Chennai Jewellery and Gem Fair அதன் மார்ச் பதிப்பில் ஒளிர்கின்றது
சென்னை, மார்ச், March 12, 2019 /PRNewswire/ --
ஆடம்பரமான மெகா B2B gem and jewellery, தென் இந்தியாவின் திறமை
மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது
- இந்தியாவின் முன்னணி நகைக்கடை உரிமையாளர்களுக்கென UBM India வின் மூன்று-நாள் ஆடம்பரமாக ஒளிரும் வணிகம்
- 100+ க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் மற்றும் 30 ஆடம்பரமான ஜுவல்லரி ப்ராண்டுகள்
- கைவினைஞர் மண்டலம்: தனித்துவமான நகைகளைத் தயாரிக்கும் கைவினைஞர்களின் புதுமையான திறன்களை இந்த மண்டலம் கொண்டிருக்கும். சிறிய அளவிலான வடிவங்கள் (மினியேச்சர்கள்) மற்றும் வெள்ளி ஆடைகள் போன்றவை காட்சிப்படுத்தப்படும் சிலவாகும்.
- ஹால் ஆஃப் ஃபேம்: தங்கம், வைரம் மற்றும் பழங்கால நகைகள் போன்ற முன்னணி நகை வடிவமைப்புகளைக் காட்சிப்படுத்தும்
- மூன்று நாட்கள் அறிவுப்பூர்வமான மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்குகள்: All Gem Lab London LLP வழங்கும் 'வண்ணக்கற்களை அடையாளம் காணுதல்' மற்றும் 'இயற்கை மற்றும் செயற்கை வண்ண கற்களைப் பற்றிய விழிப்புணர்வு' போன்ற தலைப்புக்களில் கலந்துரயாடல் ஒரே நேரத்தில் கண்காட்சியில் நடைபெறும்.
Chennai Jewellery & Gem Fair (CJGF) 2019, இன்று Chennai Trade Centre (CTC)ல் துவங்கியது. சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீ Vishal Krishna, நடிகர், நடிகர் சங்கம் தயாரிப்பாளர் செயலாளர் நாயகம், தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர், திருட்டு எதிர்ப்பு ஆர்வலர். இவருடன் முக்கிய பிரமுகர்களான திரு. Yogesh Shah, Chennai Jewellers Association, தலைவர்; திரு. UdayVummidi, Chennai Jewellers Association, துணைத் தலைவர்; திரு. Rajesh Vummidi, Chennai Jewellers Association, கெளரவ செயலாளர் மற்றும் தலைவர்; திரு. Sultan Mohideen, Chennai Jewellers Association, துணைத் தலைவர்; திரு.Yogesh Mudras, UBM India, நிர்வாக இயக்குநர் மற்றும் திரு. Abhijit Mukherjee, UBM India, குழு இயக்குநர் ஆகியோர் மற்ற பிரமுகர்கள் முன்னிலையில் நகைக்கடை வர்த்தகத்தை துவக்கி வைத்தனர்
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/828492/CJGF_March_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/832873/UBM_CGF2019_Inauguration.jpg )
இந்த மூன்று-நாள் கண்காட்சியானது, (2019 மார்ச் 8 முதல் 10 வரை), CJGF ஆனது தென் இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச கற்கள் மற்றும் நகைக்கடை B2B கண்காட்சி ஆகும். நகை பிராண்டுகள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், நகை உற்பத்தியாளர்கள், இயந்திர உற்பத்தியாளர்கள், டயமண்ட், ரத்தினம், முத்து சப்ளையர்கள் மற்றும் வர்த்தகர்கள், விலைமதிப்பற்ற உலோகம் மற்றும் நகைகள் பொருத்தும் வர்த்தகர்கள் மற்றும் சப்ளையர்கள், வர்த்தக மற்றும் அரசாங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கியது.
கோவில் நாக்ஷி நகை, கல் பதித்த ஜூவல்லரி, மற்றும் மங்காய் மாலை, காசு மாலை மற்றும் பச்சியின் டிசைன்கள் போன்ற கல்யாண நகைகள் ஆகியவை அடங்கும் பாரம்பரிய நகைகள் நிறைந்த வியக்க வைக்கும் நகைகளை உள்ளடக்கியது. CZ நகை, கேஸ்டிங் நகை, ஹாலோ செயின்கள், ஆண்களுக்கான பிரத்யேக நகைகள் மற்றும் முத்துக்கள், மல்டி லேய்டு நெட்பீஸ்கள், ஆம் கப்ஸ் மற்றும் பிஜூவேல் ப்ரொச்செஸ் போன்ற பருவகாலத்திற்கேற்ற போக்கு ஆகியவை, உற்பத்தி செயல்முறை மற்றும் பிற தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் பயன்படுத்தப்படும் சமீபத்திய இயந்திரங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டன.
எக்ஸ்போவின் முக்கிய சிறப்பம்சங்களில் கைவினைஞர் மண்டலம், தனித்துவமான நகைகளைத் தயாரிக்கும் கைவினைஞர்களின் புதுமையான திறன்களை இந்த மண்டலம் கொண்டிருந்தது. சிறிய அளவிலான வடிவங்கள் (மினியேச்சர்கள்) போன்ற தனித்துவமான நகைகள் உள்ளடங்கும். இந்த எக்ஸ்போவில் தங்கம், வைரம் மற்றும் பழங்கால நகைகள் போன்ற முன்னணி நகை வடிவமைப்புகளைக் காட்சிப்படுத்திய 'ஹால் ஆஃப் ஃபேம்' இடம்பெற்றது. All Gem Lab London LLP வழங்கும் 'வண்ணக்கற்களை அடையாளம் காணுதல்' மற்றும் 'இயற்கை மற்றும் செயற்கை வண்ண கற்களைப் பற்றிய விழிப்புணர்வு' போன்ற தலைப்புக்களில் கலந்துரயாடல் கண்காட்சியில் நடைபெற்றது. தங்கம், வெள்ளி, ஜெம் ஸ்டோன்ஸ், இயந்திரம் மற்றும் ஆடம்பர தளங்கள் ஆகியவை முக்கிய பங்குதாரர்களாலும் பிரபலங்களாலும் அலங்கரிக்கப்பட்டது.
இந்த எக்ஸ்போவில் சென்னை, பெங்களூரு, கேரளா, மும்பை, ஜெய்ப்பூர், டெல்லி, கோயம்புத்தூர், ஹைதராபாத், கொல்கத்தா போன்ற இடங்களின் முன்னணி வியாபாரிகள் பங்கேற்றனர். அவற்றில் Laxmi Chains- Bangalore, CNB Diamonds, Jewel 4 u, Khandan Chains. Bonitas, JKS Jewels Pvt Ltd, Shanti Gold, Suman, Angel Gold, Devansh Creations, Surya Gold, Shree Vaaru Jewellers, போன்றவை சிலவாகும். இந்தியாவில் I, II மற்றும் III தட்டு நகரங்களுடன் சூடுதலாக, துபாய், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கஈ போன்ற நாடுகளின் பங்கேற்பையும் இந்த கண்காட்சி கண்டது. எக்ஸ்போவில் Diamond Association Bangalore (DAB), All Kerala Gold & Silver Merchants Association (AKGSMA), Surat Jewellery Manufacturers Association (SJMA), Gems & Jewellery Association of Rajkot மற்றும் The Jewellers's Association (JAB) ஆகியவற்றின் முக்கிய ஆதரவுடன் தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் பிற இந்திய மாநிலங்கள் மற்றும் தொழில் துறைகளில் இருந்து 600+ சங்கங்களின் மூலம் நகைத் துறையின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்த கண்காட்சியானது கருதப்படுகிறது.
தென் இந்தியாவின் டிசைனர் நகைகள் வரம்புகளின் மீது சிறப்பு கவனம் செலுத்தும் இந்த கண்காட்சியானது இந்திய நகைகளின் சந்தைக்கு ஒரு நுழைவாயில் ஆகும். இது ஜெம்ஸ் மற்றும் ஜுவல்லரி துறை ஒரே கூரையின் கீழ் சந்திக்க, இணைக்க, நெட்வொர்க் மற்றும் அவர்களது வியாபாரத்தை வளர்க்க இது ஒரு சிறந்த தளத்தை வழங்குகிறது. எக்ஸ்போவின் நிலையானது தொழில்துறையின் நிரூபிக்கப்பட்ட மற்றும் நம்பகமான ஆதார மையமாக வலுப்படுத்துவதால், எக்ஸ்போவில் தொடர்ந்து நன்கு அறியப்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது.
CJGF இன் துவக்க நிகழ்ச்சியில் பேசிய நிர்வாக இயக்குநரான திரு. Yogesh Mudras கூறுகையில், "உலகெங்கிலும் இருந்து இந்தியாவின் கற்கள் மற்றும் பிராண்டட் நகைகளுக்கு அதிகரித்து வரும் தேவை முதன்மையாக வாடிக்கையாளர்களின் உயரும் தனிநபர் வருமானம் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வலுவான கொள்முதல் சக்தியால் உந்தப்படுகிறது. உண்மையில், இப்போது நகை மீது நுகர்வோரின் மிக அதிகமான விருப்பம் இருப்பதால் இந்த துறையில் புரட்சி ஏற்பட்டு வருகிறது. உலகளாவிய நகைகள் நுகர்வுக்கு 29 விழுக்காடு பங்களிப்புச் செய்துள்ள இந்திய நகைக் கழகம் ஏற்கனவே நிறுவப்பட்ட பிராண்டுகளின் உட்புதலால், இது மாறும் நுகர்வோர் விருப்பகளுக்கேற்ப சந்தையை மேலும் ஒழுங்கமைக்கப்படுவதற்கு உதவுகிறது. தங்க தரகுறியீட்டை தரநிலைப்படுத்துவது, தனி நபருக்கான தங்க நாணயமாக்கல் திட்டம், அறக்கட்டளை மற்றும் பரஸ்பர நிதிகள் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய நகைகள் பூங்காவை கட்டியெழுப்புதல் போன்ற அரசு முன்முயற்சிகள் மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இந்த துறையானது வளர வாய்ப்புகளை அதிகரிக்கும். பிரகாசிக்கும் அன்பையும் புரிந்து கொள்ளக்கூடிய சந்தை அமைப்பிற்கான தேவைகளையும் புரிந்து கொள்ளுதல், CJGF மூலம் சென்னை ஜுவல்லர்ஸ் அசோசியேஷனுடன் இணைந்து UBM இந்தியா இந்தத் துறையை மேம்படுத்துவதன் மூலம் இந்தத் துறைக்கு பெரும் வாய்ப்புகளைத் தருகிறது."
"இந்த கண்காட்சி சர்வதேச அனுபவத்தை வழங்குவதுடன் உயர் தர கண்காட்சியாளர்களின் இருப்பைக்கொண்டிருக்கும், இதில் கண்கவரும் அம்சங்களாக ஹால் ஆஃப் ஃபேம், கலைஞர்களுக்கான மண்டலம் மற்றும் தொழில்நுட்ப அறிவு சார் கருத்தரங்குகள், 100 க்கும் மேற்பட்ட விற்பனையாளர் வாடிக்கையாளர் சந்திப்பு, உயர்தர ஸ்டைலான மற்றும் தொழில்முறை சுற்றுச்சூழலில் நடக்கும் திருமண பருவத்தில் மற்றும் அக்ஷய் த்ரிதிக்கு ஒரு ஆயத்தமாக நெட்வொர்க்கிங் நைட், அறிவு கருத்தரங்குகள், மற்றும் இயந்திரங்களின் நேரடி டெமோ ஆகையவற்றை வழங்கும்" என்று அவர் மேலும் கூறினார்.
CJGF என்பது ஐந்து நகர நகை நிகழ்ச்சிகளில் ஒன்றாகும் (கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லி), இது ஆண்டு முழுவதும் UBM இந்தியாவால் நடத்தப்படும். சர்வதேச அளவில், UBM plc உலகின் மிகப்பெரிய ஜூவல்லரி வர்த்தக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது - The Hong Kong Jewellery & Gem Fair.
CJGF பற்றி:
CJGF என்பது ஆண்டில் இருமுறை இடம்பெறும் நிகழ்வு ஆகும், ஒவ்வொரு UBM மினால் மூலோபாய முறையில் அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் ஏற்பாடு செய்யப்படுகிறது, இது ஜூன் 2018 ல் Informa PLC உடன் இணைந்து B2B தகவல் சேவைகள் குழுவாகவும், உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளராகவும் மாறும். CJGF பற்றிய மேலும் தகவலுக்கு https://chennai.jewelleryfair.in/mar க்கு தயவுசெய்து செல்லவும் மற்றும் ஆசியாவில் எங்கள் இருப்பை அறிய http://www.ubm.com/global-reach/ubm-asia செல்லவும்.
UBM Asia பற்றி:
UBM ஆசியா சமீபத்தில் Informa PLC இன் ஒரு பகுதியாக மாறியது, இது ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்கள் இருப்பை அறிய http://www.ubm.com/asia க்கு தயவுசெய்து செல்லவும்.
ஏதேனும் ஊடகம் தொடர்பான கேள்விகளுக்கு தயவுசெய்து அனுகவும்:
UBM India
Roshni Mitra/Mili Lalwani
+91-22-61727000
[email protected]
Share this article