COVID-19-ன் பாதிப்பைக் குறைக்க Panchshil Realty மும்முனை CSR முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது
- Panchshil Foundation-ன் CSR பிரிவு அன்றாட கூலித் தொழிலாளிகளுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குகிறது; National Disaster Response Force-உடன் இணைந்து அதிகமாக தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்புள்ள சமூகங்களுக்கு விழிப்புணர் அளிக்கிறது; பூனேயில் COVID-19 நோயாளிகளைக் கையாளும் மருத்துவக் குழுக்களுக்கு 10,000 PPE Kits-ஐ வழங்கியுள்ளது.
பூனே, India, April 14, 2020 /PRNewswire/ -- முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பர்களில் ஒரு நிறுவனமாக உள்ள Panchshil Realty-யின் CSR பிரிவான Panchshil Foundation, பூனே பகுதியில் வாழும் தினக்கூலிகளுக்கு https://www.panchshil.com/COVID-19-ன் பாதிப்பினைக் குறைக்க பலமுனை முன்முயற்சியில் இறங்கியுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
முதல் கட்டமாக, நாவல் கொரோனாவைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக எல்லா பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கிப் போனதன் காரணமாக எல்லா வருவாய் ஆதாரங்களையும் இழந்து தவிக்கும் தினக்கூலிகளுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் முட்டைகள் அடங்கிய அப்படையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உணவுப் பொட்டலங்களை வழங்குகிறது.
கடந்த 12 நாட்களில், Collector of Pune அலுவலகம் மற்றும் Corporators போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஒத்துழைப்போடு பூனேயில் உள்ள பல்வேறு பகுதிகளில் 12,000-க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை வழங்கியுள்ளது.
அடுத்த 6 வாரங்களுக்கு ஒவ்வொரு வாரமும் 8000 உணவுப் பொட்டலங்களை வழங்க இலக்கு நிர்ணயித்திருக்கிறது. Panchshil Realty-யின் விருந்தோம்பல் போர்ட்ஃபோலியோவின் அங்கமாக உள்ள The Ritz-Carlton, பூனே, JW Marriott பூனே, கோர்ட்யார்டு பை Marriott, Hinjewadi, பூனே மற்றும் Marriott Suites, பூனே ஆகிய இடங்களில் இந்த உணவுப் பொட்டலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
இரண்டாவதாக, இந்த முன்முயற்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் பூனேயில் இருக்கும் National Disaster Response Force (NDRF)-ன் 5-வது பட்டாலியன் -உடன் இணைந்து COVID-19 பற்றிய விழிப்புணர்வையும், சமூக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பொதுமக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வையும் அளித்து வருகிறது.
இந்தக் கூட்டு முயற்சி கடந்த April 8, 2020-அன்று தொடங்கப்பட்டது, NDRF-ன் 7 நிபுணர்கள் Wagholi, பூனேயில் உள்ள 2 தொழிலாளர் முகாம்களில் இந்த சிறப்பு சமுதாயக் கல்வி முயற்சியில் இறங்கினார்கள். கை சுத்தம் பேணுவது எப்படி என்றும், பாதுகாப்பாக இருப்பதற்கு எடுக்க வேண்டிய பிற வழிமுறைகள் என்ன என்றும் அவர்கள் விளக்கினார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது NDRF குழுவும் உணவுப் பொட்டலங்களை வழங்குவதில் உதவியளித்தது. இந்தக் கூட்டு முயற்சி தொடரும்.
NDRF என்பது இரசாயன, உயிரியல், கதிரியக்கவியல்சார் மற்றும் அணு அழிவுகள் உட்பட்ட இயற்கை மற்றும் மனிதரால் ஏற்படுத்தப்படும் பேரழிவுகளுக்கு சிறப்பான மற்றம் நிபுணத்துவமிக்க பதிலை அளிக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட ஒரு மேம்பட்ட, சிறப்புப் பயிற்சி பெற்ற மற்றும் முழு ஈடுபாடுள்ள குழுவாகும்.
மூன்றாவது CSR முன்முயற்சியாக Panchshil Foundation அடுத்த சில வாரங்களில் 10,000 Personal Protection Equipment (PPE) கிட்டுகளை COVID-19 தொற்றுள்ள நோயாளிகளைக் கையாளும் பூனேயில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள மருத்துவக் குழுக்களுக்கு அளிக்க இருக்கிறது.
இந்த முன்முயற்சி பற்றிப் பேசிய Panchshil Realty-யின் Chairman-ஆன Atul Chordia, பேசும்போது, "ஆயிரக்கணக்கான தினக் கூலிகள் எந்தவிதமான வருவாய் ஆதாரமும் இல்லாமல், உணவு போன்ற அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக்கூட கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறிதளவு உடனடி நிவாரணத்தை அளிப்பதற்காக Panchshil Foundation இத்தகை பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உணவுப் பொட்டலங்களை அளிக்கத் தொடங்கியிருக்கிறது. அதேபோன்று, COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவக் குழுக்களுக்கு அதிகமான PPE கிட்டுகள் தேவைப்படுகின்றன. Foundation இந்தக் கிட்டுகளை விரைவில் அளிக்கத் தொடங்கும்" என்றார்.
மேலும் அவர் பேசும்போது, "பாதுகாப்பாக இருப்பது எப்படி என்று பாதிக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க எங்களோடு கைகோர்த்துள்ள NDRF-ன் 5-வது பட்டாலியன் , பூனேக்கு எங்களுடைய பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய கார்ப்பரேட் ஆக்குப்பையர்கள், அசோசியேட்டுகள் மற்றும் தனிநபர்களின் ஆதரவையும் பங்களிப்புகளையும் இந்த நேரத்தில் பாராட்ட விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
இந்த முன்முயற்சி பற்றி தன்னுடைய கண்ணோட்டத்தைத் தெரிவித்த, Pune-based 5th Battalion of the NDRF-ன் Second-In-Command-ஆன Mr. Sachidanand Gawade பேசும்போது, "இந்த மிக முக்கியமான காலக் கட்டத்தில், நாவல் கொரோனாவைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி எந்ற வழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். இதுபோன்ற அடிப்படையான முன்முயற்சிகள் காரணமாக அடிப்படையான சுகாதார முன்னெச்சரிக்கைகள் பற்றி பாதிக்கப்பட்ட சமூகங்களிடம் உள்ள கருத்துக்களை மேம்படுத்துவதில் எங்களுடைய நிபுணர் குழு பயிற்சியாளர்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இந்தக் கொள்ளை நோயை எதிர்த்து நாம் பல தளங்களில் போராட வேண்டியதிருக்கிறது. உரிய நேரத்தில் பரவலான சமுதாயக் கல்வி என்பது இந்த கொடிய வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமான காரணியாக இருக்கும்" என்றார்.
ஒரு சக்திவாய்ந்த சமூக, பரஸ்பர சொந்தம் மற்றும் உரிமைத்துவ உணர்வைக் கட்டியெழுப்புவதையே Panchshil Foundation இலக்காக வைத்திருக்கிறது. மக்கள் சிறந்த வாழ்க்கை வாழும்போது சிறந்த சமூகங்கள் உருவாகின்றன என்பதுதான் எங்களுடைய நம்பிக்கை. கல்வி, சுகாதாரம், கலை மற்றும் கலாச்சாரம், விளையாட்டு, உட்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் சார்புடைய சமூக முன்முயற்சிகள் சம்பந்தமான முன்முயற்சிகள் Foundation-ன் செயல்பாடுகளில் அடங்கும்.
NDRF பற்றி
Government of India-வின் Ministry of Home Affairs-ன்கீழ் இயங்கும் NDRF அதன் தலைமை இயக்குநரின் தலைமையிலும் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டின்கீழும் செயல்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 2020 முதல், NDRF விமான நிலையங்கள், துறைமுகங்கள், நாட்டின் எல்லைகளில் உள்ளவர்கள் COVID-19-ஐ உருவாக்கும் நாவல் கொரோனாவைரஸ் பரவல் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவும் நாட்டுக்குள் நுழையும் பயணிகளைக் கையாளவும் பயிற்சியளித்து வந்திருக்கிறது.
NDRF COVID-19 பரவலைத் தடுப்பதில் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவுவதற்காக தன்னுடைய 12 பட்டாலியன்கள் ஒவ்வொன்றிலும் உள்ள 1150 ஊழியர்களில் 600 பேருக்குப் பயிற்சியளித்து வருகிறது. இந்தத் தொற்றுப் பரவலுக்கான திட்டமிடப்பட்ட பதிலிருப்பின் அங்கமாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மாநிலங்களுக்குத் தற்போது NDRF உதவி வருகிறது.
NDRF தொடங்கப்பட்டதுமுதல், கோடிக்கணக்கான மக்களின் பாராட்டைப் பெற்றுவருகிறது. வெள்ளம், புயல் மற்றும் கொல்லாப்ஸ்டு ஸ்டிரக்சர் சேர்ச் அன்டு ரெஸ்கியூ (CSSR) நடவடிக்கைகள் போன்ற மீட்பு நடவடிக்கைகளின்போது பேரிடர்களைக் கையாளுவதில் நிபுணத்துவத்தையும் ஆழ்ந்த சேவைகளையும் வழங்கி வருகிறது. NDRF பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து http://www.ndrf.gov.in/ என்ற வலைதளத்தைப் பாருங்கள்
2002-ல் நிறுவப்பட்ட Panchshil Realty என்பது இந்தியாவின் மிகச்சிறந்த சொகுசு ரியல் எஸ்டேட் பிராண்டுகளில் ஒன்றாகும். திட்டமிடப்பட்ட வளர்ச்சி, மதிப்புமிக்க சொத்துக்களை உருவாக்குதல், மற்றும் வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை வழியாக வாழ்க்கைப்பாணி அனுபவங்களை ஏற்படுத்துவதில் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் தன்னுடைய முன்னிலைக்கும் செயல்திறனுக்கும் புகழ்பெற்ற இக்குழுவின் அணுகுமுறையாக உள்ளது. Panchshil Realty-யின் ரியல் எஸ்டேட் 23 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமாக உள்ளது. இன்னும் 20 மில்லியன் சதுர அடிப் பரப்பு கட்டுமானத்தில் உள்ளது.
Panchshil-ன் பிரதான தொழிலாக வர்த்தக அலுவலக கட்டடங்கள், விருந்தோம்பல் மற்றும் இருப்பிட ரியல் எஸ்டேட் தொழில் உள்ளது. Panchshil Realty-யின் குறிப்படத்தக்க ஆஃபீஸ் போர்ட்ஃபோலியோவில் Blackstone Group LP-யினால் நிர்வகிக்கப்படும் Blackstone Real Estate Private Equity Fund அடங்கும். Panchshil பற்றி மேலும் அறிந்துகொள்ள www.panchshil.com என்ற வலைதளத்தைப் பாருங்கள்.
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1153816/Panchshil_Foundation_and_NDRF.jpg
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1153818/Panchshil_NDRF_Food_Hampers.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1153817/Panchshil_Foundation_NDRF_Logo.jpg
வீடியோ: https://mma.prnewswire.com/media/1153819/Panchshil_Realty_CSR_Initiative.mp4
Share this article