அதிக பங்கேற்பாளர்களுடன் முடிவுற்ற 'Jewellery & Gem Virtual Exhibition' இந்தியாவின் முதல் B2B ஆன்லைன் நகை கண்காட்சி
மும்பை மற்றும் புது டெல்லி, Sept. 22, 2020 /PRNewswire/ -- இந்தியாவின் முன்னணி B2Bகண்காட்சிகள் ஒருங்கிணைப்பாளரான Informa Markets in India (formerly UBM India என முன்னர் அழைக்கப்பட்டது) Jewellery NET உடன், வெற்றிகரமான B2B ஆன்லைன் சமூகமாக ஒருங்கிணைந்து தனது முதல் வர்ச்சுவல் வர்த்தக கண்காட்சியான 'Jewellery & Gem Virtual Exhibition'ஐ 20 ஆம்தேதி ஆகஸ்ட் மாதம் 2020 அன்று வெற்றிகரமாக நடத்தி முடித்தது மற்றும் இரு நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த கண்காட்சியில் 40க்கும் மேற்பட்ட கண்காட்சி கூட்டாளிகளுடன் 6400க்கும் மேற்பட்ட தனிப்பட்ட கலந்துகொண்டவர்களும் இதில் பங்கேற்றனர்.
நவரத்தினங்கள் மற்றும் நகைத் துறையின் தேவைகளை தீர்க்கும் விதத்தில் இரண்டு நாள் வர்ச்சுவல் கண்காட்சி திட்டமிடப்பட்டது மற்றும் அவர்களின் முக்கிய வர்த்தக உரையாடல்கள் மற்றும் ஈடுபாட்டை நீட்டிக்க உதவவும் மற்றும் தங்கள் வீட்டிலிருந்தபடியே தகுந்த தீர்வுகளை வழங்கவும் இந்த சமூகம் உதவுகிறது. தொழில்நுட்ப வாங்குநர்கள் மற்றும் விற்பவர்களை ஒரே தகுதியான டிஜிட்டல் தளத்தின் கீழ் கண்காட்சி ஒருங்கிணைத்தது. தொடக்க விழாவில் தலைமை விருந்தினராக Ms. Rupa Dutta, Economic Adviser -Department of Commerce, Government of India உடன் Mr. Ashok Seth, President - East Delhi Jewellers Association; Mr. Saiyam Mehra, Director - Gem & Jewellery Council; Co-Convener GJS; Convenor PMI; Mr. Mahendra Tayal President - Hitech City Jewellery Manufacturers Association; Mr. Yogesh Singhal, President - The Bullion & Jewellers Association, Delhi; Mr. Yogesh Mudras, MD - Informa Markets in India and Ms. Pallavi Mehra, Group Director - Jewellery Portfolio - Informa Markets in India ஆகியோர் பங்கேற்றனர்.
உலகத்தரம் வாய்ந்த வலைதள அடிப்படையிலான Jewellery & Gem Virtual Exhibition தனிப்பட்ட தயாரிப்புகளை அதற்கென ஒதுக்கப்பட்ட காட்சிக்கூடங்களில் காட்சிப்படுத்தின மற்றும் ஒன்-டூ-ஒன் ஆடியோ வீடியோ அழைப்புகள் மூலமாக வாங்குபவர் விற்பவர் சந்திப்பிற்கான தளத்தை வழங்கின. வர்ச்சுவலி சோர்சிங், வர்த்தகம் செய்தல், அறிவுப் பரிமாற்றம் மற்றும் உலக சந்தைப் போக்குகள் மற்றும் மிக முக்கியமாக இம்மாதிரி காலங்களில் துறையின் நேர்மையை தூண்டுதல் போன்றவற்றிற்கான இணையற்ற தளத்தை கண்காட்சி வழங்கியது. அதன் காட்சிக்கூடங்களில் தங்கம், வைரம், வெள்ளி, நவரத்தினங்கள், இயந்திரம் மற்றும் அதன் துணை சார்ந்த நகைகளை காட்சிப்படுத்தின மற்றும் உலகத்தரம் வாய்ந்த அம்சங்களான டிசைனர் கேலரி, 50,000க்கும் அதிகமான டிசைன்களை காட்சிபடுத்துதல், வாங்குபவர்-விற்பவர் வீடியோ சந்திப்புகள், டிஜிட்டல் ஷோரூம்கள், தயாரிப்பு அறிமுகங்கள், அறிவுத்தொடர்கள் போன்ற பல அம்சங்கள் கொண்டதாக கண்காட்சி அமைந்தது.
வர்ச்சுவல் கண்காட்சியின்போது லைவ் ஈ-மாநாடுகள் திட்டமிடப்பட்டன மற்றும் வைரம், தங்கம், பகட்டான நகைகளின் முதன்மை அசோசியேசன்கள், கல்வி மற்றும் பயிற்சியளித்தல், நுகர்பொருள் மற்றும் ஹால்மார்க்கிங் தொழில்துறைகள் போன்றவற்றிலிருந்து புகழ்பெற்ற பேச்சாளர்களால் அவை நடத்தப்பட்டன. எங்களது முக்கிய தலைப்புகளில் சில:
- குழு கலந்துரையாடல்: நவரத்தினங்கள் & நகை தொழில்துறை: 'NEW NORMAL'க்கு ஏற்ப மாறுதல்
- குழு கலந்துரையாடல்: தங்கம் – எப்போதும் ஒரு முலோபாய சொத்து
- குழு கலந்துரையாடல்: நகைத்துறை: இந்தியகலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பாகம்
- கல்வி: வைரம் மற்றும் நகையில் பொது நம்பிக்கையை உருவாக்குதல்
- குழு கலந்துரையாடல்: எப்போதும் வைரம்: தொழில்துறையை மீண்டும் அதன் பாதைக்கு கொண்டு வருதல்
- தயாரிப்புத்திறன் ஒர்க்ஷாப்: எந்த அழுத்தம் அல்லது ஆபத்து இல்லாமல் உங்கள் வர்த்தகத்தை இருமடங்காக பெருக்குவது எப்படி
- அறிவுத்தொடர்கள்: ஹால்மார்க்கிங்- தரம் மற்றும் தரநிலைப்படுத்தலை உறுதிப்படுத்தல்
- அறிவுத்தொடர்கள்: வைரங்களின் 4C's
Mr. Yogesh Mudras, Managing Director, Informa Markets in India, Jewellery & Gem Virtual Exhibitionன் வெற்றிகரமான அறிமுக விழாவில் பேசுகையில், "சிறந்த வர்த்தக அனுபத்தை சாத்தியமாக்க வர்த்தகப் பாதையை புதுப்பிக்கும் கண்டுபிடிப்புகளை கொண்டுவர Informa தொடர்ந்து முயற்சித்து வருகிறது. டிஜிட்டல் இந்தியாவின் தூண்டுதலை நாம் கண்கூடாக கண்டுவருகிறோம், நாட்டின் முதன்முதல் Jewellery and Gem Virtual Exhibition ற்காக நாட்டின் பல்வேறு துறைகளிலிருந்து முதன்மை கண்காட்சியாளர்களை நாங்கள் அழைத்து வந்துள்ளோம். பகட்டான நகைகள், பல்வேறு விதமான நகைகள், உள்நோக்குகள், சந்தை போக்குகள் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் அனைத்தின் பிரம்மாண்ட காட்சிப்படுத்தலை விரல் நுனியின் தொடுகை மூலமாக வர்ச்சுவல் கண்காட்சி சாத்தியமாக்கியது. ஊரடங்கு தடை காரணமாக தங்கள் கடைகளை மூடத்தொடங்கிய நகைக் கடைகளுடன், துறை மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது. இதனுடன், நாட்டில் தங்கம் மற்றும் நகைத்துறையின் ரோல்ஓவர் அதிகரிப்பு ஆரம்பித்துள்ளது மற்றும் சிறிது சிறிதாக வியாபாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சமூகத்தின் விழிப்புணர்வை மனதில் கொண்டு, நாங்கள் கண்காட்சியை முக்கிய பண்டிகைகள் மற்றும் திருமண சீசனிற்கு முன்னர் நடத்த திட்டமிட்டோம் அது நகையில் முதலீடு செய்வதற்கும் வாங்குவதற்கும் எப்போதும் சிறந்த காலமாகும்."
The Bullion & Jewellers Association, Maliwara Jewellers Association, Delhi, Meerut Bullion Traders Association, Delhi Jewellers Association, Hitech City Jewellery Manufacturers Association and Jewellery & Machinery Association ஆகியவற்றினால் கண்காட்சி ஆதரிக்கப்பட்டது. VKJewels, GIA, Pratham, Unique Chains, SMR, Tanvi Gold Cast, Swarnshilp, JKS, OM Jewels மற்றும் பல பங்கேற்பாளர்களை இது உள்ளடக்கியது. மஹாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்திரப்பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் பல மாநிலங்களிலிருந்து பங்கேற்பாளர்களை இந்த கண்காட்சி கண்டது. U.S., UK, China, Hong Kong, Turkey, Middle East, Germany, Spain, Portugal போன்ற நாடுகளிலிருந்து சர்வதேச பங்கேற்பாளர்களை கண்காட்சி உறுதிப்படுத்தியது.
Jewellery & Gem Virtual Exhibitionல் தொழில்துறை வல்லுநர்களின் உரை
Mr. Saiyam Mehra, Director -
Gem & Jewelery Council; Co-Convener GJS; Convenor PMI
"Jewellery & Gem Virtual exhibition உண்மையிலே எங்களுக்கு மிகவும் பலனுள்ளதாக அமைந்தது. ஈ-சந்திப்பு மற்றும் கண்காட்சி வெப் போர்ட்டல் மிகவும் நுட்பமாக வடிவமைக்கட்டிருந்தது மற்றும் அது இணைப்பிற்கு உதவியது மற்றும் பயனுள்ள இணைப்புகளை உருவாக்கியது. கண்காட்சி மிகவும் புதுமையான ஒரு கருத்தாக அமைந்தது. அவற்றுடன், அறிவுத்தொடர்கள் மற்றும் தொழில்துறையிலிருந்து முக்கிய தலைப்புகள் மீதான வலைதள கருத்தரங்குகள் தொழில்துறையின் சமீபத்திய மற்றும் வரப்போகும் டிரென்டுகளை எங்களுக்கு காட்சிப்படுத்தின.''
Mr. Mahendra Tayal, President -
Hitech City Jewellery Manufacturers Association
"Informa Markets in India மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட ஆன்லைன் B2B நகை கண்காட்சி பல்வேறு துறைகளின் வாங்குபவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பங்குதாரர்களுக்கு சிறந்த காட்சிப்படுத்தலை வழங்கியது. எங்களது கண்காட்சியாளர்களை தூண்ட நாங்கள் சிறப்பாக HJMA ஹாலை வடிவமைத்திருந்தோம். ஒரே தளத்தின் கீழ் எங்களது வியாபாரத்தேவைகளை பூர்த்தி செய்யும் தனிப்பட்ட கண்காட்சியாக அது அமைந்தது."
Mr. Yogesh Singhal, President -
The Bullion & Jewellers Association, Delhi
"நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுடன் புதிய சாதாரண மாற்றமாக அது மாறிவரும் காலத்தில், நமது நகை வியாபாரமும் இந்த புதிய சாதாரண மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மற்றும் புதிய வியாபாரத்துக்கான சாத்தியங்களை நாம் திறந்துவிட வேண்டியுள்ளது. 19 ஆம்தேதி மற்றும் 20 ஆம்தேதி ஆகஸ்ட் மாதம் Informa Marketsஆல் ஒருங்கிணைக்கப்பட்ட Jewellery & Gem Virtual Exhibition நகைத் தொழில்துறையில் உள்ள ஒவ்வொருவரும் நமது தொழில்துறையில் புகுந்துள்ள புதிய தொழில்நுட்பத்தை தெரிந்து கொண்டு கற்றுக்கொள்ள உதவியது."
Informa Markets பற்றி
வியாபாரம், கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சி பெறுவதற்கான, தொழிற்சாலைகள் மற்றும் சிறப்பு சந்தைகளை Informa Markets உருவாக்குகிறது. எங்களது போர்ட்ஃபோலியோவில், ஹெல்த்கேர் & ஃபார்மாசூட்டிகல்ஸ், உட்கட்டமைப்பு, கட்டமைப்பு & ரியல் எஸ்டேட், ஃபேஷன் & ஆடை, ஹாஸ்பிடாலிட்டி, உணவு & பானங்கள் மற்றும் ஹெல்த் & ஊட்டச்சத்து உள்ளிட்ட சந்தைகளின் 550க்கும் அதிகமான சர்வதேச B2B நிகழ்ச்சிகள் மற்றும் பிராண்டுகள் அடங்கியுள்ளன. உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இணையவும் நேரடி கண்காட்சிகள் மூலம் வியாபாரம் செயயவும், டிஜிட்டல் கன்டென்டில் நிபுணராகவும் மற்றும் செயல்படு தரவு தீர்வுகளை வழங்கவும் செய்கிறோம். உலகின் முன்னணி கண்காட்சிகள் ஒருங்கிணைப்பாளராக, நாங்கள் பலவிதமான சிறப்பு சந்தைகளுக்கு உயிரூட்டுகிறோம் மற்றும் தளர்வு காலத்தின்போது பல வியாபார வாய்ப்புகளை வழங்குகிறோம் மற்றும் வருடத்தின் 365 நாட்களுக்கும் அவர்கள் இயங்க உதவிசெய்கிறோம். கூடுதல் தகவலுக்கு தயவுசெய்து www.informamarkets.com க்கு வருகை தரவும்.
Informa Markets மற்றும் இந்தியாவில் எங்களது வியாபாரம் பற்றி
உலகின் முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான Informa PLCக்கு சொந்தமானது Informa Markets. இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளரான Informa Markets in India (முன்னர் UBM India), சிறப்பு சந்தைகள் மற்றும் வாடிக்கையாளர் சமூகங்களுக்கு உதவவும், உள்ளூரிலும் உலகமெங்கும் வர்த்தகம் செய்யவும், கண்காட்சிகள் மூலமாக கண்டுபிடிக்கவும் மற்றும் வளர்ச்சியடையவும், டிஜிட்டல் கன்டென்ட் & சேவைகள் மற்றும் மாநாடுகள் & கலந்துரையாடல்களை வழங்கவும் செயல்படுகிறது. ஒவ்வொரு வருடமும் நாங்கள் 25க்கும் அதிகமான பெரிய அளவு கண்காட்சிகள், 40 மாநாடுகள் அவற்றுடன் தொழில்துறை விருதுகள் மற்றும் நாடெங்கும் பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துகிறோம். அதன்மூலம் பல தொழில்துறைகளுக்கு இடையே வர்த்தகத்தை தூண்டுகிறோம். இந்தியாவில், மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Marketsக்கு அலுவலகங்கள் உள்ளன. கூடுதல் விவரங்களுக்கு தயவுசெய்து https://www.informamarkets.com/en/regions/asia/India.html க்கு வருகை தரவும்
ஊடக கேள்விகளுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:
Roshni Mitra - [email protected]
Mili Lalwani - [email protected]
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1226082/Jewellery_and_Gem_Hyderabad.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1226081/Jewellery_and_Gem_Delhi.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1226083/JEWELLERYNET_LOGO.jpg
Share this article