CMA (Certified Management Accountant) ஜனவரி 2020 இல் தொழில்நுட்பத்தில் அதிகரித்த கவனம் செலுத்துதலுடன் புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ் தேர்வு
மோண்ட்வேல், நியூ ஜெர்ஸி, மற்றும் பெங்களூர், இந்தியா, January 9, 2019 /PRNewswire/ --
IMA® (The Institute of Management Accountants)- ன் சான்றிதழ் பிரிவான ICMA® (The Institute of Certified Management Accountants), தனது CMA® (Certified Management Accountant) தேர்வில் மாற்றத்தை கொண்டுவருவதாக இன்று அறிவித்திருக்கின்றது. மேலாண்மை கணக்கியல் தொழிற்துறையின் எப்போதும்-புதிதாய் உருவாகிவரும் சூழ்நிலையில் CMA ஆனது பொருத்தமானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக பரீட்சைக்கான புதுப்பிப்புகள் செய்யப்படுகின்றன. இந்த மாற்றங்கள் ஜனவரி 1, 2020 முதல் அமலுக்கு வரும்.
(Logo: http://mma.prnewswire.com/media/510711/IMA_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/804758/Dennis_Whitney_IMA.jpg )
மேம்படுத்தப்பட்ட பரீட்சை இரண்டு பகுதிகளாக தொடரும், ஒவ்வொன்றும் 100 பல தெரிவு கொண்ட கேள்விகள் மற்றும் இரண்டு கட்டுரைகள் கொண்டிருக்கும். ICMA தேர்வில் தொழிற்துறை மீது தாக்கத்தை அதிகப்படுத்த வேண்டிய அவசியத்தை கண்டுபிடித்தது, இதன் விளைவாக, பகுதி 1 இல் 15 சதவீதமானது 'தொழில்நுட்பம் மற்றும் பகுப்பாய்வு' பிரிவில் இடம்பெறும். பகுதி 1 இப்பொழுது 'நிதி திட்டமிடல், செயல்திறன், மற்றும் பகுப்பாய்வு' என்ற தலைப்பின்கீழ் இருக்கும். புற நிதி அறிக்கை முடிவுகள், திட்டமிடல், வரவு செலவு திட்டம் மற்றும் முன்கணிப்பு, செயல்திறன் மற்றும் செலவு மேலாண்மை மற்றும் உள் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட உள்ளடக்கம் அடங்கும்.
பரீட்சையின் இரண்டாம் பாகத்திற்கான திருத்தங்கள் நெறிமுறைகள் மற்றும் மூலோபாய முடிவெடுக்கும் நடவடிக்கைகளில் அதிக முக்கியத்துவம் அடங்கும். பகுதி 2 இப்போது 'மூலோபாய நிதி மேலாண்மை' என்ற தலைப்பில் பெயரிடப்பட்டு, நிதி அறிக்கை பகுப்பாய்வு, பெருநிறுவன நிதி, இடர் மேலாண்மை மற்றும் முதலீட்டு முடிவுகளை உள்ளடக்கியது.
2018 ஆம் ஆண்டில், ICMA மற்றும் அதன் ஆளுகை நிர்வாகிகள் ஒரு சுயாதீனமான வேலை பகுப்பாய்வு ஆய்வு நடத்தினர் மேலும் இதில் வேலை சம்பந்தமான நிர்வாகக் கணக்காளர்களுக்குத் தேவையான அறிவைப் பற்றிய கணக்கெடுப்பு ஒன்றை உருவாக்கியது. 2,000 க்கும் அதிகமான நிபுணர்களின் உலகளாவிய மறுமொழிகள் ஜனவரி 2020 இல் மேம்படுத்தப்பட்ட பரீட்சைகளில் பிரதிபலிக்கப்படும்.
"நாங்கள் எப்பொழுதும் CMA தேர்வுக்கு பொருத்தமாக இருக்கும் வகையில் தொழிற்துறையில் மாற்றங்களை கண்காணித்து வருகிறோம்," என்று சான்றிதழ்கள், தேர்வுகள் மற்றும் உள்ளடக்க ஒருங்கிணைப்பு CMA, ICMA மூத்த துணைத் தலைவர், Dennis Whitney தெரிவித்தார். "இந்த வேலை பகுப்பாய்வு தற்போதைய தேர்வு விரிவானதாக இருப்பதையும், ஆனால் தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வுகளில் அதிக கவனம் தேவை என்பதையும் இது காட்டுகிறது. மேலாண்மை கணக்காளர்களுக்கு இரு பகுதிகளும் மிக முக்கியமானதாகி வருகின்றன என்பதால் நாங்கள் இதனைச் சரி செய்கிறோம்."
"CMA என்பது உலகில் ஒப்புயர்வற்ற மேலாண்மை கணக்காளர் சான்றளிப்பாகும். மேலும் இது நம்பமுடியாத பூகோள வளர்ச்சி அனுபவிக்கின்றது. தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் மற்றும் தொழிற்துறையில் நடைபெற்று வரும் மாற்றங்கள் ஆகியவற்றால், எங்கள் சான்றிதழ் வழங்குவதற்கான தேர்வானது, நமது சான்றிதழை வழங்குவதற்கான தேர்வானது, இந்த மாற்றங்களை மாற்றியமைக்கும் வகையில், நமது பங்குதாரர்களுக்கு முடிந்தவரை சிறந்ததாக அமைகிறது," என்று Paul E. Juras, CMA, CPA, Ph.D., chair of the ICMA Board of Regents கூறினார்.
2019 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 தேதியில் ஆங்கில மொழி தேர்வின் தற்போதைய பதிப்பு வழங்கப்படும். 2019 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சீன மொழிப் பரீட்சையின் தற்போதைய பதிப்பு வழங்கப்படும்.
CMA பரீட்சை மாற்றங்கள் பற்றிய மேலும் தகவலுக்கு, IMA பற்றிய மேலும் தகவலுக்கு இங்கே செல்லவும்.
IMA® (Institute of Management Accountants) பற்றி
IMA®, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டின் Professional Body of the Year என்று The Accountant/International Accounting Bulletin மூலம் பெயரிடப்பட்ட இது, மேலாண்மை கணக்கியல் தொழிலை முன்னேற்றுவதில் பிரத்தியேகமாக கவனம் செலுத்துகின்ற மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிக்கப்படும் சங்கங்களில் ஒன்றாகும். உலகளாவிய ரீதியில், IMA ஆராய்ச்சி, CMA® (Certified Management Accountant) திட்டம், தொடர்ச்சியான கல்வி, நெட்வொர்க்கிங் மற்றும் உயர்ந்த நெறிமுறை வணிக நடைமுறைகள் சார்ந்த ஆலோசனை ஆகியவற்றின் மூலம் தொழிலை ஆதரிக்கின்றது. 140 நாடுகளில் 100,000 க்கும் அதிகமான உறுப்பினர்கள் மற்றும் 300 தொழில்முறை மற்றும் மாணவர் அத்தியாயங்களின் சர்வதேச வலையமைப்பை IMA கொண்டுள்ளது. மாண்ட்வேலே, என்.ஜே., அமெரிக்காவில் தலைமையிடப்பட்டு, IMA அதன் நான்கு உலகளாவிய பிராந்தியங்கள் மூலம் உள்ளூர் சேவைகளை வழங்குகின்றது: அமெரிக்கா, ஆசியா / பசிபிக், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு / இந்தியா. IMA ஐப் பற்றிய மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க http://www.imanet.org.
Share this article