CBME India 2020 தன்னுடைய செப்டம்பர் மாத கண்காட்சிக்காக 'The All India Toy Manufacturers Association' (TAITMA)-உடன் கைகோர்க்கிறது
- Informa Markets in India-வினால் நடத்தப்படும் குழந்தைகள், மற்றும் தாய்மைக்கான பிரத்யேகமான கண்காட்சி
MUMBAI, March 30, 2020 /PRNewswire/ -- 8-வது "Children, Baby and Maternity Expo India 2020 (CBME India) விளையாட்டுப் பொருட்களின் சந்தையை மேம்படுத்துவதற்காக அரசுடன் ஈடுபடும் முக்கிய சங்கமான TAITMA (The All India Toy Manufacturer's Association) கைகோர்த்திருக்கிறது. இத்துறையின் ஒருங்கிணைந்த மற்றும் முடுக்கிய வளர்ச்சியை விரைவுபடுத்துவதே அதனுடைய குறிக்கோள் வாசகம். இடைவெளியை போக்க நாடு முழுவதும் தொழிலை வளர்க்கும் நடவடிக்கைகளை இந்த அமைப்பு முன்னெடுக்கிறது. அவர்கள் புத்தாக்கம் மற்றும் சக உறுப்பினர்களுக்கு அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விசாரணைகளில் ஆதரவளிப்பதிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.
மே மாதத்தில் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டிருந்த இந்தியாவில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான தயாரிப்பு தொழில் கண்காட்சியான CBME India, தற்போதைய மற்றும் அதிகரித்துவரும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இத்துறையினர் பங்கேற்பதை பாதிக்கும் என்பதால், இப்போது செப்டம்பர் 2 - 4, 2020-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. Mumbai-யில் உள்ள Bombay Exhibition Centre-ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாறிவரும் சூழலை Informa Markets in India தொடர்ந்து கண்காணித்து வருகிறது, உரிய உள்ளூர் அரசு அமைப்புகள், தொழில்துறை மற்றும் பிற முக்கிய பங்குரிமையாளர்களிடம் நெருக்கமாகத் தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிறது. தொழில்துறை நிபுணர்களுக்கு ஒரு மேம்பட்ட வர்த்தக அனுபவத்தை அளிப்பதுதான் அதன் இலக்காக உள்ளது.
TAITMA-வின் பிரசிடென்டான Mr. Manish Kukreja பேசும்போது, "The All India Toy Manufacturers Association, கடந்த 1976 முதல் இந்திய விளையாட்டுப் பொருட்களுக்கான தொழில்துறையை வளர்ப்பதில் முழு ஈடுபாட்டுடன் உதவி வருகிறது. இந்தியாவில் இத்துறையின் ஒருங்கிணைந்த மற்றும் முடுக்கிய வளர்ச்சியை விரைவுபடுத்துவதே எம்முடைய குறிக்கோள் வாசகம். CBME India 2020-உடன் இணைந்து செயலாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம். ஏனெனில், இந்தியத் தயாரிப்பாளர்கள் தங்களுடைய திறன்களை உலகிற்கு வெளிக்காட்டுவதற்கு ஒரு உகந்த தளமாக உள்ளது. CBME India 2020-லிருந்து ஒட்டுமொத்த தொழில்துறையும் பலன் பெற வேண்டும் என்பதுதான் எம்முடைய இலக்கு" என்றார்.
Informa Markets in India-வின் மேனேஜிங் டிரெக்டரான Mr. Yogesh Mudras பேசும்போது, "ஒரு வளர்ந்துவரும் மற்றும் இளம் மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்து இந்த புதிய தொழில்துறை சிறப்படைவதற்காக வேலை செய்துவரும் TAITMA-வுடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்தத் துறை சிறப்படைவதற்காக பல புதுமையான மற்றும் தொலைநோக்கு முன்முயற்சிfளில் அரசுடனும் மற்ற நிறுவனங்களுடனும் இணைந்து வேலை செய்துவந்திருக்கிறது. இன்று நாம் சந்திக்கும் சவால்மிக்க சூழல்களில், இந்த முக்கிய கூட்டாளித்துவங்கள் மதிப்பைக் கூட்டி நேர்மறையான உறவுகளை ஏற்படுத்தும். இந்தியத் தயாரிப்பாளர்கள் முன்னிலைக்கு வர ஊக்குவிக்கும் தீர்வுகளையும் அளிக்கும்" என்றார்.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் Mumbai, New Delhi, Bangalore மற்றும் Chennai-யில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
ஊடக விசாரணைகளுக்குத் தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள்:
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
Informa Markets in India
புகைப்படம்- https://mma.prnewswire.com/media/1137953/CBME_India.jpg
புகைப்படம்- https://mma.prnewswire.com/media/1137954/Taitma_.jpg
லோகோ- https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article