Integra Software Services நிறுவனம், நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் COVID நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது
- இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவின் புதுச்சேரியில் இருக்கும் இந்த நிறுவனம், அதன் அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் காப்பீடு, அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை, COVID பராமரிப்பு மற்றும் நிவாரணம் மற்றும் COVID நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பிற்கு பிறகு தேவையான உதவி போன்ற திட்டங்களை வழங்கி வருகிறது.
புதுச்சேரி, இந்தியா, July 5, 2021 /PRNewswire/ -- Integra Software Services நிறுவனமானது நிறுவனத்தின் ஊழியர்கள், அவர்களின் மனைவி / கணவர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் இந்த பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு உறுதுணையாக இருக்கிறது. இந்த இந்திய நிறுவனம், இந்த பதட்டமான சூழ்நிலையில் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு உதவி செய்வதற்கு, நிறுவனத்தின் COVID பணிக்குழு மூலம் ஒருங்கிணைந்த செயல்திட்டங்களை மேற்கொள்வதில் உறுதியாக இருக்கிறது.
பெருந்தொற்று பரவ ஆரம்பித்தவுடனே, Integra நிறுவனம் முன்னேற்பாடாக நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பல்வேறு நல்வாழ்வு திட்டங்களை அறிவித்தது. இந்தியாவில் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் 2000 க்கும் அதிகமான ஊழியர்களுக்கு, பின்வரும் நல்வாழ்வு திட்டங்களை Integra நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
- காப்பீடு பாதுகாப்பு
- இந்தியாவில் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு உறுதிக்கு மேல் COVID சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் கூடுதலாக ரூ. 50,000 வழங்குகிறது.
- ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பு வழங்கும் ஒரு சில நிறுவனங்களில் Integra நிறுவனமும் ஒன்றாகும், பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பே இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது, (ஊழியர்கள் நல்வாழ்வு நடவடிக்கையாக, எந்தவொரு சட்டப்பூர்வமான ஆணையும் இல்லாமல், ஒரு ஊழியர் இறந்து போகும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வில் குடும்பத்தை ஆதரிப்பதற்காக இது மேற்கொள்ளப்பட்டது.)
- பாதுகாப்பு
- இந்தியாவில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கான COVID தடுப்பூசி செலவுகளை Integra நிறுவனமே ஏற்றுக்கொண்டது.
- அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு விழிப்புணர்வு தகவல்களை நாள்தோறும் அவர்களுடன் பகிர்ந்துகொண்டது.
- தொழிலுக்கு அவசியம் என்ற பட்சத்தில் அலுவலகத்திற்கு நேரில் வந்து பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் COVID மருத்துவ பரிசோதனை.
- அரசாங்க வழிகாட்டுதல்படி பணியிடத்தில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டது.
- அனைத்து ஊழியர்கள், அவர்களின் மனைவி /கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு COVID பராமரிப்பு மற்றும் அதன் பிறகு தேவையான உதவிகள்
- தொலைப்பேசி மற்றும் வீடியோ மூலம் மருத்துவ ஆலோசனை
- பாதிக்கப்பட்டவர்களுக்கு, அத்தியாவசிய மருந்துகள், நோய் எதிர்ப்புச் சக்தி பூஸ்டர்கள், உடல் ஆரோக்கிய இணை உணவுப்பொருட்கள், மாஸ்க்குகள், சானிடைசர் அடங்கிய கிருமி நீக்கம் செய்யப்பட்ட COVID மருத்துவ கிட்
- ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு COVID தொடர்பான அவசர தேவைக்கு உதவ அலுவலக வளாகத்தில் 24 x 7 நேரமும் ஒரு பிரத்தியேக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது
- மருத்துவமனையில் இடம், அத்தியாவசிய மருந்துகள், தனிமைப்படுத்துதல் மையங்கள், ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்குதல் போன்ற முக்கிய செயல்களுக்காக Integra நிறுவன ஊழியர்களால், Integra நிறுவன ஊழியர்களுக்காக 24 x 7 நேரமும் செயல்படும் ஆலோசனை மையம் அமைக்கப்பட்டது
- மருத்துவ உதவியாளர்கள், வருகை புரியும் மருத்துவர், அடிப்படை மருந்துகள், உணவு மற்றும் ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உடனான COVID தனிமைப்படுத்துதல் மையம்
- பெருந்தொற்றினால் ஏற்படும் பதற்றத்தையும் களைப்பையும் ஊழியர்கள் கையாள உள் ஆலோசகருடன் கூடுதலாக தகுதி பெற்ற புற ஆலோசகர்கள் உதவுவார்கள்
- ஊழியர்கள் தங்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவ மெய் நிகர் யோகா மற்றும் தியான அமர்வுகள்
- சுவாச செயல்பாடு மீள் அமைப்பு, ஆற்றல் மேம்பாடு, பதட்ட மதிப்பீடு மற்றும் நிவாரணம், நோய்த்தடுப்பு மற்றும் ஊட்டச்சத்து மற்றும் சத்தான ஆகாரம் ஆகியவற்றைக் கொண்ட ஊழியர்களின் மீட்பு செயல்முறையை துரிதப்படுத்தும் COVID-க்கு பிந்தைய பராமரிப்பு திட்டங்கள்.
நிறுவனமானது தங்கள் ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய பல்வேறு நிவாரண செயல்முறைகளை தொடர்ந்து அவர்களுக்கு தெரிவித்து வருகிறது. தீவிர ஆதரவினால் பல ஊழியர்கள் பயனடைந்துள்ளார்கள்.
1994 ஆம் ஆண்டில் ஒரு கூட்டு அமைப்பாக நிறுவப்பட்டு மற்றும் 2000 ஆம் ஆண்டில் ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக இணைக்கப்பட்ட Integra Software Services நிறுவனம், உள்ளடக்கச் சேவைகள் மற்றும் டிஜிட்டல் தீர்வுகள் சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும், இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் மேலும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் இவர்களுக்கு அலுவலகங்கள் உள்ளன.
தொடர்பு:
Prakash Nagarajan
DGM Marketing
+91-9566444960
[email protected]
Logo: https://mma.prnewswire.com/media/1532264/Integra_Logo.jpg
Share this article