்றும் சிறந்ததை வழங்குவதற்கான தேடலானது IITJEE & NEET நுழைவுத் தேர்வுக்காக மாணவர்களைத் தயார் செய்வதில் அதற்கு முன்னோடி அந்தஸ்தைப் பெற்றுத் தந்துள்ளது. IIT JEE (Adv.), JEE (Main), NEET-UG, KVPY, NTSE, ஒலிம்பியாட் தேர்வுகள், SAT, ACT, TOEFL, IELTS ஆகியவற்றில் 40க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிறந்த முடிவுகளை ALLEN பெற்றுள்ளது. 34 ஆண்டுகால வெற்றிப் பாரம்பரியத்துடன், ALLEN தொலைதூரக் கல்வித் திட்டம், ALLEN உலகளாவிய ஆய்வுகள், ALLEN ஆன்லைன் தேர்வுத் தொடர், ALLEN Pre-Nurture மற்றும் தொழில் அறக்கட்டளை, ALLEN வர்த்தகம், ALLEN IntelliBrain & SKOOLPlus மற்றும் ALLEN டிஜிட்டல் போன்ற முன்முயற்சிகளின் தொடக்கத்துடன் IITJEE & NEET பயிற்சியை விட அதிகமான பயிற்சிகளை வழங்குகிறது.
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1877403/Allen_Tallentex_2023_launch.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1877404/TALLENTEX_Logo.jpg
Share this article