India Bullion and Jewellers Association Ltd. (IBJA) மற்றும் All India Gem and Jewellery Domestic Council (GJC) நவி மும்பையில் 'Gold Craft' எனப்படும் ஒரு ஒருங்கிணைந்த ரத்தினங்கள், தங்கம் மற்றும் நகை உற்பத்திப் பூங்காவை அமைக்கவுள்ளது
நவி மும்பை, இந்தியா, ஆகஸ்ட் 19, 2022 PRNewswire/ -- The India Bullion and Jewellers Association Ltd (IBJA) and the All India Gem and Jewellery Domestic Council (GJC) ஆகியவை இணைந்து நவி மும்பையில் Gold Craft எனப்படும் ஒருங்கிணைந்த ரத்தினங்கள், தங்கம் மற்றும் நகை உற்பத்தி பூங்கா அமைப்பதற்கான திட்டங்களை இன்று வெளியிட்டன. இது Panchshil Realty யால் உருவாக்கப்படும்.
ரத்தினங்கள் மற்றும் ஆபரணத் துறை, வளர்ச்சியடைந்து அதன் முழுத் திறனை அடைய ஒரு முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை ஒரே இடத்தில் வழங்கும் இந்தியாவிலேயே முன்னணி வகிக்கும் இடமாக Gold Craft அமையும்.
தற்போது, தொழில்துறையின் வளர்ச்சி அடிப்படை நிலை மரபு சார்ந்த சிக்கல்கள் மற்றும் தடைகள் காரணமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. வணிகம் வளர்ச்சியடைய, அவை விரைவில் தீர்க்கப்பட வேண்டும். தொழில்துறை எதிர்கொள்ளும் முக்கியச் சவால்கள்:
- மோசமான வேலைச் சூழல்: கடுமையான இடக் கட்டுப்பாடுகள் காரணமாக கைவினைஞர்கள் சிறிய நெரிசலான அறைகளில் அமர்ந்து வேலை வேண்டிய மிகவும் மோசமான வேலை நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது திறமையின்மை மற்றும் அதிக ஆபத்துகளுக்கு வழிவகுக்கிறது.
- மாசு ஆபத்து: உற்பத்திச் செயல்முறையின் துணைத் தயாரிப்புகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது தற்போதைய பணிச் சூழலில் எப்போதும் சாத்தியமில்லை, இது செயல்பாடுகளில் இடையூறு விளைவிக்கலாம்.
- அதிக தளவாடச் செலவுகள்: பல்வேறு தொடர்புடைய சேவைகள் தற்போது நகரம் முழுவதும் பரவியுள்ளதால், தளவாடச் செலவுகள் அதிகரிக்கின்றன.
- பாதுகாப்பு: தனிப்பட்ட வணிகங்களால் உகந்த செலவில் மேம்பட்ட பாதுகாப்பு தீர்வுகளை வழங்க முடியாமல் போகலாம்.
- அணுகல்தன்மையில் தடைகள்: ஜவேரி பஜார் போன்ற தற்போதைய சந்தைப் பகுதிகளில் அதிக மக்கள் தொகை அடர்த்தி மற்றும் நெரிசல் காரணமாக வாகனங்களின் போக்குவரத்து வேகம் குறைந்து பார்க்கிங் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
- ஏற்றுமதி தொடர்பான சிக்கல்கள்: தற்போது, அங்கீகாரம் பெறுவதும், ஏற்றுமதி தொடர்பான நடைமுறைகள் மற்றும் உரிமத் தேவைகளுக்கு இணங்குவதும் சவாலாக இருக்கலாம்.
- தொழில்துறை மாவட்டத்தில் இருந்து செயல்படுவதால் எந்தப் பயனும் இல்லை: M.I.D.C போன்ற நியமிக்கப்பட்ட தொழில்துறை மாவட்டத்தில் கிடைக்கும் மலிவான மின்சாரம் போன்ற குறைந்த இயக்கச் செலவுகளுக்கான நன்மைகளை நகர அடிப்படையிலான உற்பத்தியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
இந்தப் பின்னணியில், தொழில்துறையினர் எதிர்கொள்ளும் இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்காக Gold Craft கருத்தாக்கப்பட்டுள்ளது.
Gold Craft - முக்கிய சிறப்பம்சங்கள்
Gold Craft என்பது ஒரு ஒருங்கிணைந்த ரத்தினங்கள், தங்கம் மற்றும் நகைகள் உற்பத்தி பூங்காவாகும், இது தொழில்துறையின் கைவினைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்குச் சாதகமான வாழ்க்கை முறை உட்பட அனைவருக்கும் சிறந்த பணி நிலைமைகளை வழங்கும்.
ஏறக்குறைய 23 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் Gold Craft 5 முக்கியக் கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
- உற்பத்தி நிலையம்: இது சோதனை செய்யப் பொருத்தமான தளவமைப்புகள் மற்றும் சேவை டேப்-ஆஃப்களைக் கொண்ட வெற்று-ஷெல் உற்பத்தி அலகுகளைக் கொண்டுள்ளது.
- கிராஃப்ட் ஆர்கேட்: இது கஃபேக்கள் மற்றும் உணவக விருப்பங்களுடன் கூடிய சில்லறை மற்றும் மொத்த விற்பனை அலகுகளைக் கொண்டுள்ளது.
- துணை சேவைகள் தளம்: நாணய பரிமாற்றம், வங்கிகள், ஹால்மார்க்கிங் சேவைகள், பாதுகாப்பான பெட்டக வசதி, வண்ணக் கற்கள் மற்றும் வைரங்களைச் சோதிக்கும் ஆய்வகங்கள் போன்ற பல சேவைகளை வழங்கும் துணை அலகுகள் மற்றும் பூங்காவில் உள்ள உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை அலகுகளுக்கு ஆதரவளிக்கும் செயல்பாடுகளை உள்ளடக்கியது.
- தங்குமிடம்: கைவினைஞர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான வீடுகளை வழங்கும் மூன்று பலமாடிக் கட்டிடங்கள்.
- பிளாட்கள்: ரத்தினங்கள், தங்கம், ஆபரண பிராண்டுகள் பெரிய உற்பத்தி அலகுகளை உருவாக்க Gold Craft பிளாட்களை ஒதுக்கியுள்ளது.
ஒருங்கிணைந்த பூங்காவின் நன்மைகள்:
- நவி மும்பையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் இந்தப் பூங்கா, உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும், இது தொழில்துறை மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி பார்க் கொள்கை 2018 உடன் Gold Craft இணங்குகிறது.
- இது தங்கம், ரத்தினம் மற்றும் நகைத் தொழிலில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் இடமாக இருக்கும்.
- உலகளாவிய EHS (சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு) விதிமுறைகளில் கவனம் செலுத்துவது சிறந்த பணி நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.
- நவீன காலப் பாதுகாப்பு, தொடர்புடைய சேவைகள் மற்றும் வசதிகளுடன் சிறந்த வணிக வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் அமைப்பு.
- கைவினைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை ஊக்குவிக்கும் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்ட முயற்சிகள்.
Gold Craft - மூலோபாயமான இடம்
- மும்பை-புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் நவி மும்பையில் உள்ள ஜூய்நகரில் Gold Craft மூலோபாய ரீதியாக அமைந்துள்ளது.
- அருகிலுள்ள ரயில் நிலையங்களில் ஜூய்நகர், கோபர்கைரானே, கன்சோலி மற்றும் மஹாபே ஆகியவை அடங்கும்.
- முக்கியமான இடத்திலும் மும்பைக்கு அருகாமையிலும் இருப்பதால், பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மற்றும் ஜவேரி பஜார் உள்ளிட்ட இடங்களுடனும் மும்பை நகரத்துடனும் தடையற்ற இணைப்பு உள்ளது.
- வரவிருக்கும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் இருப்பது ஏற்றுமதி மற்றும் அதனுடன் தொடர்புடைய வணிக நடவடிக்கைகளின் அடிப்படையில் தொழில்துறைக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.
- மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க் நவி மும்பைக்கு ஒரு புதிய அளவிலான இணைப்பைக் கொண்டுவரும்.
Gold Craft அறிமுகம் குறித்த தனது கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொண்ட The India Bullion and Jewellers Association Ltd (IBJA) தலைவர் Mr. Prithviraj Kothari, "தற்போது, தொழில்துறையானது தங்க உற்பத்தியில் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது, Gold Craft ரத்தினங்கள் மற்றும் நகை தொழில்துறை முழுவதிற்கும் இந்த நிலையை மாற்றும் ஒரு தீர்வை வழங்கி பெரும்பாலான பிரச்சனைகளைத் தீர்க்கும். உகந்த பணிச்சூழலை வழங்குவதோடு, ஒருங்கிணைப்பின் காரணமாக செலவுகளைக் குறைப்பதற்கான வாய்ப்பையும் வழங்குவதுடன், நமது உறுப்பினர்களுக்கு உலகளாவிய தரநிலைகளுக்கு இணங்க தங்கள் அலகுகளை இயக்க Gold Craft உதவும்".
"இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமான Panchshil Realty யால் Gold Craft உருவாக்கப்படும்" என்று Mr. Kothari மேலும் கூறினார்.
All India Gem and Jewellery Domestic Council (GJC) தலைவர் திரு. ஆஷிஷ் பேத்தே தனது கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொண்டார், "கடந்த சில ஆண்டுகளாக ஒரு வர்த்தகமாக இருப்பதில் இருந்து ஒரு தொழில்துறையாக மாறுவதற்கான தனது பயணத்தில் நிறைய மாற்றங்களைச் சந்தித்து வரும் எங்கள் தொழில்துறைக்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். மிகவும் மூலோபாய ரீதியாக அமைந்திருப்பதும் இணைக்கப்பட்டிருப்பதையும் தவிர, Gold Craft உலகின் சிறந்த தொழில்துறைப் பூங்காக்களுக்கு இணையாக இருக்கும்".
The World Gold Council (WGC) இந்தியாவின் நிர்வாக இயக்குநர் Mr. Somasundaram PR கூறுகையில், "Gold Craft என்பது மிகவும் அருமையான யோசனை! உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது, மக்கள் ஒரு பொருளை வாங்கும்போது அது நியாயமான முறையில் தயாரிக்கப்பட்டதா என்பதை அறிய விரும்புகிறார்கள். இந்தியாவில் நாம் உற்பத்தி செய்யும் அனைத்தும் ESG இணக்கம் உள்ளதாக இருக்க வேண்டும். இது இந்தியாவை மிகவும் வித்தியாசமாக நிலைநிறுத்தும். கைவினைஞர், ESG மற்றும் நாம் வணிகம் செய்யும் விதம் ஆகியவற்றின் மீதான கவனம், உண்மையில் தொழில்துறையை மிகவும் பொருள்சார்ந்த முறையில் மாற்றுவதாகும்".
தொழில் வளர்ச்சி மற்றும் சாத்தியம்
India Brand Equity Foundation-ன்படி, "பிப்ரவரி 2021 நிலவரப்படி, இந்தியாவின் தங்கம் மற்றும் வைர வர்த்தகம் இந்தியாவின் Gross Domestic Product (GDP) ~7.5% மற்றும் இந்தியாவின் மொத்த சரக்கு ஏற்றுமதியில் 14% பங்களித்தது. ரத்தினங்கள் மற்றும் நகைத் துறையில் 2020ல் ~5 மில்லியனில் இருந்து 2022ல் ~8.23 மில்லியன் நபர்களுக்கு வேலை கிடைக்கும்படி அதிகாரிக்கும். இந்தியாவின் ரத்தினங்கள் மற்றும் நகை சந்தையின் அளவு FY21 இல் 78.50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இந்தியாவின் ரத்தினங்கள் மற்றும் நகை ஏற்றுமதி 2021-22ல் 39.14 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 54.13% அதிகரித்துள்ளது. இந்திய அரசாங்கம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் (2025 வரை) 70 பில்லியன் அமெரிக்க டாலர் நகை ஏற்றுமதியை இலக்காகக் கொண்டுள்ளது, இது 2020 ஐவிட 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகமாகும்".
(ஆதாரம்: https://www.ibef.org/industry/gems-jewellery-india)
கொள்கைக் கட்டமைப்பு
ஒரு முற்போக்கான ஒழுங்குமுறை கட்டமைப்புடன் செயல்படுத்தும் மற்றும் ஆதரவளிக்கும் கொள்கைச் சூழலுடன், ரத்தினங்கள் மற்றும் நகை உற்பத்தித் துறையானது அதிகபட்ச வளர்ச்சியை அடையவும் மேலும் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கவும் தயாராக உள்ளது. IT-SEZ கொள்கை IT துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது போல், ரத்தினங்கள் மற்றும் நகைத் துறையும் ஒருங்கிணைந்த ரத்தினங்கள், தங்கம் மற்றும் நகைகள் உற்பத்தி பூங்காக்கள் அமைப்பதன் மூலம் ஒரு முழுமையை அடையும்.
IBJA - ஓர் அறிமுகம்
IBJA என்பது நகை மற்றும் பில்லியன் தொழில்துறையைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் வணிகர்களின் உயர்நிலை சங்கமாகும். இந்தியாவில் உள்ள புல்லியன் வியாபாரிகள் மற்றும் தங்க உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்களுக்கு பன்முக அணுகுமுறையை வழங்குவதற்காக 1919 இல் IBJA நிறுவப்பட்டது. IBJA பற்றிய கூடுதல் தகவலுக்கு, https://www.ibja.co/தளத்தைப் பார்க்கவும்
GJC - ஓர் அறிமுகம்
All India Gem and Jewellery Domestic Council (GJC) என்பது தொழில்துறை, அதன் செயல்பாடு மற்றும் அதன் வளர்ச்சி மற்றும் அதற்கான காரணத்தை மேம்படுத்துவதற்கும் முன்னேற்றுவதற்கும் 360° அணுகுமுறையுடன் நிறுவப்பட்ட ஒரு தேசிய வர்த்தகக் கவுன்சிலாகும். சுய-ஒழுங்குபடுத்தப்பட்ட வர்த்தக அமைப்பாக, GJC, கடந்த 17 ஆண்டுகளாக, அரசு மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு இடையே ஒரு பாலமாக சேவை செய்து வருகிறது, அத்துடன் தொழில்துறை சார்பாகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. GJC பற்றிய கூடுதல் தகவலுக்கு, https://www.gjc.org.in/
Panchshil Realty - ஓர் அறிமுகம்
2002 இல் நிறுவப்பட்ட Panchshil Realty இந்தியாவின் மிகச்சிறந்த லக்ஸரி ரியல் எஸ்டேட் பிராண்டுகளில் ஒன்றாகும். ரியல் எஸ்டேட் மேம்பாட்டில் தலைமை வகித்து சிறந்து விளங்கும் வகையில், திட்டமிட்ட வளர்ச்சி, மதிப்புமிக்க சொத்துக்களை உருவாக்குதல் மற்றும் வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலை மூலம் வாழ்க்கை முறை அனுபவங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் குழுவின் அணுகுமுறை கவனம் செலுத்துகிறது. Panchshil Realty பற்றிய கூடுதல் தகவலுக்கு,www.panchshil.com தளத்திற்குச் செல்லவும்.
பொறுப்புத் துறப்பு
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் - India Bullion and Jewellers Association (IBJA), All India Gem and Jewellery Domestic Council (GJC) ஆகியவை இந்தத் தகவல் கையேட்டில் துல்லியமான மற்றும் புதுப்பித்த தகவலைச் சேர்க்க அனைத்து நியாயமான முயற்சிகளையும் செய்கின்றன. இதில் உள்ள அல்லது குறிப்பிடப்பட்ட தகவலின் காலக்கெடு, துல்லியம் அல்லது முழுமை போன்றவற்றை வெளிப்படுத்தவோ அல்லது மறைமுகமாகவோ அவர்கள் எந்த உத்தரவாதங்களையும் அல்லது பிரதிநிதித்துவங்களையும் செய்ய மாட்டார்கள். அனைத்து படங்களும் பிரதிநிதித்துவ நோக்கத்திற்காக மட்டுமே. மேலும், இது Panchshil Realty, IBJA மற்றும் GJC ஆகியவற்றிலிருந்து எந்த வகையான சலுகையும் இதில் வழங்கப்படவில்லை. இது தகவல் மற்றும் குறிப்புக்காக மட்டுமே.
லோகோ: https://mma.prnewswire.com/media/1880665/Gold_Craft.jpg
Share this article