தமிழக நாட்டில் பாரத்நெட் லாஸ்ட் மைல் கனெக்டிவிட்டி திட்டத்திற்கான பிராட்பேண்ட் உபகரண சப்ளையராக தேஜாஸ் நெட்வொர்க்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, இந்தியா, Dec. 6, 2024 /PRNewswire/ -- தேஜாஸ் நெட்வொர்க்ஸ் (பிஎஸ்இ: 540595) (என்எஸ்இ: தேஜாஸ்நெட்) இந்த நிறுவனம், மத்திய அரசுக்கு சொந்தமான பாரத்நெட் லாஸ்ட் மைல் கனெக்டிவிட்டி (எல்எம்சி) திட்டத்திற்கு தமிழ்நாட்டில் இத் தொழில்துறையில் முன்னணியில் உள்ள ஜிபிஓஎன் ஓஎல்டி , ஓஎன்டி மற்றும் மேலாண்மை அமைப்பை வழங்குவதாக இன்று அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் பாலிகேப் இந்தியா லிமிடெட் (பிஐஎல்) ஐ மாஸ்டர் சிஸ்டம் இன்டெக்ரேட்டர் ஆகக் கொண்டு தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட சிறப்பு நோக்க வாகனமான (எஸ்பிவி) டான்ஃபிநெட் (தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட்) ஆல் செயல்படுத்தப்படுகிறது.
பாரத்நெட் எல்எம்சி திட்டம், கிராம பஞ்சாயத்து/ஊராட்சி ஒன்றியம்/மாவட்ட அளவில் அண்மையில் உள்ள பாரத்நெட் தளத்தில் இருந்து சுமார் 50,000 அரசு நிறுவனங்கள், பொது சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகளுக்கு மலிவு விலையில் அதிவேக இணைப்பை விரிவுபடுத்த முயல்கிறது. மேலும், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் டெலிகாம் சேவை வழங்குநர்களுடன் கூட்டு சேர்ந்து தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற வீடுகளுக்கு எஃப்டிடிஎச் (ஃபைபர் டு ஹோம்) சேவையை வழங்க எல்எம்சி உள்கட்டமைப்பு பயன்படுத்தப்படும்.
தேஜாஸ் நெட்வொர்க்கின் சிஓஓ மற்றும் செயல் இயக்குநரான திரு. அர்னோப் ராய், "இந்த மதிப்புமிக்க திட்டத்திற்கான முதன்மை பிராட்பேண்ட் உபகரண வழங்குநராக நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் மாடுலர், என்டர்பிரைஸ் கிரேடு தரமான சேவை மற்றும் மீள்தன்மை அம்சங்களை வழங்கும் அம்சம் நிறைந்த மற்றும் எதிர்காலத்துக்கும் ஏற்ற போர்ட்ஃபோலியோவான மல்டி-கிகாபிட் ஜிபிஓஎன்/எக்ஸ்ஜிஎஸ்-பிஓஎன் தயாரிப்புகள் இவற்றுடன், தேஜாஸ் ஆனது, உள்நாட்டு மற்றும் சர்வதேச எஃப்.டி.டி.எச் வெளியீடுகளுக்கான விருப்பமான தொழில்நுட்ப பங்காளியாக உருவாகி வருகிறது."
தேஜாஸ் நெட்வொர்க்கின் துணைத் தலைவர்- விற்பனை திரு. சுனில் ஹாண்டூ கூறுகையில், "டான்ஃபிநெட்டின் பாரத்நெட் எல்எம்சி திட்டம் தமிழ்நாட்டின் கிராமப்புற குடிமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் அதிவேக பிராட்பேண்டின் உண்மையான பலன்களை அனுபவிக்கவும், அவர்களின் சமூக மற்றும் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும். தொலைத்தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் துறையில் முன்னணி ஐபிஆர் மற்றும் ஆர்&டி சார்ந்த நிறுவனம் என்ற முறையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சிக்கலான, உயர் செயல்திறன் நெட்வொர்க்குகளை வெற்றிகரமாக வழங்குவதில் எங்களுக்கு விரிவான அனுபவம் உள்ளது. இறுதிப் பயனர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பிராட்பேண்ட் சேவை அனுபவத்தை உறுதி செய்வதற்காக அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என்று கூறினார்.
தேஜாஸ் நெட்வொர்க்ஸ் லிமிடெட் பற்றி
தேஜாஸ் நெட்வொர்க்ஸ் லிமிடெட் ஆனது 75 க்கும் மேற்பட்ட நாடுகளில் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள், இணைய சேவை வழங்குநர்கள், பயன்பாடுகள், பாதுகாப்பு மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கான உயர் செயல்திறன் கொண்ட கம்பி இணைப்பு மற்றும் கம்பியில்லா நெட்வொர்க்கிங் தயாரிப்புகளை வடிவமைக்கிறது மற்றும் உற்பத்தி செய்கிறது. தேஜாஸ் நெட்வொர்க்ஸ் லிமிடெட் டாடா குழுமத்தின் ஒரு பகுதியாகும், இதில் பனாடோன் ஃபின்வெஸ்ட் லிமிடெட் (டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் துணை நிறுவனம்) பெரும்பான்மை பங்குதாரராக உள்ளது.
மேலும் தகவலுக்கு, தேஜாஸ் நெட்வொர்க்ஸ் லிமிடெட் ஐ http://www.tejasnetworks.com இல் பார்வையிடவும் அல்லது
முதலீட்டாளர் உதவி மையத்தை [email protected] இல் தொடர்பு கொள்ளவும்.
பாதுகாப்பான துறைமுகம்
இந்த வெளியீட்டில் உள்ள எங்கள் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் தொடர்பான சில அறிக்கைகள், எதிர்காலத்தில் நிகழக் கூடியவை பற்றிய அறிக்கைகளாகும், அது பல அபாயங்கள் மற்றும் எங்கள் உத்தி மற்றும் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்கள், தொழில்நுட்ப மாற்றங்கள், எங்களது சந்தை அபாயங்களுக்கான வெளிப்பாடு, எங்கள் வணிக நடவடிக்கைகள் அல்லது முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியாவின் பொதுவான பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள், இந்த நிறுவனம் செயல்படும் தொழில்துறைக்குப் பொருந்தும் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் இவை மட்டும் என்ற வரையறை இன்றி பிறவும் உள்ளடங்கியவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தும் திறன் மற்றும் எங்கள் எதிர்பார்ப்புகளுடன் தொடர்பு கொண்ட அத்தகைய எதிர்காலத்தில் நிகழக் கூடியவை பற்றிய அறிக்கைகளில் உள்ளவற்றிலிருந்து உண்மையான முடிவுகள் பொருள் ரீதியாக வேறுபடக்கூடிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளை உள்ளடக்கியதாகும். எதிர்காலத்தில் நிகழக் கூடியவை பற்றிய எந்தவொரு அறிக்கைகளையும் நிறுவனம் அல்லது அதன் சார்பாக எவரும் அவ்வப்போது வெளியிடுவதை நிறுவனம் மேற்கொள்ளாது.
லோகோ: https://mma.prnewswire.com/media/826177/4936143/Tejas_Networks_Logo.jpg
Share this article