IFSEC India 2019: செக்யூரிட்டி தொழில்துறையின் முன்னேற்றம் மற்றும் நோக்கத்தின் வினையூக்கியாக உள்ள இம்மாநாடு கிரேட்டர் நொய்டாவில் இன்று தொடங்குகிறது
Informa Markets in India-வினால் நடத்தப்படும் 13-வது தெற்காசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிகழ்வு
- தொழில்நுட்ப மாற்றம், உலகளாவிய விழிப்புணர்வு, தொழில்துறையின் மிகச்சிறந்த நடைமுறைகளுக்கான ஒரு தளம்
- 300-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச பிராண்டுகளுக்கான கண்காட்சி
- தலைமை விருந்தினராகிய கவுதம புத்த நகரின் மாவட்ட நீதிபதியான திரு. B N Singh, IAS அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது
- இந்திய தனியார் பாதுகாப்புத் துறையினர் 70 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது
- இந்தியாவில் பாதுகாப்புச் சந்தை 14% CAGR அளவுக்கு வளர்ச்சி கண்டு வருகிறது
புது டெல்லி, Jan. 2, 2020 /PRNewswire/ -- Informa Markets in India (முன்னர் UBM India)-வினால் நடத்தப்படும் தெற்காசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு, குடிமைப் பாதுகாப்பு மற்றும் தீ பாதுகாப்புக் கண்காட்சியான International Fire & Security Exhibition and Conference (IFSEC) India Expo கிரேட்டர் நொய்டாவில் தனது 13-வது 3 நாள் கண்காட்சியைத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கவுதம புத்தர் நகரின் மாவட்ட குற்றவியல் நடுவரான ஸ்ரீ B N Singh, IAS அவர்களால் உத்தரப் பிரதேச அரசின் First Senior Defence Advisor-ஆன Lt. Gen. (retd) J. K. Sharma, PhD, AVSM, மற்றும் Delhi Metro Rail Corporation-ன் Chief Security Commissioner-ஆன திரு. M. S. Upadhye, IPS; ASSOCHAM Homeland Security Council-ன் Co-Chair-ஆன திரு. Anil Dhawan; Asian Professional Security Association (APSA)-ன் President-ஆன திரு. Shiv Charan Yadav; Informa Markets in India-வின் Managing Director-ஆன Mr. Yogesh Mudras மற்றும் Informa Markets in India-வின் Group Director-ஆன Mr. Pankaj Jain ஆகியோரின் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.
சீனா, தாய்வான், தென் கொரியா, மலேசியா, லித்துவேனியா, செக் ரிபப்ளிக், யுகே, ரசியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற 15-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இந்த மூன்று நாள் கண்காட்சியில் கலந்துகொள்கின்றனர். 300-க்கும் மேற்பட்ட உலகளவில் பிரபலமான பிராண்டுகள், முக்கிய அரசு அதிகாரிகள், ஆலோசகர்கள், தொழில் நிபுணர்கள் சங்கமிக்கிறார்கள். American Society for Industrial Security (ASIS) மும்பை, ASIS பெங்களூரு, ASIS மும்பை, ASIS டெல்லி, Asian Professional Security Association (APSA), Central Association of Private Security Industry (CAPSI), Overseas Security Advisory Council ( OSAC), Electronic Security Association of India (ESAI), Indian Institute of Drones (IID), Global Association of Corporate Services (GACS), SECONA மற்றும் Assocham ஆகிய நிறுவனங்கள் ஸ்டிராடஜிக் பார்ட்னர்களாகவும் Mitkat Advisory நாலெட்ஜ் பார்ட்னராகவும் இருக்கும் இந்தக் கண்காட்சியில் சர்வதேச அளவில் பிரபலமான கண்காட்சியாளர்களும், ஆலோசகர்களும், தொழில் நிபுணர்களும் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளும் ஒரே தளத்தில் சங்கமித்திருக்கிறார்கள்.
இந்திய பாதுகாப்புச் சந்தை 14% அளவுக்கு CAGR வளர்ச்சியைக் கண்டு வருகிறது. தொழில் வளாகங்கள், பொது உட்கட்டமைப்பு, குடியிருப்பு வளாகங்கள் போன்ற கூடுதல் உட்கட்டமைப்புகள் இந்த வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'Smart Cities' மற்றும் 'Make in India' போன்ற அரசு முன்முயற்சிகளும் இந்த வளர்ச்சி வாய்ப்புக்கு மேலும் உத்வேகம் அளித்துள்ளது. இந்திய தனியார் பாதுகாப்புத் துறையினரும் 70 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. இது மேலும், இத்துறையின் அளவு அதிகரிக்கையில் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகளிலும் ஏடிஎம்-களிலும் காவலாளிகளை நியமிப்பது கட்டாயம் என்ற அரசின் கொள்கை மற்றும் பல்வேறு இடங்களில் CCTV கேமராக்களை நிறுவுவது போன்றவையும் இந்தத் தேவையை மேலும் அதிகரித்துள்ளது. உதாரணமாக, இந்தியாவில் சுமார் 15 லட்சம் கல்வி நிறுவனங்கள் உள்ளன என்றால், 24 மணி நேரத்துக்கும் 3 காவலாளிகள் கட்டாயமாக நியமிக்கப்படும்போது 45 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
கௌதம புத்த நகரின் மாவட்ட குற்றவியல் நடுவரான திரு. BN Singh, IAS, பேசும்போது, "உள்நாட்டுப் பாதுகாப்பு என்று வரும்போது நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.. குடிமைச் சமூகங்கள் மிகவும் சிக்கலாக மாறிவிட்டன. நகர்வுகளைக் கண்காணிப்பதற்கு, காவல் அவசியமாகிறது. AI போன்ற உயர் தொழில்நுட்பங்கள் இன்றைய தேவையாகிவிட்டன. புலப்பெயர்ச்சி நடக்கும் சமயத்தில், பெயரறியா உணர்வு இருப்பதால், பாதுகாப்பு அபாயம் அதிகமாகிறது. ஒரு கருத்தை மக்கள்மயமாக்குவதும், அந்த யோசனையை மிக வலுவோடு சமூகத்தில் பரப்புவதும் மிக அவசியமாகிறது. கடந்த ஆண்டுகளில் தொலைத் தகவல்தொடர்பிற்கு முக்கியத்துவம் அளித்ததுபோன்று, பாதுகாப்பும் மலிவானதாகவும், எளிதில் கிடைப்பதாகவும் செய்வதோடு, மக்கள் அதன் பயன்பாட்டைப் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்த வேண்டும்" என்றார்.
"நிர்வாகத்தின் சார்பாக தேவையானவற்றை நாங்கள் செய்வோம். இப்படிப்பட்ட கண்காட்சிகள் வருங்காலத்திலும் தொடர்ந்து நடைபெற வேண்டும். உரிய எல்லா சாதனங்களையும் தொழில்நுட்பங்களையும் எல்லா நிறுவனங்களும் காட்சிப் படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்று மேலும் திரு. Singh குறிப்பிட்டார்.
IFSEC India-வின் 13-வது கண்காடசி பற்றி Informa Markets in India-வின் Managing Director-ஆன Mr. Yogesh Mudras பேசும்போது, "பாதுகாப்பு யுத்தியை மீட்டமைப்பதும், உயர் தொழில்நுட்பங்கள் பற்றிப் பேசுவதும், நாட்டிற்கும் நிறுவனங்களுக்குமே இன்றை அவசியமாகியுள்ளது. இந்திய அரசின் முற்போக்கான கொள்கைகள், தொழில்கள் சுலபமான வளர்ச்சியைக் காண்பதற்கான ஒரு சூழலைத் தருகிறது. இந்த வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைய ஒரு தொழில்துறை அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் இது மிகப்பெரிய சந்தையை முன்னணி நிறுவனங்களுக்குத் திறந்து விடும். ஸ்மார்ட் தொழில்நுட்ப யுகத்தில் ஸ்மார்ட் நகரங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப ஸ்மார்ட் செக்கியூரிட்டி மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் மிகவும் அவசியமாகும். வரும் காலங்களில் இந்தப் போக்கினை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்ல தொழில்துறையின் ஆதரவையும் ஊக்குவிப்பையும் எதிர்பார்க்கிறோம்" என்றார்.
"தொழில்துறையினர் இணைந்து கருத்துக்களை உருவாக்கி, புத்தாக்கம் செய்து தடுப்பு அணுகுமுறையிலிருந்து ஒரு கண்காணிப்பு மற்றும் பதிலிருப்பு அணுகலுக்கான இந்தியாவின் பாதுகாப்பு கருத்தியல் மாற்றத்திற்கான புதிய பாணிகளைக் கண்டறிவதற்கான தளத்தை அளிப்பதன் மூலம் IFSEC India 2019-வானது இந்த வேகமாக வளர்ந்து வரும் துறையின் வளர்ச்சிக்கு ஒரு பாலமாகச் செயல்படுகிறது.
IFSEC எடுத்திருக்கும் முன்முயற்சிகளைப் பாராட்டி Committee on Homeland Security- ASSOCHAM-ன் Co-chairman-ஆன திரு. Anil Dhawan பேசும்போ "கடந்த 13 ஆண்டுகளாக இந்தத் தளமானது எல்லா பங்குரிமையாளர்களுக்கும் மிகச்சிறந்த விஷயங்களை அளிப்பதில் முன்னிலை வகித்திருக்கிறது. பலமான பாதுகாப்புப் பின்னணிகொண்ட பாதுகாப்பு தொழில்முறையாளர்களுக்காக இந்தத் தளம் உருவாக்கப்பட்டது. செயற்கை அறி திறன் (ஆர்ட்டிஃபீசியல் இன்டெலிஜென்ஸ்), எந்திரக் கற்றல் (மெஷின் லேர்னிங்), க்ளௌடு கம்ப்யூட்டிங் ஆகியவைதான் வருங்காலங்களில் பாதுகாப்புத் துறையின் முக்கியமான பானிகளாக அமைய உள்ளன. IFSEC 2019-ன் ஸ்டிராடஜிக் பார்ட்னராக இருப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்" என்றார்.
இந்தியப் பாதுகாப்பு மிகப்பொறுப்பான ஒரு பணியாக தொடர்ந்து இருப்பதால், IFSEC India 2019-யானது, உலகளாவிய பாதுகாப்புச் சந்தையில் கிடைத்த உரிய அறிவையும் ஏரியல் வெஹிக்கிள்ஸ் மற்றும் டிரோன்ஸ் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்களின் பயன்பாட்டினால் கிடைத்த அறிவையும் பகிர்ந்துகொள்ள கண்காட்சியோடு சேர்த்து "பவர் இன்சைட்ஸ் இன்டு தி வேர்ல்ட் ஆஃப் செக்கியூரிட்டி" என்ற தலைப்பின்கீழ் இரண்டு நாட்கள் மாநாட்டையும் நடத்த முடிவெடுத்தது. "டெவலப்பிங் கேபபிலிட்டிஸ் ஃபார் ஹோம்லேண்ட் செக்கியூரிட்டி - ரோல் ஆஃப் தி இன்டஸ்ட்ரி, இன்டஸ்ட்ரி பெர்ஸ்பெக்டிவ் ஆன் எலக்ட்ரானிக் செக்கியூரிட்டி- I, இன்டியா இஸ்ரேல் கோஆப்பரேஷன் இன் டிஃபென்ஸ் அன்டு ஹோம்லேண்ட் செக்கியூரிட்டி" போன்றவை கண்காட்சியின் முதல் நாளில் கலந்துரையாடிய சில தலைப்புகளில் சில.
"IFSEC India கண்காட்சியானது இறுதிப் பயனர்கள் மற்றும் அளிப்பவர்களின் அறிவுக்கான கண்காணிப்போடுகூட CCTV & சர்வெய்லன்ஸ், பயோமெட்ரிக்ஸ் & RFID, இன்டகிரேட்டட் சிஸ்டம்ஸ், அக்சஸ் கண்ட்ரோல், GPS சிஸ்டம்ஸ், வீடியோ மேனேஜ்மெண்ட், பார்க்கிங் ஆட்டோமேஷன், டிரான்ஸ்போர்ட், பெரிமீட்டர் புரொட்டெக்ஷன், IoT, ஸ்மார்ட் ஹோம்ஸ், செக்கியூரிட்டி & சேஃப் சிட்டீஸ் போன்ற அதி நுட்பமான தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியது. முக்கியமான உலகளாவிய பிராண்டுகள் & வினியோகிப்பாளர்களில் அடங்கும் பிரீமியர் பிளஸ் பார்ட்னர்கள்: Aditya Infotech, CP Plus, Enterprise Software solutions Limited (eSSL), Ezviz, Globus Infotech, Markon, Ozone Overseas, Prama Hikvision, Syrotech, Teltonika மற்றும் பிரீமியர் பார்ட்னர்களில் Facego, Hogar, Netgear, Perto Catrax, Pictor, Seagate, True View, Zebronics போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்த ஆண்டு, IFSEC India-வானது தன்னுடைய 4-வது IFSEC India Awards-ஐ வழங்க உள்ளது. BFSI, சில்லறை, உற்பத்தி, ஆற்றல், சுகாதாரப் பராமரிப்பு, PSUs, IT & ITES மற்றும் உட்கட்டமைப்பு போன்ற பல்வேறு தொழில்துறையில் மின்னணுப் பாதுகாப்பு, நேரடி பாதுகாப்பு மற்றும் தீ பாதுகாப்புக்குப் பின்னால் உள்ளவர்களை அனைவருக்கும் வெளிக்காட்டும் வகையில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஆற்றல்மிக்க பாதுகாப்பை உறுதிப்படுத்த திரைமறைவில் தொடர்ந்து பணியாற்றும் CSOs & பாதுகாப்பு அதிகாரிகளின் தனிச்சிறப்பையும் புதுமைகளையும் விருதுகள் கௌரவப்படுத்தும். IFSEC India Awards-கான செயல்முறை ஆலோசகர்களாக EY இருப்பார்கள்.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை இன்ஃபோர்மா மார்க்கெட் உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்து வருகிறது. இந்தியாவில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
ரோஷினி மித்ரா
[email protected]
மிலி லால்வாணி
[email protected]
+91-9833279461
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா (Informa Markets in India)
லோகோ: https://mma.prnewswire.com/media/1056200/IFSEC_India_Logo.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1057564/IFSEC_India_2019_Inauguration.jpg
Share this article