Cosmoprof India Mumbai 2019 இந்தியாவில் அழகுக்கலை துறையின் எதிர்காலத்தை வரவேற்கிறது
மும்பை, June 13, 2019 /PRNewswire/ --
Cosmoprof India கண்காட்சியானது, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சந்தைக்கான மூன்று நாள் சிறந்த வர்த்தக-முதல்-வியாபார நிகழ்வானது, BolognaFiere மற்றும் UBM இந்தியா ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டது, இன்று Bombay Exhibition Center (BEC)ல் வெற்றிகரமாக தொடங்க உள்ளது. ஜூன் 12 முதல் ஜூன் 14 வரையிலான அதன் முதல் பதிப்பில், Cosmoprof India Mumbai 2019 ஆனது, அனைத்து குறிக்கோள்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும், இந்தியாவில் அழகுக்கலை தொழில்துறையை வரவேற்கிறது. கண்காட்சி அரங்கமானது, 10,260 சதுர மீட்டர் கண்காட்சிப் பகுதியை கொண்டுள்ளது, இதில் சர்வதேச சிறந்த வாங்குவோர் மற்றும் விநியோகஸ்தர்கள், கருத்துத் தலைவர்கள், வல்லுனர்கள் மற்றும் உந்துசக்தியாக விளங்குபவர்கள் I-Beauty இன் முதற்கட்ட வழிமுறைகளில் உதவலாம். 23 நாடுகள் மற்றும் மண்டலங்களிலிருந்து 232 நிறுவனங்கள் அவர்களின் தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துகின்றனர், அதன் குறிப்பிட்ட உட்பொருட்கள், தொழில்நுணுக்கங்கள் மற்றும் சிகிச்சைகளுடன் Made in India தொழில்துறையின் வளர்ச்சிக்கு இது வழிவகுக்கிறது. இந்த கண்காட்சியானது மூன்று நாடுகள் மற்றும் குழு தளங்களையும் கொண்டிருந்தது: இத்தாலி, அமெரிக்கா மற்றும் கொரியா.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/887631/Cosmoprof_India_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/901625/First_Edition_Cosmoprof_India.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/901626/Key_Dignitaries_Cosmoprof_India.jpg )
தொழில்துறையின் அனைத்து துறைகளும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது: பொருட்கள் / மூலப்பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், OEM, ஒப்பந்த உற்பத்தி மற்றும் தனியார் முத்திரை, முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பேக்கேஜிங், சேவை வழங்குநர்கள், நறுமண மற்றும் ஒப்பனை, அழகு நிலையம் மற்றும் ஸ்பா, முடி, நகம் மற்றும் இயற்கை & கரிம பொருட்களுடன் - முடிக்கப்பட்ட தயாரிப்பு. Cosmoprof இந்தியாவில், ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தூர கிழக்கு ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர் மற்றும் சர்வதேச ஆபரேட்டர்கள் புதிய போக்குகள் மற்றும் உள்ளடக்கங்களால் ஈர்க்கப்படுகின்றனர். மொத்த விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அவர்களது குறிப்பிட்ட சந்தைகளில் எதிர்காலத்திற்கான கண்டுபிடிப்பைக் கண்டறிய முடியும்; உற்பத்தியாளர்கள், பேக்கேஜிங் மற்றும் இயந்திர வல்லுநர்கள் மற்றும் சப்ளையர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமான தொழிற்துறை தீர்வுகளைக் காணலாம்; நிலைய உரிமையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் விற்பனை புள்ளிகளுக்கான வாய்ப்பை வளப்படுத்த புதிய சேவைகளில் கவனம் செலுத்த முடியும். புதிய திட்டங்களை மேம்படுத்துவதற்காக, வாங்குபவர் திட்டம், Cosmoprof கண்காட்சிகளின் ஒரு ஒருங்கிணைந்த முன்முயற்சியாக, பெரும்பாலாக இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் ஆகிய இரு நாடுகளின் குறிப்பிட்ட தேவைகளின் படி, கண்காட்சியாளர்கள், சிறந்த வாங்குபவர்களிடயே வணிக கூட்டங்களை ஏற்படுத்த உதவுகிறது. Cosmoprof இந்தியா இந்திய அழகு தொழில் வளர்ச்சிக்கான உகந்த தளமாகும். உலகெங்கிலும் இருந்து வழங்குநர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வாங்குபவர்களிடையே நெட்வொர்க்கிங் மற்றும் வணிக வாய்ப்புகளை மையமாகக் கொண்டிருக்கும் வேளையில், Cosmoprof புதிய தொழில்நுட்பங்களை அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவுகிறது, இதன் மூலம் தரத்தின் தரநிலையில் கவனத்தை அதிகரிக்கிறது. உலகளாவிய பொருளாதார வல்லுநர்களால் இந்திய சந்தையின் மகத்தான ஆற்றல் அங்கீகரிக்கப்படுகிறது: 2018 மற்றும் 2023 க்கு இடைப்பட்ட காலத்தில், உதாரணமாக, குறிப்பாக 19.6% வளர்ச்சியுடன் நறுமணத் துறையில், மற்றும் + 13.1% ஒப்பனை பிரிவில் 9.7% வரை வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. Cosmoprof இந்தியாவானது இந்தியாவின் அழகுக்கலை தொழிற்துறை எவ்வாறு உருவாகிறது என்பதை சர்வதேச அழகுக்கலை தொழில்துறை நிபுணர்கள் புரிந்துகொள்ளும் வழியிலான சரியான நுண்ணறிவுகளை வழங்க முற்படுகிறது.
Cosmoprof India Mumbai - சிறப்பு முன்முயற்சிகள்
Cosmoprof India Mumbai அதன் பார்வையாளர்களுக்கு உயர் தரமான பயிற்சி பட்டறை மற்றும் இந்திய ஆளுமை தொழிற்துறைக்கான மிக முக்கியமான விடயங்களில் கவனம் செலுத்தும் ஆழ்ந்த பகுப்பாய்வுகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்குகிறது. CosmoTalks காலண்டர், எடுத்துக்காட்டாக, ஆபரேட்டர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பட்டறைகள் மற்றும் பயிற்சி அமர்வுகள் உள்ளன. வல்லுனர்கள், போக்கு மற்றும் வடிவமைப்பு முகவர்கள் மற்றும் சர்வதேச சங்கங்கள் ஆகியவற்றின் பங்கேற்புடன், இந்திய சந்தையின் பாதிப்புள்ள போக்குகள், பிராண்ட் விநியோகம் மற்றும் தகவல் தொடர்பு தீர்வுகள், முக்கிய துறை மற்றும் பசுமை அழகுக்கலையின் வளர்ச்சி போன்ற முக்கிய கருப்பொருட்கள் கலந்தாலோசிக்கப்பட்டன. Beautystreams, Centdegres, Euromonitor International, Kline&Group, Mintel, Oneline Wellness, Stylespeak மற்றும் WGSN முன்முயற்சியின் பங்குதாரர்கள் ஆகும்.
BARBA ITALIANA உடன் DERMAPEN, DNG GROUP, LOOKX, PEVONIA INTERNATIONAL, RICA மற்றிம் SWATI - வாங்குபவர்கள் மற்றும் தொழில்துறை வல்லுனர்கள் ஆகியோரை சந்திக்கும் அதே வேளையில் புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்த Cosmoprof Onstage ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிப்படுத்தும் நிறுவனங்களுக்கு வாய்ப்புக்களை வழங்குகிறது.
Cosmoprof India விருதுகள், சிறந்த காட்சிப்படுத்தும் நிறுவனங்களை அங்கீகரித்து, தொழில்துறை வீரர்களுடன் வெற்றியாளர்கள் அதிக பார்வையை பெற அனுமதித்து, இந்திய அழகியல் பிரிவில் தரம் மற்றும் ஆராய்ச்சியை கொண்டாடுகின்றது. நிபுணர்கள் குழு, நுகர்வோரின் நடத்தையை தூண்டும்படியாக காட்சிப்படுத்தியவர்களால் வழங்கப்பட்ட சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மதிப்பீடு செய்தனர், புதுமையான சூத்திரங்கள் மற்றும் கட்டமைப்புக்களை வழங்கியதற்கு அவர்களுக்கு நன்றி. Cosmoprof India விருதுகளின் அரங்கத்தில் இறுதிச் சுற்றில் வெற்றிபெற்றவர்கள் காட்சிப்படுத்தப்பட்டனர். ஜூன் 12 அன்று, Cosmoprof India வின் கொண்டாட்டமான இரவு நிகழ்வில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சர்வதேச போக்கு நிறுவனமான Beautystreams உடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது; வடிவமைப்பு நிறுவனம் centdegrés மூலம் கோப்பைகள் உருவாக்கப்பட்டுள்ளது
#VibrantIndia: Scented Fabric Play, என்பது centdegrés உடன் இணைந்து, இந்திய கலாச்சாரம் மற்றும் மதிப்புகளின் ஒரு கொண்டாட்டம் ஆகும், இது உள்ளூர் அழகு தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உலகளாவிய அதன் நிறங்கள், வடிவங்கள் மற்றும் வாசனைகளுக்கு இந்தியா அங்கீகரிக்கப்படுகிறது: நிறுவலானது பல உணர்வுப்பூர்வமான அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. மூன்று பகுதிகள் அவற்றின் குணாதிசயமான துணிகள் மற்றும் வாசனையுடன் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டன: மல்லிகை மற்றும் மைசூர் சில்க்குடன் கர்நாடகம், முண்டும் நெரியாதும் மற்றும் கருப்பு மிளகுடன் கேரளா, வெட்டிவேர் மற்றும் சிக்கன்கரியுடன் உத்திரபிரதேசம். பார்வையாளர்கள் அவர்களுக்கு பிடித்த துணி மற்றும் வாசனை தெரிவின் மூலம் ஒரு மெழுகுவர்த்தியை தனிப்பயனாக்குவது எப்படி என்பதை தெரிந்துகொள்ளலாம்.
CosmoTrends, Beautystreams உடன் இணைந்து, அனைத்து Cosmoprof நிகழ்வுகளின் மிகவும் சுவாரஸ்யமான உள்ளடக்கங்களில் ஒன்றாகும்: முக்கிய போக்குகளை உள்ளடக்கிய இதை காட்சி அரங்கில் அங்கீகரிக்கலாம். Cosmoprof இந்தியாவிற்கு, இந்த அறிக்கை, பொருட்கள் மற்றும் சாதனங்களை உயர்த்தி காட்டுகிறது, இது Beautystreams வல்லுனர்களின் கருத்துப்படி இந்திய சந்தையை மேம்படுத்தும், குறிப்பிட்ட தேவைகளுக்கு மற்றும் உள்ளூர் நுகர்வோர் போக்குகளுக்கு பதிலளிக்கிறது. CosmoTrends இந்தியாவில் அழகுக்கலை துறையில் புதியதாக என்ன இருக்கிறது என்று தேடும், வாங்குபவர்கள், பத்திரிகையாளர்கள், போக்கு அமைப்பவர்கள் மற்றும் மேம்படுத்துபவர்களுக்கு ஒரு செயல்பாட்டு கருவியாகும்.
மேலும் தகவலுக்கு, http://www.cosmoprofindia.com/en
UBM Asia பற்றி:
UBM Asia சமீபத்தில் Informa PLC இன் ஒரு பகுதியாக மாறியது, இது ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்கள் இருப்பை அறிய https://www.ubm.com/global-reach/ubm-asia க்கு தயவுசெய்து செல்லவும்.
ஊடக தொடர்பு:
BolognaFiere Cosmoprof Spa
Mr. Paolo Landi
P: +39-02-45-47-08-320
[email protected]
Ms. Arianna Rizzi
P: +39-02-45-47-08-253
[email protected]
UBM:
Mili Lalwani
[email protected]
+91-9833279461
UBM India
Ms. Roshni Mitra
P: +91-7506183888
[email protected]
Share this article