ஆண்டின் சிறந்த பல் மருத்துவர் விருதை Acharya Dental பெறுகிறது
சென்னை, ஜனவரி, January 24, 2019 /PRNewswire/ --
- 1974 முதல் சென்னையில் உள்ள பல தலைமுறைகளாக பல் நோயாளிகளின் நம்பிக்கையைப் பெற்ற பல் மருத்துவமனையாக Acharya Dental விளங்குகிறது.
- இதன் தலைமை மருத்துவரான Dr. Vijailakshmi Acharya, இந்தியாவில் இம்பிளான்ட் மற்றும் காஸ்மெடிக் டென்டிஸ்ட்ரியின் முன்னோடிகளில் ஒருவராவார். & Dr. Varun Acharya இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க போர்டினால் சான்று பெற்ற ஒரே மாக்சில்லோஃபேசியல் பிராஸ்தோடான்டிஸ்ட் (Maxillofacial Prosthodontist) மருத்துவராவார்.
- பல்வேறு ஒற்றைத் தலைவலிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தாடை இணைப்பு வலிகள், குறட்டை விடுதல் மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் எற்படுவது பற்றி ஆய்வு செய்ய மற்றும் சிகிச்சை அளிக்க முதன்முதலில் அங்கீகரிக்கப்பட்டுள்ள பல் மருத்துவ குழுக்களில் ஒன்றாக இது விளங்குகிறது.
வாய் ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த உடல்நலத்திற்கும் மிக முக்கியமான அம்சமாக உள்ளது என Acharya Dental நம்புகிறது. மிகச்சிறந்த சிகிச்சை திட்டத்திற்கு மிகச் சமீபத்திய மற்றும் மருத்துவத்துடன் தொடர்புடைய சான்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த பல் மருத்துவமனை பல்வேறு விருதுகளால் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
(Photo: https://mma.prnewswire.com/media/807151/Acharya_Dental_Foundation.jpg )
- ஆண்டின் எம்பவர்டு விமன் டென்டிஸ்ட்டுக்கான இந்திய பல்மருத்துவ சங்கத்தின் Sushruta விருதை, Dr. Vijailakshmi Acharya பெற்றார். பல் ஆரோக்கியத்துறையில் அவர் ஆற்றிய அளப்பரிய சேவைக்காக இந்த விருதை மஹாராஷ்டிராவின் கவர்னர், மேதகு Vidyasagar Rao அவர்களிடமிருந்து பெற்றார்.
- SKDB Association-டமிருந்து 'The Doyen of Dentistry' என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- 2018-ஆம் ஆண்டுக்கான 'ஆண்டின் மிகச்சிறந்த பல்மருத்துவர்' ('Outstanding Dentist of the Year') என்ற விருதை புகழ்பெற்ற Famdent Excellence in Dentistry Awards 2018- இடமிருந்துDr. Varun Acharya பெற்றுள்ளதோடு "ஆண்டின் சிறப்பு பல் மருத்துவர் பிராஸ்தோடான்டிஸ்ட்" ('Specialist Dentist of the Year - Prosthodontist') விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
- அவர் Chennai Healthcare Leadership விருதுதினையும் பெற்றுள்ளார்.
Acharya Dental தங்களுடைய சிறப்பு நிபுணர்கள் மற்றும் பொது பல்மருத்துவர் குழுவுடன் தான் பெற்றுள்ள விருதுகளை பகிர்ந்து கொள்கிறது. "சிறப்பானவர்களின் அங்கீகாரத்தைப் பெறுவது என்பது அதிக ஊக்கமளிப்பதாக உள்ளதோடு, இன்னும் அதிக கடின முயற்சிகளை எடுக்கவும் எமது திறன்களை தொடர்ந்து மேம்படுத்தவும் தூண்டுவதாக உள்ளது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தொடர் கல்வித் திட்டங்கள் தொடர்ந்து மாறிவரும் பல் மருத்துவத்துறையின் சூழலுக்கேற்ப நமது அறிவையும் திறன்களையும் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள உதவுகின்றன" என்கிறார் Dr. Varun.தொடர்கல்வியின் மீதும் கற்பித்தலின் மீதும் கவனம் செலுத்தும் Acharya Dental குழு சில சுவாரசியமான சர்வதேச திட்டங்களை சமீபத்தில் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.
- Roseman University, USA, Dr. Davis Thomas of Rutgers University, New Jersey, USA ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது "டெம்பெரோமேன்டிபுலார் கோளாறுகள் (Temperomandibular Disorders), ஓரோஃபேசியல் வலி (Orofacial Pain), குறட்டை விடுதல் மற்றும் தூங்கவிடாமல் செய்யும் மூச்சுத்திணறல் (Obstructive Sleep Apnea)"
- Versah LLC, USA-வினால் நடத்தப்படும் "இம்பிளான்ட் டென்டிஸ்ட்ரிக்காக எலும்பின் தரத்தையும் அளவையும் மேம்படுத்துவதற்கான ஒரு புரட்சிகரமான முறையான Osseodensification"
- ஜெர்மனியில் உள்ள Bredent குழுவினால் நடத்தப்படும் செயற்கை பல் சீரமைப்பு கொண் டு உடனடி உட்பொருத்தப்பட்டவற்றை மீட்டல் (இம்பிளான்ட் ரெஸ்டோரேஷன்ஸ்).
- அமெரிக்காவில் உள்ள Nobel Biocare ன் சார்பாக Dr. Kenji Higuchi -ஆல் நடத்தப்படும் டிரெஃபாய்ல் சிஸ்டத்தின் இன்றியமையாதவைகள் (Essentials of the Trefoil system).
- Bio Horizons Global Education Tour, Dr. Dennis Tarnow ல் நடத்தப்படும்.
- Spain, Ponferrada வில் உள்ள Dr. Ramón Gómez Meda னால் நடத்தப்படும் Vertical Bone Regeneration & Soft Tissue Management
"Acharya Dental Foundation நாடு முழுவதும் இருக்கும் பல் மருத்துவர்களுக்கான பல்மருத்துவ கல்வியை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறது. நம்முடன் வேலை செய்பவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை மேம்படுத்த நமது உலகத்தரம் வாய்ந்த மாநாட்டு அறை மற்றும் லைவ் அறுவை சிகிச்சை வசதிகளைப் பயன்படுத்தும் நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்து வேலை செய்கிறோம். டென்டல் இன்பிளான்டோலாஜி, கைடட் இம்பிளான்ட் சர்ஜரி, அட்வான்ஸ்ட் பிராஸ்தெடிக் சொலூஷன்ஸ் மற்றும் அட்வான்ஸ்டு போன் கிராஃப்டிங் சொலூஷன்ஸ் பற்றிய பயிற்சிகளை வழங்குவதற்கு பல சர்வதேச நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்து செயலாற்றுகிறோம்" என்று Dr. Vijailakshmi Acharya விளக்கினார்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மேம்பட்ட பல் பராமரிப்பினை வெற்றிகரமாக வழங்கிவரும், Acharya Dental குழுவானது, நீங்கள் புன்னகைக்க நவீன, திறன் வாய்ந்த பல்மருத்துவ சேவைகள் மீது கவனம் செலுத்தி வருகிறது.
Acharya Dental பற்றி:
Dr. Vijailakshmi Acharya அவர்களால் கடந்த 1974-ஆம் ஆண்டு Acharya Dental நிறுவப்பட்டது. பதினான்காயிரம் சதுர அடியில் நகரின் மையத்தில் அமைந்துள்ள நுங்கம்பாக்கத்தில் உள்ள Acharya Dental மிகவும் சுத்தமான, மனதிற்குகந்த மற்றும் சுகாதாரமான சுற்றுப்புறத்தில் பதினாறு திறமை வாய்ந்த பல் அறுவை சிகிச்சை அறைகளைக் கொண்டு செயல்படுகிறது. மேற்கத்திய தொழில்நுட்பத்தையும் கிழக்கத்திய திறமைகளையும் கொண்ட பல் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது பல் மருத்துவர்களும் அடங்கிய குழு நோயாளிகளை வரவேற்கிறது. உயர் தரமான பல் மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்காக, Acharya Dental-ல் அனைத்து வசதிகளும் கொண்ட பல் ஆய்வகம், 2D/3D இமேஜிங் தொழில்நுட்பம், மற்றும் மிகச் சமீபத்திய CAD/CAM கருவிகள் உள்ளன. கூடுதல் தகவலுக்கு, https://www.acharyadental.com என்ற எமது வலைதளத்தைப் பார்க்கவும்.
Share this article