அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கிலப் திறனை மேம்படுத்தும் "வாசிப்பு ஒளி - படி படி படி" திட்டத்தை அறிமுகப்படுத்தும் மைக்ரோலேண்ட் நிறுவனம்
கோயம்புத்தூர், இந்தியா, Dec. 2, 2022 /PRNewswire/ -- மைக்ரோலேண்ட் லிமிடெட் நிறுவனத்தின் பிரத்யேக சமூக மேம்பாட்டுப் பிரிவான , மைக்ரோலேண்ட் அறக்கட்டளை தமிழ்நாடு கல்வித் துறையுடன் இணைந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தாரா என்னும் ஒரு செயற்கை நுண்ணறிவு தளம் மூலம் தகவல்தொடர்பு ஆங்கிலத்தை கற்பித்து மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தாரா என்பது மனித மற்றும் இயந்திர கற்பித்தலின் சிறந்த திறன்களின் அறிவார்ந்த கலவையாகும், மேலும் இந்த தளத்தை தற்போது நீலகிரி மற்றும் பெங்களூரில் 2200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த ஆங்கில திறன் மேம்பாட்டுத் திட்டத்தை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் திரு. எஸ்.பி. அம்ரித், ஐஏஎஸ், திரு. சீனிவாசன் T R, தலைமை மக்கள் அதிகாரி, மைக்ரோலேண்ட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் திரு. ராஜ கோபாலன் எஸ், லேர்னிங் மேட்டர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் திரு ராமமூர்த்தி ஜி ஆகியோர் இணைந்து, காந்தி நினைவு மேல்நிலைப் பள்ளி (GMHSS), ஊட்டி தொகுதியில் உள்ள தூணேரி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (PUPS) மற்றும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தொகுதியில் உள்ள மிலிடேன் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் (GHS) 02 டிசம்பர் 2022 ஆண்டு "வாசிப்பு ஒளி - படிபடிபடி" திட்டத்தை துவங்கி வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் திரு. எஸ்.பி. அம்ரித், மாணவர்களின் அடிப்படைக் கற்றல் ஆண்டுகளில் எதிர்காலத் திறன்களை உட்பொதித்து, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்கள் முழுத் திறனையும் உணர்ந்துகொள்ளும் வகையில் மைக்ரோலேண்ட் அறக்கட்டளை கவனம் செலுத்துவதைப் பாராட்டினார். கல்வித் துறை, மைக்ரோலேண்ட் அறக்கட்டளை மற்றும் லேர்னிங் மேட்டர்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தனியார் மற்றும் பொது நிறுவன கூட்டாண்மை மாதிரியை அவர் பெரிதும் பாராட்டினார்.
மைக்ரோலேண்ட் லிமிடெட் தலைமை மக்கள் அதிகாரி திரு. சீனிவாசன் டிஆர் கூறுகையில், "உலகளாவிய டிஜிட்டல் உருமாற்ற நிறுவனமான மைக்ரோலேண்ட், அதன் நிறுவன நெறிமுறைகளில் 'கொடை கலாச்சாரம்' உட்பொதிக்கப்பட்டுள்ளது. "வாசிப்பு ஒளி - படிபடிபடி" திட்டம் என்பது அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் படிக்கும் பழக்கத்தை வளர்த்து, அவர்களின் ஆங்கிலப் புலமையை மேம்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட வாசிப்பு முயற்சியாகும். மைக்ரோலேண்ட் அறக்கட்டளை மற்றும் மைக்ரோலேண்ட் நிறுவன ஊழியர்களும் தங்கள் பங்களிப்புடன் இந்த முயற்சியை தாராளமாக ஆதரித்துள்ளனர், மேலும் இந்த திட்டத்தின் பலன்களை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதற்கு உறுதுணையாக இருந்த தமிழகக் கல்வித் துறைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.
மைக்ரோலேண்ட் லிமிடெட் நிறுவன இயக்குநர் திரு. ராஜ கோபாலன் எஸ், ஆங்கில திறனை மேம்படுத்தும் "வாசிப்பு ஒளி - படிபடிபடி" திட்டம் குறித்து விளக்கி கூறுகையில், "புத்தகங்கள் மற்றும் வகுப்பு செயல்பாடுகள், தாரா செயற்கை நுண்ணறிவு தளத்துடன் ஒத்திசைக்கப்படும் வகையில் கற்றல் நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சர்வதேச மற்றும் உன்னதமான இந்தியக் கதைகளின் தொகுப்பு, இருமொழி நூலக கையேடு, பேட்ஜ்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் ஆகியவை மாணவர்களை மேலும் படிக்கத் தூண்டுவதற்கும் போட்டி உணர்வை உருவாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களிடையே விநியோகிக்கப்படும் பேட்ஜ்கள் 3 நிலைகளுடன் அங்கீகாரத்தின் அடையாளமாக செயல்படும் - ஒவ்வொரு நிலையும் ஒவ்வொரு மாணவரின் வாசிப்புத் திறனைக் குறிக்கும் என்று கூறினார்.
மைக்ரோலேண்ட் அறக்கட்டளை நீலகிரி மாவட்டத்தில் பல முயற்சிகளுடன் தனது இருப்பை நிலைநிறுத்தியுள்ளது, மேலும் கல்வியாளர்கள், கார்ப்பரேட் நிதியளிப்பவர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோரின் கூட்டாண்மையை, பலனளிக்கும் நீண்ட கால ஒத்துழைப்பாக உருவாக்க அழைப்பு விடுத்துவருகிறது. இந்த அறக்கட்டளை நீலகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கற்றல் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்குவதன் மூலம் கல்வி நிலையை மேம்படுத்துவதில் முன்னணியில் உள்ளது.
மைக்ரோலேண்ட் பற்றி
மைக்ரோலேண்டின் "மேக்கிங் டிஜிட்டல் ஹேப்பன்" தொழில்நுட்பம், தொழில்நுட்ப திறனை அதிகரிக்கவும் குறைவாக ஊடுருவவும் வழிவகை செய்கிறது. நிறுவனங்கள் அடுத்த தலைமுறை டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பின்பற்றுவதை நாங்கள் எளிதாக்குகிறோம். கிளவுட் மற்றும் டேட்டா சென்டர்கள், நெட்வொர்க்குகள், டிஜிட்டல் பணியிடம், சைபர் செக்யூரிட்டி மற்றும் இண்டஸ்ட்ரியல் ஐஓடி ஆகியவற்றில் எங்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சேவைகள் நம்பகமானது மற்றும் நிலையானது என்பதை உறுதிசெய்கிறோம்.
கோவிட் 19 பாதிப்புக்குள்ளான உலகில், முன்னெப்போதையும் விட எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் வாய்ப்புகளுக்கும் மிகவும் பொருத்தமான சேவைகளை மையமாகக் கொண்டு நிறுவனங்களுக்காக மைக்ரோலேண்ட் டிஜிட்டல் நிகழ்வை உருவாக்குகிறது. 1989 இல் தொடங்கப்பட்டு, இந்தியாவின் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட மைக்ரோலேண்ட், ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்காவில் உள்ள அலுவலகங்கள் மற்றும் விநியோக மையங்களில் 5,000 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் நிபுணர்களைக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு: https://www.microland.com/
மைக்ரோலேண்ட் அறக்கட்டளை பற்றி
மைக்ரோலேண்ட் அறக்கட்டளை ஒரு அர்ப்பணிப்புள்ள சமூக மேம்பாட்டுப் பிரிவாக நிறுவப்பட்டுள்ளது, சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சினைகளைத் தீர்வளிக்கும் திட்டங்களை கருத்தாக்கம் செய்து செயல்படுத்த அர்த்தமுள்ள கூட்டாண்மைகளை உருவாக்குகிறது. இதன் புகழ்பெற்ற தொழில் வல்லுநர்களின் பெருநிறுவன சமூக பொறுப்பு குழு, அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகளில் அர்ப்பணிப்புள்ள பணியாளர்களுடன் இணைந்து ஆழமான வளர்ச்சித் துறை நிபுணத்துவம் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை கொண்டு வருகிறது. பிரச்சினைகள் மற்றும் துறைகளுக்கு நீண்டகால அர்ப்பணிப்பை உறுதியளிக்கும் அதே வேளையில், கீழ்நிலை மற்றும் கூட்டு அணுகுமுறையுடன் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். மைக்ரோலேண்ட் அறக்கட்டளையின் அனைத்து சமூக நடவடிக்கைகளும் மைக்ரோலாண்டின் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளின் மையத்தில் சமூகத்தை வைத்து செயல்படுத்தப்படுகிறது.
Photo 1: https://mma.prnewswire.com/media/1960550/Inauguration_Reading_Light.jpg
Photo 2: https://mma.prnewswire.com/media/1960549/Book_Collection_Reading_Light.jpg
Photo 3: https://mma.prnewswire.com/media/1960551/Stickers_with_Levels_Reading_Light.jpg
Logo: https://mma.prnewswire.com/media/1343841/Microland_Logo.jpg
Share this article