இலங்கையின் கொலும்பு நகரில் ல் 3-வது ரினீவபுள் எனர்ஜி குரோத் ஃபோரமில் RE துறையின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
- Renewable Energy India (REI) எக்ஸ்போவை ஒருங்கிணைத்தவர்கள்
மும்பை மற்றும் கொலும்பு, இலங்கை, Feb. 18, 2020 /PRNewswire/ -- இந்தியாவின் ஒரு முன்னணி B2B கண்காட்சி ஏற்பாட்டளரான Informa Markets in India (முன்னர் UBM India), மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 3-வது Renewable Energy Growth Forum-ஐ (13-14. பிப். 2020) இலங்கையின் கொலும்பு நகரில் உள்ள தாஜ் சமுத்ராவில் நடத்தியது. Ceylon Chamber of Commerce, Chamber of Construction Industry in Sri Lanka ஆகியவற்றின் ஆதரவைப் பெற்ற இந்த ஃபோரத்தில் ரினீவபுள் எனர்ஜி (RE) தொழில்துறையின் வாய்ப்பு வளங்கள் பற்றியும், கொள்கைகள் மற்றும் போக்குகள் பற்றியும், உலகளாவிய சந்தை பற்றியும், இலங்கையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான வாய்ப்புகள் பற்றியும், திட்டத்திற்கு நிதிவழங்கல் மற்றும் பிற விஷயங்கள் பற்றியும் பேசியது. ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்குமிக்க கண்காட்சியான ரினீவபுள் எனர்ஜி இன்டியா எக்ஸ்போவையும், சவுதி அரேபியா, துபாய், வியட்நாம் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பிற நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து நடத்தும் Informa Markets-ன் தனிச்சிறப்பைப் பெற்றுள்ள ரினீவபுள் எனர்ஜி குரோத் ஃபோரம் (Renewable Energy Growth Forum) மிக முழுமையான மற்றும் பிரபலமான தளமாக உள்ளது. இந்தியாவில் சண்டிகர் மற்றும் ஹூப்ளியுடன் RE Growth Forum-ன் முக்கிய இடமாக இலங்கை உள்ளது.
இந்த நிகழ்ச்சியை Ministry of Power & Energy-யின் பெரும் மதிப்பிற்குரிய Mahinda Amaraweera அவர்கள் தொடங்கி வைத்தார்; இலங்கையில் உள்ள Indian High Commission-ன் ஆக்டிங் ஹை கமிஷனரான திரு. Vinod Jacob; இலங்கையின் Ministry of Power-ன், அடிஷனல் செக்ரட்டரி (பவர் & எனர்ஜி)-ஆன செல்வி Indrani Vithanage; இலங்கையின் Public Utilities Commission-ன் டிரெக்டர் ஜெனரலான திரு. Damitha Kumarasinghe; International Renewable Energy Agency (IRENA)-யின் திரு.Toshimasa Masuyama, மற்றும் Informa Markets in India-ன் குரூப் டிரெக்டரான திரு. Rajneesh Khattar ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள்.
இலங்கையில் தற்போதுள்ள தற்போதைய புதுப்பிக்கவியலா ஆற்றல் வளங்களுக்கான செலவு அதிகமாக இருப்பதாலும், பசுமையில்ல வாயுக்களை அதிகமாக வெளியிடுவதாலும், நாட்டில் உள்ள நிறுவனங்களும் தொழில்துறைகளும் நாட்டுக்குள் சிறு மற்றும் நடுத்தர புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்புகளை விரிவுபடுத்துவதில் துடிப்புடன் பங்கேற்கின்றன. இதனால் இலங்கையின் எல்லைகளைக் கடந்த வளர்ச்சி கிடைக்கிறது. சமீபத்திய அறிக்கையின்படி, 2030-க்குள் இலங்கையின் மின் தேவையில் 80% அளவுக்கு புதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து உற்பத்தி செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இருப்பினும், இந்த மிகப்பெரிய இலக்கின் அர்த்தம், அரசு சில முக்கிய முடிவுகளை, குறிப்பாக புதுப்பிக்கத்தக்க மின்சக்தி அதிக விலையில் ஏற்கப்படுவதையும், அதை வழக்கமான நுகர்வு முறையில் திணிக்கவும் கொள்கை அளவில் சில முடிவுகளை மேற்கொள்ள இருக்கிறது என்பதே இதன் அர்த்தம்.
3-வது RE Growth Forum - Sri Lanka Chapter பற்றிப் பேசிய Informa Markets in India-வின் Managing Director-ஆன திரு. Yogesh Mudras பேசும்போது, "சமீப காலங்களில் தெற்காசியாவில் மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் இலங்கையும் உள்ளது. மின் நுகர்வு மிக அதிகமாக உள்ளது, கிராமப்புற விவசாயப் பொருளாதாரத்திலிருந்து நகர்ப்புற பொருளாதாரத்திற்கு கடந்த பத்தாண்டுகளில் மாறி வருகிறது. வளர்ந்துவரும் பொருளாதார வளர்ச்சி காரணமாக நாட்டில் மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. இது நாட்டின் தற்போதைய சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப அதிகரிக்கும். புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்கள் வழியாக நாட்டின் எல்லைக்குள் கிடைக்கும் நீடித்த மற்றும் மாற்று தீர்வுகளை நோக்கி நாடு செல்கிறது. சூரிய மற்றும் நீர்மின்சக்தியின் பயன்பாட்டை அதிகரிக்க பொது மற்றும் தனியார் துறைகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. இந்தச் சூழலில், சர்வதேச நிறுவனங்கள் தங்களுக்குள் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும், அறிவுசார்ந்து வளர்ச்சியைக் காணவும், சமீபத்திய போக்குகள் பற்றி அறிந்துகொள்ளவும், சிறந்த நடைமுறைகளை அறிந்து கொள்ளவும், தொழில்நுட்ப கலப்பினை சமநிலைப்படுத்தவும், எதிர்காலத்தைப் பற்றித் திட்டமிடவும் Renewable Energy Growth Forum ஒரு தளத்தை அளிக்கிறது. நம்முடைய 3-வது கண்காட்சியிலேயே, பார்வையாளர்களின் வளர்ச்சி 100%-ஐ எட்டியுள்ளது. இந்த ஆண்டும்கூட, எம்முடைய இலங்கை சேப்டருடன் சிறந்த கூட்டுச்செயல்பாடுகளும், நிகரற்ற அனுபவமும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்."
கண்காட்சியின் 2 நாட்களில், மின்சக்தி மற்றும் எதிர்காலத்துக்குரிய தொழில்நுட்பங்களுக்கான தேவையை எப்படி பூர்த்தி செய்வது என்பதைக் காண சூரிய, உயிரிஎரிவாயு மற்றும் காற்று மின்சக்தித் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், என்டர்பிரைஸ்கள், வங்கிகள், முதலீட்டாளர்கள், மின்உற்பத்தியாளர்கள், ரூஃப்டாப் மற்றும் கிரவுண்டு மவுண்டிங் சொலூஷன் புரொவைடர்கள், சிஸ்டம் இன்டகிரேட்டர்ஸ், இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்கள், மற்றும் ஃபிரைட் ஃபார்வர்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்து கலந்துரையாடினார்கள்.
இந்த மாநாட்டின்போது இரண்டு நாட்களும் தொடர்ந்து முக்கியமான அமர்வுகள் நடைபெற்றன. முதல் நாள் அமர்வின்போது, "லைட்டிங் தி ஃபியூச்சர் - ஹவ் லீடர்ஸ் ஆர் மேக்கிங் எ டிஃபரன்ஸ் ('Lighting the Future - How leaders are making a difference') என்ற தலைப்பின்கீழ் கொள்கை மற்றும் போக்குகள், உலகளாவிய சந்தைக் கண்ணோட்டம், இருநாட்டு வர்த்தகத்தின் பலன்கள், இலங்கையில் வாய்ப்புகள் மற்றும் திட்டத்திற்கு நிதிவழங்குதல் மற்றும் பல விஷயங்கள் பற்றி கலந்துரையாடினர்; அதைத் தொடர்ந்து, "எ பைலேட்டரல் பார்ட்னர்ஷிப் ஃபார் குளோபல் சொலூஷன்ஸ் - மிஷன் 2020 & பியாண்ட்" ('A Bilateral partnership for Global Solutions - Mission 2020 & Beyond') என்ற தலைப்பின்கீழ் நாட்டின் எல்லைக்குள்ளும் அதற்கு அப்பாலும் பலமடங்கு வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிப் பேசினர்; அதைத் தொடர்ந்து 'டெக்னாலஜி அட்வான்டேஜ்" ('Technology Advantage') என்ற தலைப்பில் ஒரு பிரசன்டேஷன் அளிக்கப்பட்டது; பின்னர், "ஃபினான்சிங் ஃபார் டெவெலப்மெண்ட் - பெய்ண்டிங் எ பிரைட்டர் ஃபியூச்சர் டுகேதர்" ('Financing for Development - Painting a brighter future together') என்ற தலைப்பின்கீழ் நடந்த குழுவிவாதத்தில் திட்டத்தின் மிக முக்கியமான மற்றும் ஒருங்கிணைந்த அங்கமான விஷயங்கள் பற்றிப் பேசப்பட்டது, நுண்ணிய அளவிலிருந்து தொடங்கி மிகப்பெரிய அளவுவரை எல்லா விஷயங்களும்பற்றிப் பேசப்பட்டது. திட்ட வளர்ச்சிக்கு நிதியளித்தல் பற்றியும் பேசினர்.; "ஷேப்பிங் தி ஃபியூச்சர் டெக்னாலஜி: அப்டேட்ஸ் & இன்னோவேஷன்ஸ்" ('Shaping the FutureTechnology Updates & Innovations') என்ற தலைப்பின்கீழ் புத்தாக்கம் செய்தவர்கள் தங்களுடைய புதிய மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை காடசிப்படுத்தியதோடு, சூரிய & ஆற்றல் சேமிப்பு திட்டங்களை நிர்வகிப்பதில் உள்ள சிறந்த நடைமுறைகள் பற்றி எத்துரைத்தனர்; 'இன்கிரீஸிங் சோலார் அடாப்ஷன் - டு கோ டிஸ்ட்ரிபியூட்டட் ஆர் யுட்டிலிட்டி ஸ்கேல்? தி புரோஸ், கோன்ஸ் அன்டு குளோபல் எக்ஸ்பிரியன்ஸ்"('Increasing Solar Adoption - To Go Distributed or Utility Scale? The Pros, Cons and Global Experience') என்ற தலைப்பின்கீழ் மொடாலிட்டிகள், டிஸ்ட்ரிபியூட்டட் மற்றும் யுட்டிலிட்டி ஸ்கேல் திட்டங்களை நிறுவுதல் மற்றும் தொடங்குதலுக்கான செலவுகள் பற்றியும், ஆண்டின் இறுதிக்கான திட்டமிடப்பட்டுள்ள விஷயங்கள் பற்றியும் அமர்வுகள் இருந்தன.
2-ஆம் நாளில் ஃபூயலிங் என்டர்பிரைஸஸ் வித் ஸ்மார்ட் எனர்ஜி சொலூஷன்ஸ் - தி அன்டோல்டு சக்சஸ் ஸ்டோரி ('Fuelling enterprises with smart energy solutions - the untold success story'); 'டெக்னாலஜி டிரான்ஸ்ஃபார்மேஷன்: CXO டயலாக்" ('Technology Transformation: CXO Dialogue'); "லேர்ன் இட் ஃபிரம் எக்ஸ்பர்ட்ஸ்: பெஸ்ட் பிராக்டிசஸ் யு நீட் டு நோ" ('Learn it from experts: Best Practises you need to know.') ஆகிய தலைப்புகளிலும் அமர்வுகள் இருந்தன.
கீழ்க்காணும் பேச்சாளர்கள் இந்த சர்வதேச ஃபோரத்தில் பேசினர்:
- திரு. Nissanka N Wijeratne, செக்ரட்டரி ஜெனரல் மற்றும் CEO, Chamber of Construction Industry, இலங்கை
- டாக்டர்P.S.N De Silva, ஹெட் ஆஃப் இன்ஜினியரிங், Lanka electricity Company (Private) limited
- டாக்டர் Anuvrat Joshi, ஹெட் - பிஸினஸ் டெவலெப்மெண்ட், Cleantech Solar (இந்தியா)
- திரு. Rohit Kumar, ஹெட் ஆஃப் இன்டியன் சப்காண்டினன்ட் - REC Solar pte Ltd
- திரு. Vinay Kumar, CEO, Varp Energy
- திரு. Akilur Rahman, CTO, ABB India Limited
- திரு. Samir Mehta, CEO, Bergen Solar Power and Energy Limited
- செல்வி Ishani Palliyaguru, வைஸ் பிரசிடென்ட்- பிராஜெக்ட் அன்டு ஃபினான்ஸ் அன்டு கார்ப்பரேட் கிரெடிட் கண்ட்ரோல், National Development Bank PLC
- திரு. Kamal Dorabawila, பிரின்சிபல் இன்வெஸ்ட்மெண்ட் ஆஃபீஸர், IFC - International Finance Corporation
- திரு. Lakshman Jayasekara, பிரஜெக்ட் டிரெக்டர், Western Region Megapolis Planning Project
- திரு. Vinay Rustagi, மேனேஜிங் டிரெக்டர், Bridge to India ஆகியவர்கள் பங்கேற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து http://www.informamarkets.com/ என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
ரோஷினி மித்ரா
[email protected]
மிலி லால்வாணி
+91-22-61727000
[email protected]
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா (Informa Markets in India)
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1090129/Dignitaries_Inaugration_RE_Forum.jpg
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1090130/Light_Lamping_RE_Growth_Forum.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1090144/REIGF_RE_Growth_Forum_Logo.jpg
Share this article