314-படுக்கைகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையத்தை அமைக்க Pune Municipal Corporation உடன் இணைந்துள்ள Panchshil Realty Partners
பூனா, இந்தியா, Aug. 21, 2020 /PRNewswire/ -- பூனாவின் Banerல் கோவிட் சிகிச்சைக்கென தனிப்பட்ட மையத்தை அமைக்க Pune Municipal Corporation (PMC) உடன் தனது CSR பிரிவான Panchshil Foundation கூட்டிணைந்துள்ளதை Panchshil Realty இன்று அறிவித்தது.
இந்த மையத்தில் 270 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் 44 வென்டிலேட்டர்/ஐசியு படுக்கைகள் இருக்கும்.
சி2 ரிசர்வேசன் டெவலப்மென்ட்டின் ஒரு அங்கமாக, Panchshil Realtyஆல் ஒட்டுமொத்தமாக கட்டப்பட்ட 6 தளங்கள் கொண்ட 48,000 சதுர அடி பரவியிருக்கும் இந்த அற்புதமான தயார்நிலையில் உள்ள கட்டிடம், Pune Municipal Corporation இடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
PMCன் வழிகாட்டுதல்களின்படி ஒட்டுமொத்த கட்டிடத்தின் உட்புறங்களை Panchshil Foundation மறு வடிவமைப்பு செய்துள்ளது மற்றும் பின்வரும் அத்தியாவசிய மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களையும் வழங்குகிறது :
- ஆக்சிஜன் சேமிப்பு உள்ளிட்ட துணை அவசிய உபகரணங்களுடன் ஒட்டுமொத்த மையத்திற்காக 2கிலோமீட்டர்கள் வரையில் ஆக்சிஜன் பைப்பிங்.
- பிரிவுகளுடன் கூடிய 270 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் நர்சிங் ஸ்டேஷன்கள் போன்ற அவசிய உபகரணம்.
- ஒட்டுமொத்த ஐசியு பிரிவிற்கான ஏர் கண்டிஷனிங் உள்ளிட்ட அவசிய மருத்துவ உபகரணத்துடன் 44 ஐசியு படுக்கைகள்.
- அரசாங்க வழிகாட்டுதல்களின்படி மற்ற உட்புற வேலைகள்.
Atul Chordia, Chairman, Panchshil Realty இந்த கூட்டிணைவைப் பற்றி கூறுகையில், " இந்த நேரத்தில், நகரத்தின் சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் அதிகளவிலான உயிர்களை நம்மால் காப்பாற்ற இயலும்" .
"பொறுப்புள்ள பெருநகர குடிமகனாக , நாங்கள் இந்த ஆபத்துகாலத்தை கடப்பதற்கு அத்தியாவசியாமன மருத்துவ உட்கட்டமைப்பை அமைக்க உதவ PMC உடன் இணைந்து பணிபுரிகிறோம்" என்று தெரிவித்தார்.
கோவிட் -19 தொற்றுநோய் பரவத்தொடங்கியதிலிருந்து Panchshil Foundation ஆல் எடுக்கப்பட்ட முயற்சிகளின் வரிசையில் Pune Municipal Corporation உடன் இந்த கூட்டிணைவானது சமீபத்திய நடவடிக்கையாகும். இதுவரை Panchshil Foundation பின்வரும் உதவிகளை வழங்கியுள்ளது :
- கொரோனாவைரஸ் பரவலின் காரணமாக அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்ட பிறகு எந்த வித வருமானமும் இல்லாத தினசரி கூலித்தொழிலாளர்களுக்கு அடிப்படைத்தேவையான ரேஷன் பொருட்களான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் முட்டை அடங்கிய 40,000க்கும் அதிகமான உணவுப்பைகளை வழங்கியது.
- கோவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் சமூக அளவில் மக்களிடையே தொற்றுப்பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கைகள் எடுப்பதைப் பற்றியும் National Disaster Response Force (NDRF)ன் பூனா-5th Battalion உடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் சமூகங்களில் சமுதாய விழிப்புணர்வு முகாம்களை நடத்தியது
- பூனாவில் கோவிட்-19 நோயாளிகளை கையாளும் மருத்துவ நபர்களுக்காகவும் பாதிக்கப்பட்டவரின் உடல்களை அகற்றுவதற்கு PMCக்காகவும் 15,000க்கும் அதிகமான Personal Protection Equipment (PPE) கிட்டுகளை வழங்கியது.
British Safety Council மூலம் அறிவுறுத்தப்பட்ட கடுமையான உலக பாதுகாப்பு தரநிலைகளின்படி, சமீபத்தில் Panchshil Realty இந்தியாவிலும் மற்றும் ஒட்டுமொத்த ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலும், தனது அலுவலக பூங்காக்களில் கோவிட் -19 தொடர்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்தி மற்றும் தற்சார்பாக சரிபார்த்த முதல் மற்றும் ஒரே ரியல் எஸ்டேட் குழுவாக மாறியது.
EON Free Zone, World Trade Centre, Business Bay மற்றும் Allianz, Citibank, Cognizant, Concentrix, Credit Suisse, Deutsche Bank, HSBC, MasterCard, Michelin, T-Systems, UBS, VMWare மற்றும் Vodafone போன்ற முன்னணி உலக பெருநிறுவனங்களின் இல்லமாக விளங்கும் International Convention Centre மற்றும் அதன் வளாகங்கள் போன்ற முக்கிய புராஜெக்டுகள் பூனாவில் உள்ள Panchshil Realtyன் அலுலவக போர்ட்ஃபோலியோவில் அடங்கியுள்ளன.
Panchshil'ன் வியாபாரங்கள்- முக்கிய சிறப்பம்சங்கள்
- Panchshil Realty 23 மில்லியன் சதுர அடி ரியல் எஸ்டேட் போர்ட்ஃபோலியோவை பூர்த்தி செய்துள்ளது மற்றும் 20மில்லியன் சதுர அடி வளர்ச்சியின் கீழ் உள்ளது.
- வர்த்தக அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்ட Panchshil Realty'ன் மூன்று முக்கிய வர்த்தக பிரிவுகள்
- Panchshil Realty அலுவலக போர்ட்ஃபோலியோவின் குறிப்பிடத்தக்க பிரிவு, Blackstone Group LP மூலம் நிதியளிக்கப்படும் மற்றும் நிர்வகிக்கப்படும் Blackstone Real Estate Private Equity Fundஆல் ஆதரவளிக்கப்பட்டுள்ளது.
Panchshil Realty பற்றி
2002ல் உருவாக்கப்பட்ட Panchshil Realty இந்தியாவின் மிகச்சிறந்த சொகுசு ரியல் எஸ்டேட் பிராண்டுகளில் ஒன்று. ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் தலைமையாகவும் சிறந்தும் விளங்கும் இந்த குழுவின் அணுகல், வடிவமைப்பு மற்றும் கட்டிட அமைப்பு மூலமாக திட்டமிடப்பட்ட வளர்ச்சியிலும், மதிப்புமிக்க சொத்துகளை உருவாக்குவதிலும் மற்றும் வாழ்க்கைமுறை அனுபவங்களை வடிவமைப்பதிலும் கவனம் கொண்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு தயவுசெய்து www.panchshil.comக்கு வருகை தரவும்
Logo - https://mma.prnewswire.com/media/1042836/Panchshil_Realty_Logo.jpg
Share this article